பக்கம் எண் :


திருவாரூர்த் திருநகரச் சிறப்பு95

Periya Puranam
     வகுளம் - மகிழமரம். கோட்டுப்பூ கொடிப்பூ, முதலிய பலவும் விரவக்
கூறுதல் நாட்டின் அணியியல்பு குறித்தது.

     போதவிழ் கைதை - மடல்கள் விரிந்த பூக்களையுடைய தாழை;
சோற்றின் அவிழ்போன்ற போதுகளையுடைய தாழை என்றலுமாம். பூகம் -
கமுகு. புன்னாகம் - புன்னை.

     மேலே இந்நாடு பெரும்பான்மை மருதத்திணையாகச் சொன்னாரேனும்,
மேற்பாட்டிலும் இப்பாட்டிலும் குறித்த பொருள்களாகிய கோட்டுப் பூ -
கொடிப்பூவாதி பலவகைப் பூமரம் கொடி முதலியவை மருதம் நெய்தல்
முதலியபல்வகை நிலப் பொருள்களாய் மயங்கியும் விரவியும் வருதல்
அந்நாட்டிலே பல வகைத் திணைகளும் விரவியிருத்தலைக் குறிக்கும்.
திருக்குறிப்புத்தொண்ட நாயனார் புராணத்தில் தொண்டை நாட்டிற்குச்
சொல்லியவாறே இந்நாட்டிற்கும், இவ்வாறே பிறநாடுகளுக்கும் ஏற்ற பெற்றி
வைத்துக் கண்டுகொள்க.  29

80. மங்கல வினைக ளெங்கு மணஞ்செய்கம் பலைக
                                ளெங்கும்
 
  பங்கய வதன மெங்கும் பண்களின் மழலை
                                யெங்கும்
பொங்கொளிக் கலன்க ளெங்கும் புதுமலர்ப் பந்த
                                ரெங்குஞ்
செங்கயற் பழன மெங்குந் திருமக ளுறையு
                                ளெங்கும்.
30

     (இ-ள்.) வெளிப்படை.

     (வி-ரை.) மங்கலவினைகள் - பலவகை மங்கலச் செயல்கள்.
மணஞ்செய் கம்பலை - இவற்றுளே சிறந்ததாகவும் கம்பலை மிகுதியாகவும்
உள்ளதென்று குறிக்க இதனை வேறுபிரித்துக் கூறினார். கம்பலை -
ஆர்ப்பரிப்பு - முழக்கம். கம்பலைகள் என்ற பன்மை பல மணங்களில்
நிகழும் பல முழக்கங்களையும் பல வகைகளையும் குறித்தது.

     பங்கய வதனம் - மேற்கூறிய மணமுதலிய மங்கலங்களிற் கூடி
வினைசெய்யும் பெண்களின் தாமரைபோன்ற முகங்கள். பண்களின் மழலை
- அவ்வினைகளில் அவர்கள் மழலையினால் மிழற்றும் பண்ணிசைகள்.
பெண்களின் இன்சொற்கள் பண்போன்றிருத்தலாலும் அவர்களது மழலையிற்
பண்களிருத்தலாலும் இவ்வாறு கூறினார்.

“பண்ணி னேர்மொழி யாளுமை பங்கர்” - தேவாரம்.

“பண்சுமந்த பாடற் பரிசு படைத்தருளும், பெண்சுமந்த பாகத்தன்”
                                            - திருவாசகம்

“பண்ணி னேரும் மொழியாளென் றெடுத்துப் பாடப் பயன்றுய்ப்பான்”
                                                  - திருநாவுக் - புராணம்

முதலிய திருவாக்குக்கள் காண்க.

     கலன்கள் - ஆடவர்களும் மகளிரும் அணியும் அணிகள்.

     புதுமலர்ப் பந்தர் - மேற்கூறிய மங்கல வினைகளுக்காக அமைந்து
அழகு செய்வன. புதுமலர்ப் பந்தர் இடுதல் மங்கலஞ்செய் வினைகளுள்
ஒன்றென்பது.

“பெருந்தண் கணவீர நறுந்தண் மாலை, துணையுற அறுத்துத் தூங்க நாற்றி”

என்ற திருமுருகாற்றுப்படையாலும் காணப்பெறும்.

“தாதவிழ்பூந் தொடைமாலைத் தண்பந்தர் களுஞ்சமைத்து”
                                - தடுத் - புரா - 121

“தோடு குலவு மலர்மாலை சூழ்ந்த வாசப் பந்தர்களும்”
                           - திருநா - புரா - 319

என்பனவாதி புராணத் திருவாக்குக்களும் காண்க.