பக்கம் எண் :


562 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam

     மற்றல்லதொன்றறியேன் - முன்னர் மற்றொன்றுங் காண்கிலேன்
என மேற்பாட்டிற் றொடங்கிய மனைவியார் அதனையே அனுவதித்து
மேற்கேள்விக் கிடமின்றி முடித்துக் காட்டியவாறு. அயர்வுற - வருந்த -
அடியார்க் கமுதளிப்பதில் இவ்வாறு நேரிட்ட குறைபாடுடைய தமது நிலை
குறித்து வருந்தினார்.  13

     453. (வி-ரை.) மற்று அம்மாற்றம் - இதனைத் தவிர மற்ற ஒன்றும்
வழி காண்கிலேன் என்று மனைவியார் முடித்துக் கூறிய மொழி.

     முன் பெற்ற செல்வம் - முன்னே தேடி வைத்தமையால் இப்போது
பெற்ற செல்வம். கொடுத்து வைத்திருந்த செல்வம் என்பது வழக்கு.
முன்பெற்ற செல்வம் என இதற்கு முன் தாம் பெற்றிருந்த செல்வ நிலை
மீண்டும் பெற்றாற்போல என்பாரு முண்டு. உண்மகிழ்ந்து - உபாயம்
அறிந்தமையால் உளத்தில் மகிழ் சிறந்தார். உற்ற காதலினால் -
அடியாரிடத்துப் பொருந்த வைத்த ஆசையினால்.

     ஒருப்பட்டனர் - ஒருமைப்பட்ட மனத்தினராகிய நாயனார். இதனை
வினைமுற்றாக்கித், தொடங்குவார் ஒருப்பட்டனர் என முடிப்பாரு முண்டு.

     சுற்று நீர் வயல் - சூழ்ந்த நீரையுடைய வயல். சுற்று தீர் -
வினைத்தொகை.  14

     454. (வி-ரை.) வானம் பிறங்கப் பெருகு மழை பொழிந்து என
மாற்றி உரைத்துக்கொள்க.

     வானம் - ஆகாயம். வானம் பிறங்க மழை பொழிதலாவது
ஆகாயவெளி முற்றும் மின்னிச் செறிந்து மழை பொழிதல். வானம் -
மேகம் எனக் கொண்டு பெருமேகங்கள் மிக மழை பெய்த என உரைப்பாரு
முண்டு. பொழிந்து - பொழிதலால். அருகு - நாப்பண - உம்மைத்
தொகை. அருகும் நாப்பண்ணும் என விரிக்க. அருகு - பக்கம். நாப்பண்
- இடை. அறிவரும் கங்குல் - இது நேர்வழியென்றும் இதுபக்கம் என்றும்,
இது வழி என்றும், இது குழி என்றும் அறியக்கூடாதபடி இருள்செறிந்த
இரவு. இருள் - உவமானத்துக்கேற்ப வருவித்தமைத்துக் கொள்க.

     கருகும் மையிருளின்கணங் கட்டுவிட்டுருகுகின்றது போன்றது.
கருகும்
-கருமையைச் செய்கின்ற; கருமையையுடைய. மையிருளின்
கணம
- மைபோன்ற கருமைச் செறிவுடைய இருட்கூட்டம். மையும்,
கருமையும், கணமும் ஆகிய மூன்று அடைமொழிகளுங் கூடி, இருள்
என்னும் ஒரு பொருள் வேறொன்றும் தன்னுள் நுழையாதபடி கட்டியாய்ச்
செறிந்த தன்மையைக் குறித்தன.

     செறிந்தும் - இளகியும் - வியாபித்தும் உள்ள தன்மைகளினாலே
பொருள்கள் மூன்று நிலைகளை அடையும் என்று பௌதிக நூலார் கூறுவர்.
இவற்றைப் பனிக்கட்டி - தண்ணீர் - நீராவி என, நீர் என்றதொரு
பொருளே முறையே கட்டி நிலை - உருகியநிலை - ஆவியாகிய நிலை
யுறுவதிற் காட்டுவர். இங்கு மேற்கூறிய மூன்று அடைமொழிகளினாலே
முறையே இருளின் பரந்த நிலையும், குறுகிய நிலையும், இறுகிய நிலையும்
குறிப்பிட்டவாறு காண்க. அடுத்த பாட்டில் மைக்குழம்பு என்ற விடத்தும்
காண்க. நாயனார் நெல் வாரிவருதற்குப் புறப்பட்ட அந்த நேரத்தில் சூழ்ந்த
(கணம்) கட்டியான இருள், நாயனாரது அன்பின் உறைப்பினால் தனது
கட்டுத்தன்மையை விட்டு உருகி ஊடுருவிச் செல்ல இடந் தந்தது என்ற
குறிப்புங் காண்க.

     போன்றது உலகெலாம் - போன்றதாகிய உலகத்திலெங்கணும்.
நாயனார் புறப்பட்ட அவ்வரிய செயலினாலே, உண்மையை மறைத்துநின்ற
ஆணவ இருளின் செறிந்த வன்மையானது தனது கட்டுவிட்டு
உலகமெல்லாம் உயிர்கள் நல்லுணர்ச்சி பெறக் காரணமாயது என்பதோர்
உட்குறிப்புங் காண்க. “காரிட்ட ஆணவக் கருவறையில்“ என்ற தாயுமானார்
பாடலையும் பார்க்க. ஆணவம் இருண்மலம் எனப்பட்டதும் இங்குக் குறிக்க.
வலிய இருளினுட் சிக்கி யலைகின்ற உலகினர்க்கு அவ்விருளின் வலியை
நீக்கி அன்பின் திறத்தைக் காட்டுதற்கே இறை