பக்கம் எண் :


614 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam

வெள்ளானைச் சருக்கம் முதலிய இடங்களிற் காண்க. இவ்வளங்கள்
தனித்தனிப் பெருகும் அவ்வவ்விடங்களில் வைத்து இப்பாட்டாற் கூறிய
ஆசிரியர், அவை உடன் பெருகி மல்கும் வகையை நகரச் சிறப்பு
முடன்கொண்டு வைத்து வரும்பாட்டாற் கூறிய திறமும் காண்க.

கழல்பரவி - என்பதும் பாடம். 1

492. வாரி சொரியுங் கதிர்முத்தும் வயல்மென் கரும்பிற்
                               படுமுத்தும்
 
  வேரல் விளையுங் குளிர்முத்தும் வேழ மருப்பி
                          னொளிர்முத்தும்
மூர லெனச்சொல் வெண்முத்த நகையார் தெரிந்து
                          முறைகோக்குஞ்
சேரர் திருநாட் டூர்களின்முன் சிறந்தமூதூர்
                            செங்குன்றூர்,
2

493. என்னும் பெயரின் விளங்கியுல கேறும் பெருமை
                            யுடையதுதான்
 
  அன்னம் பயிலும் வயலுழவி னமைந்த வளத்தா
                            லாய்ந்தமறை
சொன்ன நெறியின் வழியொழுகுந் தூய குடிமைத்
                            தலைநின்றார்
மன்னுங் குலத்தின் மாமறைநூன் மரபிற்
                   பெரியோர் வாழ்பதியாம்.
3

     492. (இ-ள்.) வெளிப்படை. கடலில் மிகவும் சொரிய விளைகின்ற
ஒளி வீசும் முத்துக்களையும், வயலின் விளைகின்ற கரும்பிலே படுகின்ற
முத்துக்களையும், மூங்கில்களில் விளைகின்ற குளிர்ச்சியுடைய முத்துக்
களையும், யானைக்கோடுகளிற் பிறக்கும் விளக்கமுடைய முத்துக்களையும்
இம்முத்துக்களே இவர்களது பல்வரிசைகள் என்று சொல்லத்தக்க
வெண்முத்துப் போன்ற நகையினையுடைய பெண்கள் வகைதெரிந்து
முறைப்படக் கோக்கின்ற சிறப்புடைய, சேரர்களது திருநாட்டிலே உள்ள பல
ஊர்களிலும் முன்வைத்து எண்ணும்படி சிறந்த பழமையான ஊராகித்
திருச்செங்குன்றூர், 2

     493. (இ-ள்.) என்னும்.....தான் - (செங்குன்றூர்) என்கின்ற பெயராற்
விளக்கம் பெற்று உலகு ஏறும் பெருமைதான் உடையது; அன்னம் ...
வளத்தால் - அன்னங்கள் பயிலும் வயல்களில் உழவுத் தொழிலால்
அமைகின்ற வளத்தினைக் கொண்டு; ஆய்ந்த...நின்றார் - (உண்மையறிவோர்)
ஆய்ந்த மறைகளின் விதித்த வழிகளில் நடந்து வரும் தூய்மையான குடிமைத்
திறத்திலே தலைசிறந்து விளங்கி நின்றார்கள்; மன்னும்...பெரியோர் - நிலை
பெற்ற குலத்திலே அப்பெருமறை நூல்களிற் கூறும் மரபிலே பெரியோர்கள்;
வாழ்பதியாம் - வாழ்தற் கிடமாகிய ஊராகும். 3

     இவ்விரண்டு பாட்டுக்களையும் தொடர்ந்து ஒருமுடிபு படுத்தி உரைத்துக்
கொள்க. ஊர்களின் - முன் - சிறந்த மூதூர் (ஆகிச்) செங்குன்றூர் - என்னும்
பெயரின் விளங்கிப் - பெருமை உடையதுதான் - பெரியோர் வாழ்பதியாம்
எனத் தொடர்புபடுத்திக் கொள்க.

     492. (வி-ரை.) முன்பாட்டிற் சொல்லிய கடல், நிலன், வரை
வளங்களிலே சிறந்த வளத்தினை அவ்வந்நிலங்களில் முறைப்படவைத்து
வளப்படுத்திக் காட்டுகிறபடி காண்க. முத்துக்கள் பற்பல இடங்களிற் பிறக்கு
மென்பது நூற்றுணிபு. முன்குறித்த இம் மூன்றிடங்களினும் வரும் ஏனைய
வளங்கள் நிற்க, முத்து என்பதொருவளனே இங்கு இம் மூன்றிடங்களினும்
விளையவும், அவை ஊர்களின் வந்து உடன் பெருகிமல்கவும் உள்ள
சிறப்புக் கூறுகின்றது காண்க. திரைசெய் கடலின் வளனுக்கு இங்கு வாரி
சொரியும் கதிர்முத்தும் என்றும், திருந்து நிலனின் செழுவளனுக்கு வயலமென்
கரும்பிற் படுமுத்தும் என்றும், வரையின் வளனுக்கு வேரல் விளையுங்
குளிர்முத்தும் வேழமருப்பின் ஒளிர்முத்தும் என்றும் முறையே வகுத்துக்
காட்டினார்.

     முத்து
என்றதொரு வளனைக் காட்டவே இதுபோலவே பிறவும் காண்க
எனக் கூறியதாயிற்று. மலை நாடாதலின் அச்சிறப்பு நோக்கி அதற்கு வேரன்