949
|
முத்திரையே
முதலனைத்து மறைத்தானஞ் சோதித்து
வைத்ததுளை யாராய்ச்சி வக்கரனை வழிபோக்கி
யொத்தநிலை யுணர்ந்ததற்பின் னொன்றுமுதற்
படிமுறையாம்
அத்தகைமை யாரோசை யமரோசை களினமைத்து, |
24 |
|
|
|
950.
|
மாறுமுதற்
பண்ணின்பின் வளர்முல்லைப் பண்ணாக்கி
யேறியதா ரமுமுழையுங் கிழமைகொள விடுந்தானம்
ஆறுலவு சடைமுடியா ரஞ்செழுத்தி னிசைபெருகக்
கூறியபட் டடைக்குரலாங் கொடிப்பாலை யினினிறுத்தி,
|
25 |
|
|
|
951.
|
ஆயவிசைப்
புகனான்கி னமைந்தபுகல் வகையெடுத்து
மேயதுளை பற்றுவன விடுப்பனவாம் விரனிரையிற்
சேயவொளி யிடையலையத் திருவாள னெழுத்தஞ்சுந்
தூயவிசைக் கிளைகொள்ளுந் துறையஞ்சின்
முறைவிளைத்தார், |
26
|
|
|
|
952.
|
மந்தரத்தும்
மத்திமத்துந் தாரத்தும் வரன்முறையாற்
றந்திரிகண் மெலிவித்துஞ் சமங்கொண்டும் வலிவித்தும்
அந்தரத்து விரற்றொழில்க ளளவுபெற வசைத்தியக்கிச்
சுந்தரச்செங் கனிவாயும் துளைவாயும் தொடக்குண்ண, |
27
|
|
|
|
953.
|
எண்ணியநூற்
பெருவண்ண மிடைவண்ணம்
வனப்பென்னும்
வண்ணவிசை வகையெல்லா மாதுரிய நாதத்தில்
நண்ணியபா ணியுமியலுந் தூக்குநடை முதற்கதியிற்
பண்ணமைய வெழுமோசை யெம்மருங்கும் பரப்பினார். |
28 |
947.
(இ-ள்.) வெளிப்படை.
அன்பினில் உள்ளே ஊறி மேலே
பொங்கும் அமுதமாகிய இசையினைத் தருகின்ற குழல் ஒலியினாலே, வலிய
பூதகணப்படையை ஆளும் சிவபெருமானுடைய திருவைந்தெழுத்தையும்
துதித்துத், தாம் முன்பு ஊதிவரும் அளவின் முறைமைப்படியே,
எவ்வுயிர்களையும் எலும்பும் உள்ளே நைந்து உருக்கவல்லதாகிய இனிய
இசை தரும் வேய்ங்குழற்கருவிகளில், 22
948.
(இ-ள்.) வெளிப்படை. ஏழுவிரல்கள் இடையீடுபடத்
துளையிட்ட
இன்னிசை வங்கியத்தை எடுத்து, தாழ்கின்ற மலர்களில் வண்டுகள் தாது
பிடிப்பது போலச் சூழ் துளைகளிலும், முரலுதலும், எழுதலும் நிற்றலும்
செய்து, தூய பெரிய தனித் துளையில், வாழியாராகிய நமது தோன்றலார்
அழகிய அதரத்தை வைத்து ஊத, 23
949.
(இ-ள்.) முத்திரையே........சோதித்து
- முத்திரைத் துளை முதலாக
முறையாகிய தானங்களை ஆராய்ந்து; வைத்ததுளை.............போக்கி - இசை
நூல்களில் விதித்த அளவில் அமைத்துவைத்த ஏனைத் துளைகளை
ஆராய்ச்சி செய்வதாகிய வக்கரனையின் வழிப்பட விரல்களைமுறையிற் போக்கி; ஒத்தநிலை
உணர்ந்ததற்பின் இசையொத் திருத்தலை அறிந்து
கொண்ட பின்னர்; ஒன்று முதல் படிமுறையாய் சட்சம் முதல் நிடாதம்
வரைக்கும் வரிசையாக; அத்தகைமை......அமைத்தார் - அத் தன்மையாக
எச்சும் தக்கும் ஆகிய ஓசைகளில் அமைத்தருளி, 24
950.
(இ-ள்.) மாறுமுதற் பண்ணின்பின் - மாறிவரும் சுரங்களையுடைய
குறிஞ்சிப் பண்ணின் பின்னே; வளர்முல்லைப்பண் ஆக்கி - வளரும்
முல்லைப்
|