| திருவாரூர்த் திருநகரச் சிறப்பு | 71 |
Periya Puranam
யும், அவர்கள் குடைந்தாடும்
அசைவும் சேர்ந்து பூச்சாகிய சந்தனத்தைத்
தானே அழித்தோட வல்லதாயிற்று காவிரி என்க; படிந்தார்க்குத்
திருக்குற்றாலத்து அருவி உதவுதல் போல. மேலே கண்டபடி அவர்களுக்கு
அவ்வுதவி செய்த தேசு - பெற்றதெனினும் அப்பூச்சுக்களைக் கலத்தலாலே
தெளிவில்லதாயிற்று.
அழித்து வீசு தெண்டிரை
மீது ஓடும் - என்று மாற்றிக் கூட்டி
யுரைப்பதும் ஆம். அழித்து அவற்றைத் தனக்குள் சேர்த்து அலையுடைய
கடலை நோக்கி ஓடுகின்ற என்க. தனது நீர்முழுதும் உயிர்களுக்குத் தந்து
பயன் செய் காவிரி - (கடல் வயிறு நிறையாத) - கடலிற் சென்று
சேராததென்று முன்னர்க் கண்டாம்; ஆதலின் கடலினை நோக்கிப்போகும்
காலம் பெருக்குக் காலமேயாம். எனவே, இப்பாட்டுக் காவிரிப் புதுநீரை
உணர்த்திற்று என்று இப்பொருளில்உரை செய்க.
தெளிவில்லதே - எனினும், தேசுடைத்து - என்றும் ஆம்.
மீதிழித்தோடு - என்பதும் பாடம். 8
| 59.
|
மாவி
ரைத்தெழுந் தார்ப்ப வரைதரு |
|
| |
பூவி
ரித்த புதுமதுப் பொங்கிட
வாவி யிற்பொலி நாடு வளந்தரக்
காவிரிப்புனல் கால்பரந் தோங்குமால். |
9 |
(இ-ள்.)
மா - ஆர்ப்ப - வண்டுகள் எழுந்து ஆரவாரிக்க;
வரை...........பொங்கிட மலையினின்று அடித்துக்கொண்டுவரும் புதுப்பூக்களின்
தேன் பொங்க; வாவியிற் தர - அங்கங்கே வாவிகளாலே நிறைந்து நாட்டுக்கு
வளம் தருதற்பொருட்டு; காவிரி........ஓங்குமால் - காவிரியின் நீர்
கால்வாய்களிற் பரந்து எங்கும் ஓடும்.
(வி-ரை.)
மா இரைத்து எழுந்து ஆர்ப்ப - வண்டுகள் இரைத்து
எழுந்து ஆரவாரிக்க; மிகுந்த ஆரவாரத்துடன் எழுந்து பாடவும், ஆர்ப்ப
என்பதற்கு ஆர்த்து மிக ஒலித்து - என உரைத்தலுமாம். இப்பொருளில்
விரித்த என்ற வினைகொண்டு ஆர்த்து விரித்த பூ - என்க.
பூ விரித்த புதுமதுப்
பொங்கிட - பூ விரித்ததனால் வெளிப்பட்ட
தேன் பொங்க அதனாற் பெருகிய புனல் என்க. ஆர்ப்ப - பொங்கிட -
காவிரிப் புனல் நாடு வாவியிற் பொலி வளந்தரக் - கால்களிற் பரந்து ஓடும்
எனக்கூட்டுக. நாட்டின் வளத்திற்கு வாவியும் - வாவிகளுக்குக் கால்களும் -
கால்களுக்குக் காவிரிப் புனலும் - அதற்கு மதுவும் - அதற்குப் பூவிரிதலும் -
அதற்கு ஆர்த்தலும் - முறை முறையே ஒன்றற்கொன்று முன்
நிகழ்ச்சிகளாகிய காரணங்களாக அணி பெற அமைத்தமை காண்க.
வரைதருபூ - மலைப்பூக்கள் மிகுதியும் தேன்
உடையன. ஆதலின்
அத்தேன் பற்றிக் கூறினார். காவிரியாறு மலையினின்றும் வருதலின்
அத்தேனைக் கொண்டு வரும்; காவிரி நீரின் உருசி - பெருக்கு -
குணங்களுக்கு ஒரு வகையாற் காரணங் கற்பித்தவாறு. காவிரியையும்
இதுபோன்ற நன்னதிகளையும் சாக்கடை வடிகால்களாக ஆக்கிக் கண்டு
மகிழும் இந்நாள் மாக்கள் இதனை எண்ணித் திருந்த ஒழுகுவார்களாயின்
நன்மை பெருகும்.
வாவியிற் பொலி நாடு
வளந்தர - சோழ நாட்டிலே வாவிகள் மிக்கு
இருப்பது இந்நாளிலும் கண்கூடாகக் காணத்தக்கது. ஆனால் இந்நாளில்
அவற்றைப் பலவகையினும் சுகக்கேடு விளைக்கக்கூடிய வழிகளில்
உபயோகித்து வருதல் வருந்தத்தக்கது.
காவிரி நீர் கால்களிற் பரந்து வாவிகளை நிரப்பி
நாட்டுக்கு வளம்
செய்யும்; அங்கிருந்து வாவிகளிற்புக்கும், மதகுகளின் வழியே வயல்களிற்
பாய்ந்தும், பயிர்க்கூழ் விளைவித்தல் அடுத்த பாட்டிற் காண்க.
மலையிற் றோன்றிய காவிரியாறு சோழ நாட்டிலே செய்யப்படும்
பசு
புண்ணியங்களாகிய உலக அறங்கள் முதலாகச் சிவபுண்ணியங்கள் வரை
எல்லாவற்றிற்கும் காரணமாயிருக்கும் வழியினை உணர்த்தினார்.
|
|
|
|