பாங்கறியா யென்போ
லிகள்பறித் திட்ட விலையு முகையுமெல்லா, மம்போ
தெனக்கொள்ளுமையனை யாறனடித்தலமே" (திருவிருத்தம்) என்றபடி
மேலாகிய விண்ணவர்களும் அவரின் மேலாகிய அடியவர்களும் நிறைய
இட்ட மலர்களையுடைய பாதம் என்பது. "அட்டபுட்ப மவைகொண்டடி
போற்றி நல்ல, கரியவனான் முகனும் மடியும் முடியும் காண்பரிய, பரியவன்"
(நட்டராகம் - பழமண்ணிப் படிக்கரை - 8) என்ற நம்பிகளது தேவாரமும்
காண்க. "முடியால் வானவர்கள் முயங்குந் திருக்காளத்தியாய்" என்ற
ஆளுடையபிள்ளையாரது இத்தலத் தேவார (7) மும், "கடவுள்மால் வரையி
னுச்சியதிர்தரு மோசை யைந்து" (750) என்றதும் இம்மலையிற்றேவர்
பூசித்தலை உணர்த்துவன. அன்று காலை சிவகோசரி முனிவர் அருச்சித்த
நிறைந்த பூக்களையுடைய பாதம் என்றலுமாம். யாங்கணும் நிறைந்த
செந்தாமரை மலர்போன்ற பாதம் என்றலும் பொருந்தும். இதற்கு, மணம்
நிறைந்த மலர்போனற் பாதம் என்றும், தேன் நிறைந்த மலர்போன்ற என்றும்,
தமது உள்ளக்கமலத்தில் நிறைந்த என்றும் பற்பலவாறுரைப்பாருமுண்டு.
மாடுஉறக்
கட்டிக்கொண்டு - திருமேனியின் பக்கம் பொருந்தத்
தழுவிக் கட்டிக்கொண்டு.
கதறுதல்
- பெருந்துக்கத்தால் ஓலமிட்டுக் கதறுதல்.
வார்தல் -
பெருகுதல். ஓழுகுதல். ஓலமிட்டுக் கதறும் வகை மேல்வரும் பாட்டிற்
கூறுவார்.
"பார்த்து நடுக்குற்றுப் பதைத்து மனஞ்சுழன்று,
வாய்ப்புனல் சிந்தக்
கையிலூனொடு கணைசிலை சிந்த" (814), நிலம்படப் புரண்டு நெடிதினிற்
றேறிச் (815), சிலைக்கொடும் படைகடி தெடுத்துப் படுத்தவ,
ரடுத்த
விவ்வனத் துளரெனத் திரிந்தாஅங், கின்மை கண்டு (815 - 816 - 817),
நன்மையிற் றக்கன மருந்துகள் பிழியவும் பிழிதொறு,
நெக்கிழி குருதியைக்
கண்டு நிலைதளர்ந் (819 - 820 - 821) தென், னத்தனுக் கடுத்ததென்
னத்தனுக் கடுத்த தென் னென், றன்பொடு கனற்றி" (817 - 818) என்று
திக்கண்ணப்பதேவர் திருமறத்தில் நக்கீரதேவர் அருளியதனை ஆசிரியர்
விரித்தருளிய திறங் காண்க. 168
818.
(வி-ரை.) பாவியேன் கண்டவண்ணம் - நான் பாவியாதலின்
என்கண்கள் இது கண்டன; அவை கண்டவாறு என்னோ அடுத்தது? என்க.
"கொடியேன் கண்கள் கண்டன கோடிக் குழகீர்" என்ற ஆளுடையநம்பிகளது
தேவாரக் கருத்தை இங்கு வைத்துக் காண்க. "நான்பாவிய னானாலுனை
நல்காயெனலாமே" என்ற திருவாசகமும் காண்க. உலக வழக்கிலும், தம்மால்
அன்பு செய்யப்பட்டார்க்கு ஓர் தீங்குவரக் காணில் அதனைத் தம்மேல்
ஏற்றிப் பாவியேன் - எண்கண் செய்த பாவம் - என்ககை செய்த பாவம் -
என்றிவ்வாறு வைத்து வழங்குவதும் கருதுக. நான் தீயசகுனங் கண்டவண்ணம்
என்றலுமாம்.
அடுத்தது
என்னோ? - வந்து அடுத்தது என்? யாது காரணம்
பற்றியது? ஓகாரம் இரக்கப்பொருளில் வந்தது.
ஆவியி
னினிய எங்கள் அத்தனார் - "என்னிலும் (எனக்கு)
இனியான் ஒருவன் உளன்" என்ற திருக்குறுந்தொகை காண்க. அத்தனார்
-
யாவர்க்குந் தந்தையார். இனியராதற்குக் காரணங் குறித்தபடி.
எங்கள் -
மேற்பாட்டில் எம்பிரான் என்றதுபோல வாளா
பெயராய் நின்றது. தமது
சிறப்புரிமை பற்றியது என்றலுமாம்.
மேவினார்
பிரியமாட்டா விமலனார் - விமலன்
- மலமற்றவர்.
பிரியமாட்டாமைக்குக் காரணங் கூறியபடி. மலமாசில்லாதவராதலின், மேவிக்
கண்டார் காதலிக்கவும் பிரியாதிருக்கவும் உள்ளவர் என்பது. 806 - ம்
பாட்டிற் கூறியபடி தம் அறிவிச்சை செயல்கள் அவனுடையனவேயாகி
விளங்கியவர் திண்ணனாராதலின் அவர் திருவாக்கில் வைத்து இறைவர்
தமதுண்மையை விளக்குகின்றார்.
|