கொண்டார். தூய நறிய
பூ இலைகளைத் தமது குடுமிமேற் செறிய
வைத்துக் கொண்டனர். ஒரு கையில் வில்லும் அம்பும் மற்றொருகையில்
ஊனமுதக் கல்லையும் ஏந்தினர். தேவர் மிகப்பசித்திருப்பார் என்று இரங்கி
மிக விரைவாக மலையை அடைந்தனர். பசியால் நாயனார் இளைத்தனர்
என்று எண்ணி விரைவாகச் சென்று அவரது திருமுடியில் இருந்த
மலர்களைத் தமது காலில் வளைத்த அழகிய செருப்பினால் மாற்றினர்.
வாயிற் கொண்ட திருமஞ்சன நீரை விளைத்த அன்பை உமிழ்வார் போல
அவரது திருமுடி மேல் விட்டார். தம் குஞ்சியிலே கொண்டுவந்த
திருப்பள்ளித் தாமத்தை அவரது திருமுடியிலே வணங்கிச் சாத்தினர்;
ஊனமுதக் கல்லையைத் திருமுன்னர் வைத்துக் "கொழுத்த தசைகளைத்
தெரிந்து கோலிற் கோத்து, அனலிற் பதத்திற்காய்ச்சிப், பல்லினால் அதுக்கி,
நாவினாற் பழகிய இனிமையும் பார்த்து நான் படைத்த இவ்விறைச்சி மிக
இனியது. நாயனீரே! தேவரீர் அமுது செய்தருளும்" என்று சொல்லித்
தேவரை ஊட்டினார்.
முதல்
நாள் இரவு
இவ்வாறு
பூசைசெய்த திண்ணனார் மேலும் இறைச்சியை அவருக்கு
ஊட்ட வேண்டும் என்று விரும்பி ஆசைகொண்டனர். அது கண்டவன்
போலச் சூரியன் மலையிற்றாழ்ந்தான். அந்திமாலையும் அணைந்தது. இரவில்
விலங்குகள் வந்து தீமைசெய்யும் என்று அஞ்சியவராய்த் திண்ணனார்
உண்மையன்பு தாங்கிக் கையிற் சிலையும்தாங்கி, இறைவர் பக்கத்தில் நின்று
இரவு முழுதும் உறங்காது காவல்புரிந்தனர். பெருமுனிவர்களும் தேவர்களும்
மலையிலும் காட்டிலும் சேர்ந்து பெருந்தவம் செய்தும் காணுதற்கரிய
இறைவரை ஆராத அன்பினில் நேர்பெறக் கண்டுகொண்டே நீண்ட இருள்
நீங்க நின்றார். முத்து, செம்மணி முதலியவைகள் எங்கும் மின்னின; பச்சை,
நீலம் முதலியனவும் விட்டுவிட்டு ஒளி வீசின; சோதிமரங்களும், முழைகளில்
விளக்காக மந்திகள் வைத்த மணிகளும், மாமுனிவர்களது அரும்பெருஞ்
சோதியும் பேரொளி செய்தன. ஆதலின் எந்தையாரது திருக்காளத்தி
மலையில் இரவொன்றில்லை.
இரண்டா
நாட் சிவகோசரியார் பூசை
இரவு
நீங்கப் புட்கள் சிலம்பும் ஒசை கேட்டுப் புலர் காலையில்
உருமிகத் தெரியாப்போதில் தேவரைத்தொழுது வில்லேந்தி, அவர்க்கு
அமுதுகொண்டு அணைவதற்காகத் திண்ணனார் போயினர். சூழ்ந்திருந்த
கருந்திரையை நீக்கிக் கைகாட்டுவானைப்போலக் கதிர்காட்டி ஞாயிறு
எழுந்தனன். அப்போது, காளத்திநாதரை ஆகமவிதிப்படி
பூசித்துவரும்
தவமுடைய சிவகோசரி முனிவர் வழக்கம்போலப்
பூசை செய்தற்பொருட்டுப்
பூவும் நீரும் பிறவுங்கொண்டு அணைந்தனர். சிந்தை நியமத்துடன் திருமுன்பு
செல்கின்றபோது அவர் அங்கு வெந்த இறைச்சியும் எலும்பும்
கிடக்கக்கண்டார்; அகலத்தாண்டி மிதித்தோடினர்; "ஒ கெட்டேன்! யாவர்
இவ்வநுசிதம் செய்தனர்? திருமுன்பு நேர்வர அஞ்சாத வேடரே இது
செய்திருத்தல் வேண்டும்; தேவதேவீசனே! உமது திருமுன்பிலேயும் இது
செய்து அவர்கள் பேரவதா? இதற்குத் தேவரீர் திருவுள்ளம் இசைவதா?"
என்று அழுதார்; விழுந்தார்; அலமந்தார். அதன்பின் பூசையினைத்
தாழ்க்காது செய்யும் பொருட்டுத் திருவலகால் அந்த இறைச்சியெலும்புக்
கல்லையினையும், செருப்படிச் சுவட்டினையும், நாயடிச்சுவட்டிளையும்
மாற்றினர். பின்னர்த் திருப் பொன்முகலியில் மூழ்கி விரைந்து வந்தனர்.
புகுந்த அத்தீங்கை நீக்கும் பவித்திரமாகிய செயல் செய்து தொழுது
அற்றைக்கு அங்குப் பெருவனவற்றைக் கொண்டு திருமஞ்சன முதலிய பூசை
முழுதும் முறையாசக் செய்து முடித்து இறைவனை வணங்கினர். "தனிமுதலாம்
பரன்" என்று பன்முறையும் துணிந்த மறைமொழிகளாலே துதி செய்து
இறைவனிடம் விடைபெற்றுக்கொண்டு தபோவனத்திற் போயினர்.
|