| அமர்நீதி நாயனார் புராணம் | 639 |
Periya Puranam
றதனாற்றமது ஊராகிய
பழையாறையை விட்டுத் திருநல்லூரில் விழாச்
செய்வித்து. அடியார்க்கமுது அளித்து இருக்கும் பொருட்டு வந்து
குடிபுகுந்தனர் என்பதாம். தாம் இருக்கும் இடத்துச் சுற்றமுஞ் சுற்றும்;
(வாணிபத்தின்)வருவளத்தியல்பால் மிக்கவராதலின் சுற்றந்தழுவும்
கடமைப்பாடு முடையார்; சுற்றத்தாரையும் இறைவன் பணியிலும் அடியார்
பணியிலும் ஈடுபடுத்தும் கருத்துமுடையார்; சுற்றத்தாரும் அவ்வாறே ஈடுபடும்
கருத்தினர்; ஆதலின் சுற்றமும் தாமும் வந்தணைந்தனர் என்க. இந்நாயனார்
இல்லறத்தில் நல்வாழ்வு வாழ்ந்தாராதலின் இல்வாழ்வாரால் ஓம்பப்பெறும்
ஐவரில் ஒருவராகிய சுற்றத்தாரைத் தழுவி விளங்கினார் என்றலுமாம்.
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்க றானென்றாங், கைம்புலத்தாறோம்ப
றலை - குறள். பழையாறை தமது பிறந்த
ஊரும், தொழில் நிகழ்ந்த ஊரும்
ஆயினும் அதைவிடுத்து, இறைபணியும் அடியார்க் கமுதுபடைக்கும் பணியும்
கருதித் திருநல்லூரிற் குடிபுகுந்தது நாயனாரது அன்பின் உறைப்பினைக்
காட்டிற்று. மனைவியாரும் மகனும் நாயனாருடன் துலையிலேறிச் சிவபுரியணை
தலின் சுற்றமும் என்று குறிப்பிட்டவாறு.
தூயோர் -
மன மெய்களாற் றூய்மையுடையார். 527-ல் கண்ட
நிகழ்ச்சியுடன் இதனை வைத்துப் பார்க்க.
அணைந்தனராகிச் சமைப்பார்
என, அணைந்தனர் என்றதை
முற்றெச்சமாக்கி யுரைப்பாரு முண்டு. பணிசெய்து இருக்கைக்குத்
திருமடஞ்சமைத்த பின்னரே சுற்றமுந் தாமும் வந்து அணைதல் உளதாம்;
ஆதலின் அவ்வுரை பொருந்தாதென்க. சிவதருமங்களைப் பிறர்பால் விடாது
தாமே நேரிற் கண்டு செய்தல் வேண்டுமென்னும் விதி பற்றி நாயனார்
திருநல்லூரிற் குடிபுகுந்தனர் என்க. 4
| 506.
|
மருவு
மன்பொடு வணங்கினர் மணிகண்டர்
நல்லூர்த் |
|
| |
திருவி
ழாவணி சேவித்துத் திருமடத் தடியார்
பெருகு மின்பமோ டமுதுசெய் திடவருள் பேணி
யுருகு சிந்தையின் மகிழ்ந்துறை நாளிடை
யொருநாள், |
5 |
| 507.
|
பிறைத்த
ளிர்ச்சடைப் பெருந்தகைப் பெருந்திரு
நல்லூர்க் |
|
| |
கறைக்க
ளத்திறை கோவணப் பெருமைமுன்
காட்டி
நிறைத்த வன்புடைத் தொண்டர்க்கு நீடருள்
கொடுப்பான்
மறைக்கு லத்தொரு பிரமசாரியின்படி வாகி, |
6 |
| 508.
|
செய்ய
புன்சடை கரந்ததோர் திருமுடிச் சிகையுஞ் |
|
| |
சைவ
வெண்டிரு நீற்றுமுண் டத்தொளித்
தழைப்பும்
மெய்யின் வெண்புரி நூலுடன் விளங்குமான்
றோலுங்
கையின் மன்னிய பவித்திர மரகதக் கதிரும், |
7 |
| 509.
|
முஞ்சி
நாணுற முடிந்தது சாத்திய வரையிற் |
|
| |
றஞ்ச
மாமறைக் கோவண வாடையின் றசைவும்
வஞ்ச வல்வினைக் கறுப்பறு மனத்தடி யார்க
ணெஞ்சி னீங்கிடா வடிமலர் நீணிலம் பொலிய, |
8 |
| 510.
|
கண்ட
வர்க்குறு காதலின் மனங்கரைந் துருகத் |
|
| |
தொண்ட
ரன்பெனுந் தூநெறி வெளிப்படுப் பாராய்
தண்டின் மீதிரு கோவண நீற்றுப்பை தருப்பை
கொண்டு வந்தமர் நீதியார் திருமடங் குறுக,
|
9 |
|
|
|
|