|
வென்றார்
(481) என்று இச்சரிதத்தத்துவத்தினையும் உண்மையினையும்
பின்னர்ச் சுட்டுவதும் காண்க. நற்றவத்தவர் வேடமே கொடு (447) என்ற
இடத்துங் காண்க.
முத்தநாதன்
- இஃது அந்த மாற்றலனாகிய அரசன் பெயர். இவன்
கடையனாம் என்று குறிப்பார் இங்கு அவன் செய்தியைக் கூறிய மூன்று
பாட்டினும் பொய் எனத் தொடங்கும் அடியின் கடையில் இவன் பெயரை
ஆசிரியர் வைத்துக்காட்டிய அழகு குறிக்க. இவ்வாறன்றி முத்தன் - முக்தன்
- மூடன் அறிவினின்றும் விடுபட்டவன் - விலகியவன் என்றும், இது அவன்
பெயறன்ரென்றும், ஆசிரியர் இவ்வாறு தானே அவனுக்கு ஒரு பெயர்தந்து
கூறினாரென்றும் கொள்வர் திரு. ஆறுமுகத்தம்பிரான் சுவாமிகள் ஆசிரியர்
இவ்வாறு அவனுக்கு ஒரு புனை பெயர் தந்து கூறப் போதிய காரணம்
இல்லை எனவும், ஆசிரியர் வைத்துக் கூறுவதாயின் இப்பெயராற்
புனைந்துரைக்க இயைபில்லை எனவும் தோன்றுகிறது. இது அந்நாளிற்
புறச்சமயிகள் தம் வழக்கிற் கொண்ட பெயர்களில் ஒன்றுபோலும்.
இங்குத் திருநீறு எரிக்குந் தன்மையாலே மாயாமலத்தையும்,
விரிந்த
சடையை முடித்தலால் விரிந்து செல்லும் கன்ம மலத்தையும், ஞானத்தின்
உறையுளாகிய புத்தகத்தால் அறியாமையாகிய ஆணவமலத்தையும்
போக்குவதாகிய ஞானாசாரிய அடையாளங்களைத் தாங்குவதே
இத்தவவேடமாம் என்ற கருத்தும் இங்கு வைத்துக்காண்பர். இவை
யெல்லாம் உரிய தேசிகர்பாற் கேட்டுணரத்தக்கன. தாம் பாசத்தினீங்கி
நல்லுணர்வு பெற்றாரே பிறரை வழிப்படுத்தத் தக்கார். அல்லாதார் குருடுங்
குருடுங் குருட்டாட்டமாடிக், குருடுங் குருடுங் குழிவிழுமாறே, தன்னை
யறிந்த தத்துவ ஞானிகள், முன்னை வினையின் முடிச்சை யவிழ்ப்பர்கள்,
பின்னை வினையைப் பிடித்துப் பிசைவர்கள், சென்னியில் வைத்த சிவனரு
ளாலே என்பன திருமூலர் திருமந்திரங்கள். அங்ஙனமாகவும் இங்கு
இம்மாற்றலன் கொண்ட பொய்த்தவவேடம்
நற்பயன் தந்த தெங்ஙனமோ?
எனின், இங்குப் பயன் செய்தது வேடமேயன்றி அவனன்று.
அவ்வேடத்தினைத் தாங்கும் குற்றி அல்லது புல்லுருவம் போன்றே அவன்
நின்றான். வேடத்தின்பாலே நாயனார் கொண்டோழுகிய அன்பின்
உறைப்பானது இவன் செயலால் பின்னரும் உறுதிபெற்றுப் பயன்கொடுத்து
நின்றது என்க.
முத்திநாதன் - புத்திநாதன்
- என்பனவும் பாடங்கள். 7
| 474.
|
மாதவ
வேடங் கொண்ட வன்கணான் மாடந்
தோறும்
|
|
| |
கோதைசூ
ழளக பாரக் குழைக்கொடி யாட மீது
சோதிவெண் கொடிக ளாடுஞ் சுடர்நெடு மறுகிற்
போகிச்
சேதியர் பெருமான் கோயிற் றிருமணி வாயில்
சேர்ந்தான்.
|
8 |
(இ-ள்.)
மாதவ....வன்கணான் - பெரிய தவவேடந் தாங்கிய அவ்
வன்னெஞ் சுடையவன்; மாடம்...போகி - மாடங்கள் எங்கேயும் மாலை
சுற்றிய கூந்தலையும் குழையினையும் உடைய கொடிகள்ஆட, அவற்றின்
மேலே ஒளிவிளங்கும் வெண்கொடிகள் அசைகின்றதற்கிடமாகிய விளக்கம்
பொருந்திய, நீண்ட வீதியிலே சென்று; சேதியர்....சேர்ந்தான் - சேதிநாட்
டரசர்பெருமானாராகிய மெய்ப்பொருணாயனாரது அரண்மனையின் அழகிய
திருவாயிலை யடைந்தான்.
(வி-ரை.)
வன்கணான் - தவவேடத்தினுள்
மறைந்து வஞ்சிக்க
எண்ணியது வன்கண்மையாம். செப்பரு நிலைமை
(472) என்றதுங் காண்க.
திருக்கோவலூரிற் சேர்வான் - புகுந்தனன் - முத்தநாதன் - புகுந்த -
அவ்வன்கண்ணான் - மறுகிற் போகிக் கோயில் வாயில் சோந்தான் - எனத்
தொடர்புபடுத்திக் கொள்க.
மாடந்தோறும்........மறுகு
- ஒவ்வொரு மாடங்களிலும் அளகபாரக்
கொடியும் அவற்றின் மீதே சோதி வெண்கொடிகளும் ஆடுகின்றன;
அவ்வகை மாடங்களே
|