பக்கம் எண் :


1032 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 

வாங்கத் தூண்டும்; ஒன்றுமாற்றாதபோது வீழ்ந்து கதறி யழச்செய்யும்.
உலகியலிற் காணும் இந்நிலைகள் யாவும் இங்குப் பெருநிலையில் நிகழ்ந்தன
என்பது கண்டுகொள்க.

     செய்வதறிந்திலர் - இதற்குத் தீர்வாக யாது செயத்தக்க வென்றறிய
வாராது நின்றனர்.

     அழிந்து வீழ்ந்தார் - மனமழிந்து பதைத்து வீழ்ந்தனர் என முன்
உரைக்கப்பபட்டமையின் இங்குச் செயலழிந்து வீழ்ந்தனர் என்க.

     தேறி - மீண்டும் மனம் தேறி. இங்குத் தேறுதல் - இன்னது
எண்ணுவது - செய்வது - என்று தோன்றாது மயங்கி வீழ்ந்த நிலையினின்றும்
தேறி ஒருவழிச் செல்லுதல் என்னும் பொருளில் வந்தது. தேறி - எண்ணி
என்றலுமாம். யார் இது தேறிச் செய்தார் என்று கூட்டி இதனையும்
எண்ணிச் செய்தார் யாவர் என்றுரைத்தலும் ஒன்று.

     எழுந்தனர் - தேறி, யாவர் இது செய்தனர் என நினைந்தவுடன் இது
செய்தாரைக் கண்டு ஒறுக்கவேண்டுமென்று வீரமும் சினமும் தோன்றின.
அவை தோன்றவே, முன்னிருந்த கையறுநிலையாகிய வீழ்ச்சியிலிருந்து
மேற்கிளம்பி எழுந்தனர் என்பதாம். புண்ணிற்குத் தீர்வு தேடுதலினும்
பழிவாங்குமியல்பே முற்பட்டு நிற்பது உலகியல். அதுமாறி இறைவன்
பொருட்டாய் நிகழ்ந்தது.

     திசைகள் எங்கும் பார்த்தனர் - இது வீரத்தின் பெருமிதச் செயல்.

     எடுத்தார் வில்லும் என்றதும், வினையை முன்வைத்ததும் அக்குறிப்பு.
வில்லும் - பின்னர் வாளியும் தெரிந்து என்றதனால் உம்மை எதிரது
தழீஇயது. எண்ணும்மை என்றலுமாம். எடுத்தார் - கையினின்றும் சிலை
வீழ்ந்ததென்று மேற்பாட்டிற் கண்டோமாதலின் அவ்வாறு வீழ்ந்த வில்லினை
எடுத்தார் என்பது.

     வில்லும் அம்பும் எடுத்துக் கொண்டது, இது செய்தாரைக் கண்டால்
ஒறுத்து ஒழிக்கும் வீரத்திறம் பற்றியது என்பது மேல்வரும் பாட்டானறிக. 166

     816. (வி-ரை.) வாளியும் தெரிந்துகொண்டு - செயலழிந்து வீழ்ந்தவர்
தேறி வில்லும் எடுத்து, ஏற்ற அம்புகளையும் தெரிந்துகொள்ளவல்லராயினர்.
ம்மை எச்சமும் சிறப்புமாம்.

     எனக்கு மாறா மீளி வெம்மறவர் - உலகச்சார்புகளையும் தம்மையும்
மறந்து நின்ற திண்ணனாருக்கு இங்கு எனக்கு எனத் தமது நினைவும் மாறா
என மாறுபாடு பகை - சினம் முதலிய நினைவும், மீளி வெம்மறவர் - என
வேடர் முதலிய உலகச் சார்பு நினைவும் போந்தன. தமது பசி, உறக்கம்
முதலியவை தோன்றாது மறந்தார்க்கு எவ்வாறு தேவரது பசி முதலியவை
தோற்றிச் செயல் நிகழக் காரணமாயினவோ, அவ்வாறே, ஈண்டும்
தேவரைக்காக்கும் தமக்குப் பகையாய் ஊறு செய்தாரை எண்ணியபோது தாம்
முன்னை உலக அனுபவத்திற் கண்ட தமது இருப்பும் பகையும் முதலிய
தொடர்புகள் நினைவுக்கு வந்தன. 756 - ம் பாட்டில் உரைத்தவை பார்க்க.
சண்டீசநாயனார் சரிதத்தில், அவர் பூசை செய்தபோது மற்றொன்று மறிந்திலர்;
அங்குவந்த தமது பிதாவைக் கண்டிலர்; அவன் கூறிய கொடிதா மொழியுங்
கேட்டிலர்; அவன் தமது திருமுதுகிற்புடைத்ததனையும் உணர்ந்திலர்; ஆனால்
இறைவனுக்குத் திருமஞ்சனம் ஆட்டுதற்கு வைத்த பாற்குடத்தை அத்தீயோன்
காலாலிடறிச் சிந்திய செயல்கண்டனர்; அவனைப் பிதாவும் குருவும்
மறையோனுமாகிய எச்சதத்தன் என்று அறிந்தனர்; அவன் செய்த சிவாபராதம்
தண்டிக்கற்பாலது என்றுணர்ந்தனர்; அதன் பொருட்டுக்கோலும் எடுத்தனர்;
அது திருவருளால் மழுவாயிட அவன்றாள்களை எறிந்தனர் என்ற
நிகழ்ச்சிகளை இங்கு வைத்துப் பொருந்தக் கண்டுகொள்க. திண்ணனார்
பின்னர்ச் செய்வனவும் இவ்வாறே கண்டுகொள்க.

     சீவன்முத்திக்கும் பரமுத்திக்கும் உள்ள வேறுபாடு இங்குக்
கருதத்தக்கதாம். சீவன் முத்தர் இறைபணியின் ஏகமாகி நின்று அப்பணியின்
பொருட்டு உடல் உணர்வுடன் இறைவனைப் பொருந்தி இருப்பர்; பரமுத்தர்
அவ்வாறன்றி