| திருவாரூர்த் திருநகரச் சிறப்பு | 83 |
Periya Puranam
துதைந்தெழுங்
கன்னி வாளை - கூட்டமாய் ஒன்றன்பின் ஒன்றாய்
எழுவது இளவாளைகளின் இயல்பு. வாளை மிக உயரமுந் தூரமும் குதித்துப்
பாயும் இயல்புடையன. ஆதலின் கன்னிவாளை கமுகின் மேற்பாய்வன
என்றார். கமுகு வாவியின் கரை அருகே சோலையில் உள்ளது. மேதிக்
கூட்டத்தையும் வாளைக் கூட்டத்தையும் குறிப்பார் முறையே துன்னும்
என்றும், துதைந்து என்றும் அடைகொடுத்துக் கூறினார்.
மன்னும் வான்மிசை வானவில்
போலும் - வாளைகள் பல
நிறங்களுடன் மின்னுவன. நீரினின்றும் வெளிக்குதித்துப் பாயும்போது சூரிய
ஒளியில் அந்நிறங்கள் நீர்நிறத்துள்ளே பலவாகி விளங்கிக் காட்டவே,
இவையும் வானவில்லின் ஏழு நிறங்களைப்போல ஒன்றோடொன்று விரவிப்
பல நிறங்களைக் காட்டி மின்னும். அன்றியும் பாய்ந்துவரும் வளைவு
வில்வட்ட வடிவம்போலும். சோலையும் வாவியும் வானம்போல நீலமுடையன.
இவற்றிற்கிடையே வரிசையாய் மின்னும் வாளைகள் வானவில் போன்றன
என்க. வான் அசையாது நிற்க வில் மட்டும வந்து போகுமாதலின் மன்னும்
வான் என்றார்.
“மடையில் வாளை பாய மாதரார், குடையும் பொய்கைக்
கோலக்
காவுளான்” என்ற தேவாரத்திலும் வாளை பாயும் இயல்பு விளக்கப்பெற்றமை
காண்க. 19
| 70.
|
காவி
னிற்பயி லுங்களி வண்டினம் |
|
| |
வாவி
யிற்படிந் துண்ணு மலர்மது
மேவி யத்தட மீதெழப் பாய்கயல்
தாவி யப்பொழி லிற்கனி சாடுமால். |
20 |
(இ-ள்.)
காவினில்...மது - சோலையிலே பயில்கின்ற வண்டுகள் அடுத்து
உள்ள வாவியிலே நீர்ப்பூக்களிலும் படிந்து தேன் உண்ணும்; மேவி....சாடுமால்
- அவ்வாறு வண்டுகள் தேனை உண்ணும் வாவியில் வாழ்ந்தும் (அதனுள்
அடங்கியிராது) மேலே எழுந்து பாயுந்தன்மையுடைய கயல்மீன்கள் தாவி
(வண்டுகள்வந்த) அச்சோலைகளின் இனிய கனிகளின் மேற் பாய்ந்து
அவற்றை உதிர்த்துச் சிதைக்கும்.
(வி-ரை.)
அத்தடம் - அப்பொழில்
- காவிலே வாழும் வண்டுகள்
வாவியிலே வருதலும், அதற்காக மாறுகொண்டு பாய்வனபோல
அவ்வாவியிலே வாழும் கயல்கள் வண்டுகளின் இருப்பிடமாகிய
அச்சோலைகளைச் சூறையிட்டுச் சிதைப்பன போலும் - என்பதுகுறிப்பு;
அந்தத் தடம் - அந்தப் பொழில் என்பன
முன்னறி சுட்டு. வண்டு மலர்மது
உண்ண வந்த அந்தத் தடம் என்றும், வந்த வண்டுகள் இருந்த இடமாகிய
அந்தப் பொழில் என்றும் அகரச் சுட்டுக்குப் பொருள் வருவித்துக்கொள்க.
களிவண்டு...பாய்
கயல் - தமக்குரிய உணவாகிய தேனை எவ்வகைப்
பூக்களிலும் சென்று முயன்று தேடும் வண்டுகள் போலல்லாது, கயல்கள் தாம்
வாழுமிடத்துள்ள தேனைத் தாமும் உண்ணாது பிறர் உண்ணவும் பொறாது,
சினந்து, தகாத செய்கை செய்வன - என்று கோபம் எனும் தீக்குணத்தின்
செயலை உள்ளுறையாகக் கற்பித்தவாறு. இது குறிக்கக் களி வண்டு என்றும்,
பாய் கயல் என்றும் அடைமொழி புணர்த்ததும் குறிக்க.
கனி சாடுதல்
- இதனால் தமக்கு ஒரு பயனுமில்லையாயினும்,
இக்கனிகளாற் பிறர்க்குவரும் பயனை அழித்தல் மரத்திரமே கருதிய செயலாம்
என்பது குறிப்பு மனிதர்க்குள்ளும் இவ்வியல்புள்ளார் பலராதலின், அவர்க்கு
அறிவுறுத்துவதும் குறிப்பு.
வண்டு உண்ணும்
- அவை உண்ணவே - கயல்சாடும் -
எனவருவித்து உரைக்க
பயிலும்
- சிறப்பாய் வாழுமிடமாகக் கொண்ட.
|
|
|
|