பக்கம் எண் :


கண்ணப்பநாயனார்புராணம்1051

 
அநுபந்தம்
 

   இப்புராணத்திற் காணப்படும் இடைச்செருகல்கள் (பக்கம் 1019)

     806-ம் பாட்டின்கீழ்ச் சில பிரதிகளில் கீழ்வரும் இவ்வைந்து
பாட்டுக்களும் காணப்படுகின்றன. இவை வெள்ளி பாடல்கள் என்னும்
இடைச்செருகல்களாம் என்பது பல பெரியோர்களின் துணிபு. பல பிரதிகளில்
இவை காணப்படவில்லை. ஆதலின் பல பதிப்புக்களிலும் இவற்றைப்
புராணத்திற் சேர்த்துப் பதிக்காமலே விடுத்தனர். தி. க. சுப்பராயச்
செட்டியார் பதித்த கண்ணப்ப நாயனார் புராண உரைப்பதிப்பிதில்
இப்பாடல்களைச் சேர்க்காது முடித்து, இறுதியில் இவற்றை மூலபாடமாக
மட்டும் "வெள்ளிக் கவிகள்" என்று தலைப்பிட்டு அச்சிட்டு, "இவ்வைந்து
செய்யுள்களும் சேக்கிழார் நாயனார் அருளிய செய்யுள்களல்லாமையால்
அவற்றோடு சேர்க்காமலும் பொருளெழுதாதும் விட்டனம்" என்று குறிப்பும்
எழுதியுள்ளார். இவைபற்றி 806 உரையின் கீழ் எழுதிய அடிக்குறிப்பும்
காண்க. அன்பர்கள் பார்வைக்காக இப்பாடல்கள் மட்டும் சில
குறிப்புக்களுடன் இங்குத் தரப்படுகின்றன.

1.
பொருப்பினில்வந் தவன்செய்யும் பூசனைக்கு முன்பென்மே
லருப்புறுமென் மலர்முன்னை யவைநீக்கு மாதரவால்
விருப்புறுமன் பெனும்வெள்ளக் கால்பெருகிற் றெனவீழ்ந்த
செருப்படியென் னினம்பருவச் சேயடியிற் சிறப்புடைத்தால்.

     குறிப்பு :- இளம்பருவச் சேய் - முருகன். "செருப்படி யாவன
விருப்புறுதுவலே" என்பது திருமறம். கடல்பெருகிற்றென - எம்மிளம்
என்பனவும் பாடங்கள்.

2.
உருகியவன் பொழிவின்றி நிறைந்தவவ னுருவென்னும்
பெருகியகொள் கலமுகத்திற் பிறங்கியினி தொழுகுதலா
லொருமுனிவன் செவியுமிழு முயர்கங்கை முதறீர்த்தப்
பொருபுனலி னெனக்கவன்றன் வாயுமிழும் புனல்புனிதம்.

     குறிப்பு :- "எழிலவன் வாயது தூயபொற் குடமே, யதனிற் றங்குநீர்
கங்கையின் புனலே" என்ற திருமறக் கருத்துக்காண்க. ஒரு முனிவன் - சந்து
முனிவன். பகீரதன் சிவபெருமானை வேண்டிக்கொணர்ந்த கங்கை, செல்லும்
வழியில் தவஞ் செய்துகொண்டிருந்த சந்நுமுனிவனது ஆசிரமத்தினூடு
சென்றதனால் அதனை அவன் குடித்துவிட்டனன் எனவும், பின்னர்ப் பகீரதன்
வேண்டத் தன் செவியின்வழியே அதனை மீளவிட்டனன் எனவும்
அதனாற்கங்கைக்குச் சாநவி என்று பெயர்வந்தது எனவும் புராணங்கள்
கூறும். கங்கையினும் திண்ணனாரது வாய்நீர் புனிதமென்ற இப்பாட்டின்
கருத்து 666-ம் பாட்டிற்காண்க. செவியிலுமிழ் - என்பதும் பாடம்.

3.
இம்மலைவந் தெனையடைந்த கானவன்ற னியல்பாலே
மெய்ம்மலரு மன்புமேல் விரிந்தனபோல் விழுதலாற்
செம்மலர்மே லயனெடுமான் முதற்றேவர் வந்துபுனை
யெம்மலரு மவன்றலையா லிடுமலர்போ லெனக்கொவ்வா.

     குறிப்பு :- இப்பாடல் " அவன் றலைத் தங்கிய சருகிலை தருப்பையிற்,
பொதிந்த வங்குலி கற்பகத் தலரே" என்ற திருமறத்தின் கருத்தையே
கொண்டது காண்க. அயனொடுமால் - என்பதும் பாடம்.

4.
வெய்யகனற் பதங்கொள்ள வெந்துளதோ வெனுமன்பா னையுமனத் தினிமையினி னையமிக மென்றிடலாற்
செய்யுமறை வேள்வியோர் முன்புதருந் திருந்தவியி
லெய்யும்வரிச் சிலையவன்றா னிட்டவூ னெனக்கினிய.