பக்கம் எண் :


கண்ணப்பநாயனார்புராணம்1031

 

     கொது அலர் - கொத்தாக அப்போது புதிதாய் இதழ் விரிந்த, புதிதின்
மலர்ந்த பூக்களையே திண்ணனார் தேடிப் பறித்தனர் என்பது. இதுவே
விதியுமாம்.

     பைந்தழை அலங்கல் - இது திண்ணனாரது திருமார்பகத்துக்கு
இயற்கையடைமொழி. சாதியடை என்பர். அன்றையநாளில் மார்பில் மாலை
யணிந்திருந்தனர் என்பதன்று.

     பதைப்பு - உள்ளப்பதைப்பின் மெய்ப்பாடு. இது சிறிய அன்புடைய
ஏனை உலகினரிடத்தும் காணப்படுவதென்றால் மெய்யன்பே உருவாகிய
திண்ணனார் பால் உண்டாதல் வியப்பன்றென்க.

     வீழ்ந்தார் - தேவரைக் காக்க நின்றவர் தம்மையும் காக்க - தாங்க -
முடியாத நிலையினராயினர். காணல், மயங்கல், வீழ்தல், சோர்தல் - வீழ்தல்
- கூடி நிற்றலால் கூட்டவணி என்பது சுப்பராயச் செட்டியாருரை. 165

815.



விழுந்தவ ரெழுந்து சென்று துடைத்தனர் குருதி; வீழ்வ
தொழிந்திடக் காணார் ; செய்வ தறிந்தில ருயிர்த்து மீள
வழிந்துபோய் வீழ்ந்தார் ; தேறி"யாரிது செய்தா?" ரென்னா
வெழுந்தனர்; திசைக ளெங்கும் பார்த்தன; ரெடுத்தார்
                                         வில்லும்,



166
     
816.



வாளியுந் தெரிந்து கொண்"டிம் மலையிடை யெனக்கு மாறா
மீளிவெம் மறவர் செய்தா ருளர்கொலோ? விலங்கின் சாதி
யாளிமுன் னாகி யுள்ள விளைத்தவோ? வறியே" னென்று
நீளிருங் குன்றச் சார னெடிதிடை நேடிச் சென்றார்.



167

     815. (இ-ள்.) வெளிப்படை. வீழ்ந்த திண்ணனார் எழுந்துபோய்
உதிரத்தைத் துடைத்தனர்; அவ்வுதிரம் பாய்தல் நிற்கக் கண்டாரிலர்;
செய்யக்கடவது இன்னதென்று அறிந்திலர்; பெருமூச்சுவிட்டு மீளவும்
செயலழிந்துபோய் வீழ்ந்தனர்; பின்னர் மனந்தேறி "இது செய்தார் யாவர்?"
என்று எண்ணி எழுந்தனர்; எல்லாத் திக்குக்களினும் பார்த்தனர்; வில்லையும்
எடுத்தனர். 166

     816. (இ-ள்.)வெளிப்படை. ஏற்ற அம்புகளைத் தேர்ந்து எடுத்துக்
கொண்டு "இந்த மலையில் எனக்கு மாறாக வலிமையுடைய கொடிய
வேடர்கள் செய்தனரோ? சிங்கம் முதலாகவுள்ள விலங்கினங்கள்
செய்தனவோ? தெரியேன்" என்று எண்ணி, நீண்ட பெரிய குன்றின் சாரலில்
நெடுந்தூரம் தேடிச் சென்றார். 167

     இவ்விரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.

     815. (வி-ரை.) துடைத்தனர் குருதி; அக்குருதி வீழ்வது எனச் சுட்டுப்
பெயர் வருவிக்க. குருதி என்பது சிங்கநோக்காக முன்னும் சென்று குருதி
துடைத்தனர் என இயைந்தது என்றலுமாம்.

     ஒழிந்திடக்காணார் - ஒழிந்திலது என்னாது இவ்வாறு கூறியது ஒழியக்
"கண்டலே கருத்தாய் நினைந்திருந்"தார் திண்ணனார் என்பதுணர்த்தி
வற்புறுத்தற் பொருட்டு. மேற்பாட்டிற் குருதிகண்டார் என்றவிடத்
துரைத்தவையும் பார்க்க.

     துடைத்தனர், காணார், அறிந்திலர், வீழ்ந்தார், எழுந்தனர்,
பார்த்தனர், எடுத்தார்
என இவ்வொரு பாட்டில் ஏழு தனி வினை
முற்றுக்கள் வைத்தோதியது திண்ணனாரது மனத்தில் அவலமிகுதியினால்
ஒன்றன்பின்ஒன்றாய் விட்டுவிட்டு விரைவில் நிகழ்ந்த வேறுபாடுகளையும்,
அவற்றாற் றூண்டப்பட்ட செயல்களையும் அவ்வாறே நாடகச்சுவை படக்
காட்டுதற்பொருட்டு. அன்பு பலவாறாக உருவெடுத்தலும் உணர்த்தப்பட்டது.
அது தாங்கலாற்றாது மயக்கும்; தீர்வு தேடச் செய்யும்; வேறுபல முயற்சியிலும்
ஊக்கும்; வீராவேசம் தோன்றிப் பழி