| 511.
|
வடிவு
காண்டலு மனத்தினு முகமிக மலர்ந்தது, |
|
| |
கடிது
வந்தெதிர் வணங்கி, யிம் மடத்தினிற்
காணும்
படியி லாதநீ ரணையமுன் பயிறவ மென்னா
வடிய னேன்செய்த? தென்றன ரமர்நீதி யன்பர். |
10 |
506.
(இ-ள்.) வெளிப்படை.
பொருந்திய அன்பினோடும்
வணங்கினராய்த், திருநீலகண்டராகிய இறைவன் எழுந்தருளியிருக்கும்
திருநல்லூரின் திருவிழாச் சிறப்பைச் சேவித்துக்கொண்டும், திருமடத்திலே
அடியார்கள் மேன்மேலும் பெருகும் இன்பத்தோடு அமுது செய்திட
அருள்பேணிக் கொண்டும், உருகிய மனமுடையவராய் மகிழ்வுடன் வாழ்ந்து
உறைகின்ற நாள்களில் ஒருநாள், 5
507. (இ-ள்.)
வெளிப்படை. பிறையாகிய தளிரைச் சூடிய
சடையினையுடைய பெருந்தகையாகிய பெருந்திருநல்லூரில் எழுந்தருளிய
திருநீலகண்டராகிய, இறைவனார், தமது கோவணத்தின் பெருமையை
முன்காட்டி, அதன் மூலம், நிறைந்த அன்புடைய திருத்தொண்டர்க்கு நீடிய
அருள் கொடுக்கும் பொருட்டு, வேதியர் குலத்து ஒரு பிரமசாரியின்
வடிவுடையராகி, 6
508. (இ-ள்.)
வெளிப்படை. சிவந்த சிறு சடையை மறைத்ததாகிய
திருமுடிச்சிகையும், சைவத்திற்குரிய திருவெண்ணீற்றைத் திரிபுண்டரமாகத்
தரித்த தனது ஒளியின் தழைப்பும், திருமேனியில் வெண்மையான
புரிகளுடைய பூணுலுடன் விளங்கும் மான்றோலும், கையில் (உரிய விரலிற்)
பொருந்திய மரகதக்கதிர்விட்டு நீண்ட பவித்திரமும், 7
509. (இ-ள்.)
வெளிப்படை. முஞ்சிப் புல்லைத் திரித்த வடத்தினை
முடிந்து அரைஞாணாகச் சாத்திய இடையிலே, தஞ்சமாம் மறையாகிய
கோவண ஆடையின் பிணிப்பும் கொண்ட கோலமுடையவராகி,
வஞ்சனையுடைய தீவினையாகிய கறுப்பு அறும் மனத்தினையுடைய
அடியார்களது நெஞ்சிலே நீங்காது பொருந்திய திருவடி மலர்கள் நீண்ட
நிலத்திலே பொலிய, 8
510. (இ-ள்.)
வெளிப்படை. கண்டவர்கள் மிகுகின்ற ஆசையினாலே
மனம் கரைந்து உருகும்படியாகத், தொண்டருடைய அன்பு என்னும் தூய
நெறியினை வெளிப்படுத்துவாராகித், (தம் கையிலே தாங்கிய) தண்டிலே
இரண்டு கோவணமும், திருநீற்றுப் பையும், தருப்பையுங் கொண்டு நடந்து
வந்து, அமர்நீதியாரது திருமடத்தினை யடையவே, 9
511. (இ-ள்.)
வெளிப்படை. அவரது திருவடிவத்தைக் கண்டவுடனே,
உள்ளே மலர்ந்த மனத்தைவிட முகமானது மிகவும் மலர்ச்சியடைந்து,
விரைந்து எதிரே வந்து வணங்கி, இந்த மடத்தினிலே முன்பு காணும்படி
யில்லாத நீர் இன்று அடியேன் வெளிப்படக் காணுமாறு வந்தணைவதற்காக
முன்னே அடியேன் பயில்தவம் செய்தது என்னோ? என்று அமர்நீதி யன்பர்
சொன்னார். 10
506. (வி-ரை.)
இந்த ஆறு திருப்பாட்டுக்களும் ஒரு முடிபு கொண்டன.
குறியிலறு குணத்தாண்டு கொண்டார் போலும் (குடந்தைக் கீழ்க்கோட்டம் -
10) என்றபடி அறுகுண முடைய பகவன் ஆட்கொள்ள உருவெடுத்து
வருதலின் ஆறுபாட்டுக்களாற் கூறினார் போலும்.
மருவும்
அன்பொடு - அங்ஙனம் திருநல்லூரை வந்து மருவியதற்குற்ற
நிறைந்த அன்பினொடு. வணங்கினர் - வணங்கினராகி
- முற்றெச்சம்.
வணங்கினர், சேவித்து எனக் கூட்டி முடிக்க.
|