|
கண்டார்; விளங்கும்
பொன்மலை ஒன்று வெள்ளிக்குன்றின் மேலே
அழகுற விளங்கியதென்னும்படி தன்றுணைவியாகிய உமையம்மையாருடன்
ஆகாயத்திலே தலைவனை இடபவாகனத்தின் மேலே கண்டார்; கண்டதும்
நின்றாரிலர்; நிலத்தில் வீழ்ந்து அவரைத் தொழுதார்; பின்னர் எழுந்தார்;
அதன் பின் அவரைத் துதிக்க முற்பட்டாராகி,
435. (இ-ள்.)
வெளிப்படை. “தேவரீரைத் துதித்துச் சொல்வதின்ன
தென்று அறியேன்; நீர் செய்த திருவருள் வாழக்கடவது; எனக்காகத்
தோற்றிய தோற்றம் போற்றப் பெறுவது; விரைவாக வந்துஅருள் செய்து
எளியேனை உமது வழியடியனாக ஆட்கொண்டீர்
- அச்செயல்
போற்றப்பெறுவது; எல்லையில்லாத பேரின்ப வெள்ளத்தை எனக்குத் தந்து
அருளிச் செய்தீர் - அச்செயல் போற்றப்
பெறுவது; தில்லையம்பலத்திலே
திருக்கூத்தாடுகின்ற தேவரீரது சேவடிகள் போற்றப்பெறுவன“
என்று துதிக்க. 32
436. (இ-ள்.)
வெளிப்படை. ஆகாயத்திலே நின்ற வெள்ளை
விடையினை உடையாராகிய இறைவர் தமது அடியவராகிய நாயனாரை
நோக்கி “எண்ணிய உலகிலே இவ்வாறு நம்மிடம் நீ செலுத்திய
அன்பினைக் கண்டு மகிழ்ச்சி யடைந்தோம். குற்றமில்லாதவனே!
நண்ணிய மனைவியுடனே நம்முடன் போதுவாயாக!“ என்று அருளிச்
செய்தது. 33
437. (இ-ள்.)
வெளிப்படை. அருட்டிரு வளர்கின்ற சிறப்பு மிகுந்த
திருத்தொண்டருக்கும், தேற்றமுடைய தெய்வக்கற்பிற் சிறந்த
மனைவியார்க்கும் தக்கவாறு பெருகிய அருளில் நீடுகின்ற முத்திப்பேற்றினை
அளித்து, அதன் பின், இவ்வருளின் திறத்தினைத் தேவர்கள் துதி செய்ய,
அவ்விடப்பாகராகிய இறைவர்தாம் என்றும் நிலைத்திருக்கின்ற தமது
சிதாகாய நிறைவாகிய பொன்னம்பலத்தினுள்ளே எழுந்தருளினார். 34
இந்நான்கு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.
சென்றவர் - காணார்; - கண்டார்;- நின்றிலர்;- எழுந்தார்; வீழ்ந்தார்-
சேர்ந்தார் (ஆகி) - “அறியேன் - வாழி - போற்றி - போற்றி - போற்றி
-
போற்றி“ என்ன - விடையவர் - அடியார் தம்மை (நோக்கி) “மகிழ்ந்தனம்
- பழுதிலாதாய்! - போதுக“ என்று (அருளி) அந்தப் - பொதுவதனுட்
புக்கார் எனத் தொடர்ந்து முடித்துக் கொள்க.
434. (வி-ரை.)
சென்றவர் - வந்தெய்திய இயற்பகையார்.
முனி -
இறைவர்.
பொன் திதழ் பொருப்பு
- இறைவன். பொன் வண்ண மேனியன்
என்பதாம். பொருப்பு - இறைவனது பேருருவூக்கு
உவமை.
வெள்ளிக் குன்று -
குன்று போலப் பெரிய வெள்ளை விடை.
“வெள்ளிக் குன்றம் தன்வண்ண மெவ்வண்ண மவ்வண்ண மால்விடை“ -
(பொன்வண்ணத் தந்தாதி - 1) “தூய நீறு பொன் மேனியில் விளங்க“ (407
என) க்கூறிய வேதியர் வண்ணமே, இங்கு விடைமேல் வந்த
வண்ணமாதலின் பொன்றிகழ் - என்றார். பொருப்பு
- பெருமலை; குன்று
அளவிற் சிறிய மலை. இறைவனுக்கும் விடைக்கும் தகமுறையே போந்த
உவமைகள். பவளமே இறைவனது நிறம் என்பர். “வெள்ளி வெற்பின்மேன்
மரகதக் கொடியுடன்
விளங்குந்; தெள்ளு பேரொளிப் பவள வெற்பென“ -
(திருநாவு - புரா - 379) ஆயின் இங்குப் பொன்றிகழ் பொருப்பு என்ற
தென்னை யெனின், “பவளம் போல் மேனியிற் பால் வெண்ணீறும்“ -
(திருவிருத்தம் - கோயில்) “பவளமே திருவுடம் பதனிற்றவளமே களபம்“
-
திருவிசைப்பா - கருவூரர் - களந்தை - 5) என்ப ஆதலின் செந்நிறத்தின்
மேல் விளங்கும் வெண்மை அதனை ஒருவகைப் பொன்மை யாக்கும்
என்பது நிறங்களின் தொகுதிப் பண்பாம். செம்பொன்
- என்னும் வழக்கும்
காண்க. நாயனாரை வசீகரித்தது அவரது பொன்மேனியில் விளங்கிய
தூயநீறே (407) ஆதலின் அதனையே இங்குக் குறித்தார்.
|