பக்கம் எண் :


1034 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 
818.

"பாவியேன் கண்ட வண்ணம் பரமனார்க் கடுத்த தென்னோ?
வாவியி னினிய வெங்க ளத்தனார்க் கடுத்த தென்னோ?
மேவினார் பிரிய மாட்டா விமலனார்க் கடுத்த தென்னோ?
வாவதொன் றறிகி லேன்யா; னென் செய்கே;" னென்று
                                        பின்னும்
169
   
819.




,"என்செய்தாற் றீரு மோதா?; னெம்பிரான் றிறத்துத் தீங்கு
முன்செய்தார் தம்மைக் காணேன்; மொய்கழல் வேடரென்று
மின்செய்வார் பகழிப் புண்க டீர்க்குமெய் மருந்து தேடிப்
பொன்செய்தாழ் வரையிற் கொண்டு வருவனா" னென்று
                                         போனார்.




170

      817. (இ-ள்.) வெளிப்படை. (அவ்வாறு தேடிய திண்ணனார்)
வேடர்களைக் காணார் தீய விலங்குகளைப் பக்கங்களிலும் வேறு எங்கும்
நாடியும் காணார்; மீண்டு திருக்காளத்தியப்பரிடம் வந்து நீடிய பெருஞ்
சோகத்தோடு நிறைமலர்ப் பாதங்களைப் பிடித்துப் பக்கம் பொருந்தக்
கட்டிக் கொண்டு, கண்ணீர் பெருகக் கதறுவாராகி, 168

     818. (இ-ள்.) வெளிப்படை. "இப்பரமனார்க்குப் பாவியேன் நான்
கண்டபடி இவ்வாறு அடுத்த தென்னோ?; உயிரினும் இனியவராகிய எங்கள்
அத்தனார்க்கு இது அடுத்ததென்னோ?; வந்து பொருந்தினவர்கள் விட்டுப்
பிரியமாட்டாத விமலனார்க்கு இங்கு அடுத்ததென்னோ? செய்யலாவதாகிய
காரிய மொன்றும் யான் அறிகிலேன்" என்று கதறி மீளவும் (எண்ணுவாராய்),
169

     819. (இ-ள்.) வெளிப்படை. "என்ன செய்தால் இது தீருமோ?
(அறியேன்); எமது பெருமானிடத்து இத் தீங்கு முன் செய்தவர்களைக்
காணேன்; மொய்த்த வீரக் கழலையணிந்த வேடர்கள் ஒளியுடைய நெடிய
அம்பினால் உளவாம் புண்களை எப்போதும் தீர்க்கும் நிச்சயமான
மருந்துகளைப் பொன்செய்யும் மலையின் தாழ்வரையி னிடத்திருந்து
தேடிக்கொண்டு வருவேன்" என்று சொல்லிப் போயினார். 170

     இம் மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.

     817. (வி-ரை.) வேடரைக் காணார் - இத்தீங்கினைச் செய்திருக்கக்
கூடுமென்று தாம் எண்ணிய பகையிரண்டனுள் முதலில் எண்ணியபடி
வேடர்களைக் காணார்; ஆதலின் அதன்பின் தீய விலங்கின் சாதியைத்
தேடினார்.

     விலங்குகள்........காணார் - விலங்குகள் பகலில் வெளியிற் றங்காது
ஒளியிடத்துப் பதுங்கிக் கிடக்கு மாதலின் அவ்விடங்களை மருங்கும்
எங்கும்
என்றார். மருங்கும் என்பது அணிய இடங்களையும், எங்கும்
என்றது காட்சிக்குச் சேய பதிவு இடங்களையும் குறித்தன. காணார் -
காணார்
- ஒன்றுபோலவே ஐயப்பட்ட இரு பகைகளும் காணாவாயின
என்பார் காணார் என்ற சொல்லால் இரண்டிடத்தும் குறித்தார்.

     மீண்டு.......வந்து - தீங்குசெய்தன பகை என்றெண்ணியபடி பகைகள்
காணாமையின் பழிவாங்கும் வீராவேசம் இதனுட் குறைந்து விடவே,
புண்ணுக்குத் தீர்வு தேடாமலும், இத்தனைபொழுது தேவரைப் பிரிந்தும்,
தாழ்த்தோமே என்ற நினைவு வந்தது. வரவே, பகை தேடித் திரிந்த சேய
காட்டினின்றும் விரைந்து மீண்டு தேவரிடம் வந்தனர். நாயனார் - தலைவர்
- காளத்தியப்பர். நீடிய சோகம் - பெருகிய வருத்தம். துன்பங் கவலை
என்பவற்றின் மிகுதியால் உளதாகும் விளைவு சோகம் எனப்படும்.
நாயனாரது கண்ணிற் குருதி பாயப்பாய இவரது சோகமும் பெருகுகின்றது.
ஒருவனுக்கு இரத்தம் பெருக வெளிப்படின் (loss of blood) அவனுக்குச்
சோகமுளதாம் என்பர். ஆயின் இங்குக் காளத்தி நாயனார் வடிவமும்
திண்ணப்ப நாயனார் வடிவமும் சிவோகம்பாவனையினால் ஒன்றேயாய்
அன்பு வடிவமாயினமையின் அவர்க்குக் குருதி பாயப்பாய இவர்க்குச்
சோகம் நீடிற்று என்பதும் குறிப்பு.

     நிறைமலர்ப்பாதம் - மலர் நிறை பாதம் என்க. "நின்போ
லமரர்கணீண்முடி சாய்த்து நினைந்துகுத்த, பைம்போ துழக்கிப் பவளந்
தழைப்பன