| 70 | திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும் |
Periya Puranam
நீரால்
வழிபட்டு இறைஞ்சலின் - நீரால் அருக்கியம் ஆசமனம்
பாத்தியம் கொடுத்தலும் அபிடேகித்தலும் ஆம். இறைஞ்சல்
- அடி வீழ்ந்து
வணங்குதல். வழிபடுதல் - இறைவன் காட்டிய வழியிலே, அல்லது அவனைக்
கூடும் வழியிலே படுதல் என்க. வழியே செல்லுதல் என்பது காவிரிக்கு மிகப்
பொருந்துமாறும் காண்க. காவிரி தனது இருகரையும் உள்ள அனேக
சிவாலயங்களிலும் பூவுடன் சேர்ந்த நீரை எங்கும் நிரம்ப வீசிப் பொன்னையும்
தூவி ஆலயங்களைச் சூழ்ந்து செல்வதாகும்; ஆதலின் இதனை
அன்பர்களைப்போலக் காண்கின்றார் ஆசிரியர். காவிரியின் வடகரையிலும்.
தென்கரையிலுமே பாடல்பெற்ற தலங்கள் பெரும்பாலும் இருப்பதும் குறிப்பாம்.
தனது முன்னை நிலையாகிய கங்கையாயிருந்தபோது பெறாது,
அகத்தியமா முனிவரது கமண்டலத்திற்றங்கியதனாலே தான்பெற்ற பயனாகிய
சிவபுண்ணியத்தின் தொடர்பினாலே பின்னரும் சிவபூசைசெய்து பெரும்
பேறுபெற்றது என்ற குறிப்பும் போதருதல் காண்க. “பொன்பரப்பி
மணிவரன்றிப் புனல்பரக்குங் காவேரி“ எனப் பின்னர்ச் சேரமான்
பெருமாணாயனார் புரணாத்துட் கூறியதும் இங்குக் காண்க.
“நுகராரமொ
டேலம்மணி செம்பொன் னுரையுந்திப
பகராவரு புனல்காவிரி பரவிப்பணிந் தேத்தும்
நிகரான்மண லிடுதண்கரை....“
-திருஞான - தேவாரம் - நட்டபாடை திருநெய்த்தானம்
- 5 |
“.....பனிவரைமீப்
பண்ட மெல்லாம் பறித்துடனே நிரந்துவரு பாய்நீர்ப்
பெண்ணை நிரந்துவரு மிருகரையும் தடவா வோடி நின்மலனை
வலங்கொண்டு நீளநோக்கித் திரிந்துலவு......“
-
திருத்தாண்டகம் - திருமுண்டீச்சரம் - 8 |
என்ற தேவாரங்களின் கருத்தும்
நோக்குக.
செம்பொன் வார்கரை
- மண்மடந்தை பொன் மார்பிற்றாழ்வதால்
இருமருங்கும் செம்பொன் வார்கரையாயிற்று. பொன் துகளை இருகரையும்
வாரி வீசுதலாலும் செம்பொன் வார்கரை - என்பதும் ஆம்.
பொன்னுடைமையாலே இதற்குப் பொன்னி என்று பெயராயிற்று. இதுபற்றி
முன் உரைத்தவையும் காண்க.
ஈரம்பொன்னி
- நீர் மேலும் உள்ளும் நிறைவதனால் ஈரம்மாறாத -
என்றபடி. ஈரம் - அன்பு என்றலும் குறிப்பு.
வம்பலர் மலர் - என்பதும் பாடம். 7
| 58.
|
வாச
நீர்குடை மங்கையர் கொங்கையிற் |
|
| |
பூசு
கும்கும மும்புனை சாந்தமும்
விசு தெண்டிரை மீதழித் தோடுநீர்
தேசு டைத்தெனி னுந்தெளி வில்லதே. |
8 |
(இ-ள்.)
வாசநீர் ......ஓடுநீர் - (காவிரியானது) வாசனையுடைய தனது
நீரிற்குடைந்து ஆடும் பெண்களின் தனபாரங்களிற் பூசிய குங்குமச் சந்தனப்
பூச்சுக்களை மேலே வீசும் தனது அலைகளினால் அழித்து ஓடுகின்றபடியால்,
அந்த நீர்; தேசு.......இல்லதே - (மேலே சொல்லிய பல காரணங்களினாலும்)
ஒளியை உடைய தாயினும் தெளிவில்லதாம்.
(வி-ரை.)
தேசு - (ஒளி) உடைத்தெனினும், குங்குமமும் சாந்தமும்
திரை மீது அழித்து ஓடுதலால் - தெளிவில்லது என்க.
வாசநீர்
- மேற்பாட்டிற் கூறியாங்கு “வம்புலா மலர்நீர்“.
வீசு தெண்டிரைமீது அழித்து
ஓடும் - மீது வீசு தெண்டிரையினால்
அழித்து என்க. பெண்கள் குளிக்கும்போது தமது மெய்ப்பூச்சுக்களை
அழித்துக் கழுவா முன்னரே அவர்களுக்கு அவ்வுதவி செய்வது என்றபடி
ஆற்றுப்பெருக்கின் அலை
|
|
|
|