பக்கம் எண் :


ஆனாயநாயனார்புராணம்1217

 

பண்ணினை ஆக்கி; ஏறிய தாரமும் உழையும் - பாலையாழுக்கமைந்த
தாரமும் உழையும்; கிழமை கொள இடும் தானம் - கிழமை கொள்ளும்படி
இடுகின்ற தானங்களில்; ஆறு...............பெருக - கங்கையாறு உலவுதற்
கிடமாகிய சடைமுடியுடைய சிவபெருமானது திருவைந் தெழுத்தின் இசை
பெருகும்படி; கூறிய பட்டடைக் குரலாம் - சொல்லப்பட்ட இளியைக்
குரலாகவுடைய; கொடிப்பாலையினில் நிறுத்தி - கொடிப்பாலையில் நிறுத்தி,
25

     951. (இ-ள்.) ஆய.......நான்கின் - உளவாகிய இசையின் புகல்
நான்கினிலும்; அமைந்த.....எடுத்து - கொடிப்பாலைக் கமைந்த கூறுபாடாகிய
திறத்தினை எடுத்து; மேய......நிரையில் - சுரம் எழும்பும் ஏழு துளைகளில்
விரல்களைப் பொத்துவதும் விடுப்பதுமாகிய வரிசையின் செயல்களினால்;
சேய ஒளி இடை அலைய - இசையின் செவ்விய ஒளி இடையிலே சஞ்சரித்து
விளங்க; திருவாளன் எழுத்து அஞ்சும் - சிவபெருமானது திருவைந்
தெழுத்தும்; தூய இசைக்கிளை கொள்ளும் - தூய்மையான இசையின் ஏற்ற
பகுப்பினைக் கொள்கின்ற; துறை அஞ்சின்முறை விளைத்தார் - ஐந்து
துறைகளின் ஏற்ற முறையினை விளைவித்தாராகி, 26

     952. (இ-ள்.) மந்தரத்தும் மத்திமத்தும் தாரத்தும் - மெலிவு சமன்
வலிவு என்ற மூவகைச் சுருதியிலும்; தந்திரிகள்.......வலிவித்தும் -
சுரத்தானத்துக்குரிய துளைகளை முறையே மென்மையாகவும் சமமாகவும்
வன்மையாகவும் பொத்தி; அந்தரத்து.......இயக்கி - இடையிட்ட துளைகளை
உரியஅளவு பெறும்படி அசைத்தும் இயக்கியும்; சுந்தரம்......தொடக்குண்ண -
அழகிய சிவந்த கனிபோன்ற அதரமும் குழலின் துளைவாயும் ஒன்றுபட்டுக்
கூடி யிணங்க, 27

     953. (இ-ள்.) எண்ணிய......எல்லாம் - இசை நூல்களில் அளவுபடுத்திய
பெருவண்ணம், இடைவண்ணம், வனப்பு என்கிற இசைவகைகள்
எல்லாம்மதுரத்தையுடைய நாதத்தில்; நண்ணிய பாணியும் - அமைந்த
தாளமும்; இயலும் - இசையும்; தூக்கும் - தூக்கும்; நடைமுதற்கதியில் - நடை
முதலிய கதிகளுடன்; பண்.........பரப்பினார் - பண் பொருந்த எழுகின்ற
ஓசையை எல்லாப் பக்கங்களிலும் பரவச் செய்தார். 28

     இந்த ஏழு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.

     947. (வி-ரை.) அன்பு ஊறி - அன்பினில் உள்ளூறி. இசை அமுது
என்க. உருவகம். முன்னரும் இசையமுது (939) என்றார். ஆண்டுரைத்தவை
பார்க்க.

     குழல் ஒலியால்..........தாம் - முன்பு ஊதிவரும் அளவில் - முன்பு
-
இந்நாளினுக்கு முன்னாட்களில்; ஊதிவரும் அளவின் முறைமையே -
நியதியானபடி அம்முறையாலே அந்த அளவும் முறையும் 939ல் கூறினார்.

     எவ்வுயிரும்......இன்இசை - முன் இதனைத் "தடுத்த
சராசரங்களெல்லாந் தங்க வரும் தங்கருணை அடுத்த இசையமுது" (939)
என்றார். ஏனை இசைகள் யாவும் செவிப்புலனுக்கு விடயமாய் அம்மட்டில்
மனத்தினாற் கொள்ளப்பட்டு ஓசை யின்பத்தை விளைத்து ஒழிவன. இந்த
இசை அவ்வாறொழியாது உயிரினுக்கும் சிறந்த நன்மையாகிய இன்பந்
தரத்தக்கதாய் மனத்தினையும் கடந்து உயிரினுட் புகுவது; எலும்பையும்
கரையச்செய்து உருக்குவதாகும் என்பது. இதனை மேல் 961, 962ல் முடித்துக்
கூறுவதும் காண்க. இது உயிர்க்கு உறுதி தரும் திருவைந்தெழுத்தினை
உள்ளுறையாகக் கொண்டமை இச்சிறப்புக்குக் காரணமாம்.

     வேய்ங்கருவிகளின் - பலவகைப்பட்ட மூங்கில்களினாற் செய்யப்படும்
பலவகைப்பட்ட இசைக்கருவிகள் பலவற்றுள்ளும் தேர்ந்தெடுத்த குழல் என்க.
கருவிகளில் - இன்னிசை வங்கியம் எடுத்து என வரும்பாட்டுடன் கூட்டி
முடிக்க. 22

     948. (வி-ரை.) ஏழுவிரல் இடை இட்ட - இடையிடையே ஒவ்வொரு
விரற்கிடை அளவாக இடம் விட்ட எட்டுத்துளைகளையுடைய.