அவற்றினும்
இவ்வேட்டை பெருமை யுடைத்தென்பது கருதியபடி
பின்னர் வெவ்வே றியல்பினி லமைத்துக் கொண்டு
என்ற குறிப்புமிது.
திண்ணப்பனார்
பேறடைந்ததாகிய இந்த ஆறாம்நாட் சரிதப்பகுதியைக்
கூறும் ஆசிரியர், முன்சொல்லி வந்த கொச்சகக்கலிப்பா யாப்பினை மாற்றி,
அறு சீர்க்கழிநெடிலடி விருத்தத்தாற் கூறுகின்ற பொருத்தமும் காண்க.
"குறியிலறு குணத்தாண்டு கொண்டார்" என்றபடி இறைவன்
ஆறுகுணமுடையவனாதலின், அத்தன்மையினை அடியவர் பெருமானாகிய
திண்ணனாருக்கும் அருளித் தமது பக்கத்தில் இருத்திய இப்பகுதியை
அறுசீர்விருத்தத்தாற் கூறிய பொருத்தமும், அந்த மூவிருகுணங்களுமே
முகங்களாயமைந்த ஆறுமுகப்பெருமான் திருவருளால் அவதரித்தவரது
சிறப்பு ஆறுசீர்ப் பாட்டால் முடிக்கும் பொருத்தமும் காண்க.
முன்புபோகி
- என்பதும் பாடம். 161
811.
(வி-ரை.) மாறுஇல் ஊன்
அமுது - மாறுஇல் - ஒப்பில்லாத.
ஈட்டுதல் சமைத்தல் - சுவைபார்த்தல் முதலிய புறச்செயல்களாலும்,
இச்செயல்களைத்தூண்டிய அன்பாகிய அகச்செயலாலும் ஒப்பரிய. ஊன்
அமுது - ஊனாகிய அமுது. முன்னாட்களில் ஈட்டிய ஊனிலும் சிறந்த
என்றலுமாம். முன்னாட்கள் போலன்றி அன்று உடும்பும் அடித்துச் சமைத்துக்
கொணர்ந்தனர் என்பது "கடும்பகல் வேட்டையிற் காதலித்தடித்த,
உடும்பொடு" என்ற திருமறத்தா லறியப்படும்.
நல்ல
மஞ்சனப் புனல் - "மாநதி நன்னீர் தூய வாயினிற் கொண்டு"
(770) என்றதும், ஆண்டுரைத்தவையும் பார்க்க. மஞ்சனநீரும்
அதனைக்கொள்ளும் கலமும் ஒக்க நன்மையுடையன ஆதலின் நல்ல
என்றார். நல்ல மஞ்சனம் என்று கொண்டு நன்மைதரும் திருமஞ்சனம்
என்றலுமாம். இன்னின்ன பொருள்களால் திருமஞ்சனமாட்டுதல் இன்னின்ன
பயன்தரும் என்று ஆகமங்களிற் கூறுதல் காண்க.
சென்னி
ஏறும்நாள் மலர் - "தூநறும் பள்ளித்தாமங் குஞ்சிமேற்
றுதையக் கொண்டார்" (770) என்றபடி திருப்பள்ளித்தாமத்தைக்
குடுமியிற்செருகி அமைத்துக்கொண் டனராதலின் சென்னிஏறும்
என்றார்.
இறைவனது சென்னியில் ஏறுவதற்காகக் கொண்ட என்றலுமாம்.
வெவ்வேறு
இயல்பினில் அமைத்துக் கொண்டு -
வெவ்வேறியல்பாவன தனித்தனி சிறப்புடையனவாகிய இயல்பு. அன்றுகொண்ட
ஊனமுது முதலியன முன்னை நாட்களிற் கொண்டவற்றினும் சிறந்தன என்பது
மேற்பாட்டின் குறிப்பு. "மேன்மேல் வந்து எழும் அன்பால்" (800) என்றபடி
அன்பு நாளுக்கு நாள் மேல்எழுந்து மிக்கதாதலின் அவ்வாறு மிக்குக்கூடிய
அன்பின் எழுச்சியால் அமைத்தலின் இவை வெவ்வேறியல்பினைக்
கொண்டன என்க.
இனி
முன்னை ஐந்து நாட்களினும் அமைத்த அமுது, நீர், பூ
இவற்றினியல்பின் இவை வேறாயின என்றலுமாம்.
முன்னாட்களிற்
கொண்ட பொருள்கள் அவர் எண்ணியபடி இறைவன்
திருப்பூசைக்குப் பயன்பட்டன. இன்று அவ்வாறன்றி இறைவன் "அவனுடைய
செயல் எல்லா நமக்கினிய வாமென்று" (806) முன்னைநாளிரவே உகந்து
கொண்ட பாங்கினால் திருவருள் வெளிப்பாட்டுக்குத் துணைக்
கருவிகளாயமைந்த இயல்பினவன்றி, அவர் எண்ணி யமைத்துக்
கொண்டவாறு அன்றைநாளிற் பூசிக்கப் பயன்படாத இயல்புடையனவாயின
என்பதும் குறிப்பு. இது "வாயினன்னீர்சிந்திட ... ஊனும் சிதறிவீழ ...
கொந்தலர் பள்ளித்தாமங் குஞ்சிநின் றலைந்து சோர" (814) என்றுரைத்த
வாற்றா னறியப்படும். அன்று முன்னை நாட்களிற்போலப் பூசை நடவாது,
கண்ணிடந்து சாத்தியதும் சாத்த ஒருப்பட்டதும் ஆகிய பூசையே நிகழ்ந்தது
என்பதும் காண்க.
|