|
போலக், குழலினுள்
விரற்றொழில் வகையினால் ஏழிசையும் பிறத்தலால்
விரலினை முதலில் எடுத்தோதி ஏழு விரலிடை யிட்ட ..........வங்கியம்
என அத்தன்மை பற்றிக் குழலினைக் கூறினார். இதுபற்றியே "மேயதுளை
பற்றுவன விடுப்பனவாம் விரனிரையில்" (951) எனவும், "விரற்றொழில்க
ளளவுபெற வசைத்தியக்கி" (952) எனவும் பின்னர் விரித்துக் கூறுவார்.
தாழுமலர்..........நின்று
- தாழும் - மேலிருந்து பாய்ந்து தாழும்.
விரும்பும் என்றலுமாம். வண்டு தாது பிடிப்பனபோலச் சூழுமுரன்றெழ
நின்று என்றது மலர்களில் வண்டுகள் மொய்த்து அவற்றின் தேன்உண்ணவும்,
தாதுக்களை எடுத்துச்செல்லவும் சூழும் முரலுதல், எழுதல், நிற்றல் என்ற
செயல்கள் செய்தலைக் குறித்தது. தாது -
மகரந்தம். தாது பிடித்தல்
என்பது தாது நுண்பொடிகளை ஏற்றபடி எடுத்துக் குழைத்துச்
சேர்த்துக்கொண்டுபோதல். தாதுப் பொடிகளினால் வண்டுகள் தமது தேன்
கூடுகளை அமைக்கும் என்ப. அதன் பொருட்டுத் தாதுத் தூள்களை
ஒவ்வொன்றாக மலர்களின் கேசரங்கள் என்ற பூந்தாள்களின்று எடுத்து
ஒன்று திரட்டிக்கொண்டு செல்வதற்கு உரிய கால அளவுவரை வண்டுகள்
பலமலர்களையும் சூழ்ந்து முரன்றும், எழுந்தும், நின்றும் தொழில் செய்யும்.
இத்தொழில்களாற் பலதிறப்பட்ட சுரங்கள் போன்ற ஓசைஎழும்பும். ஆதலின்
இங்கு இதனை உவமை கூறினார். வினைபற்றிவந்த உவமம். முரலுதல்
-
ஊதுதல். இது தாதுக்களைப் பூந்தாள்களினின்றும் பிரித்தெடுத்தற்கும் உதவும்.
பிடிப்பனபோல - ஊத என்று கூட்டுக. இதனால்
விரலுளர்துளை ஏழின்
றொழில் கூறினார்.
தூய
பெருந் தனித் துளை - இதனை முத்திரை என்பர். நாயனாரது
மணியதரம் வைத்து ஊதப்பெற்றமையால் தூய (துளை) என்றும், ஏனைத்
துளைகளினும் பெரிதாதலின் பெருந் (துளை)
என்றும், அவற்றினின்றும்
தனியே அமைக்கப்படுதலின் தனித் (துளை)
என்றும் கூறினார். வாழிய -
வாழும்பொருட்டு. 273 பார்க்க. இவரது இசை உயிர்களை வாழ்வித்தல் 939,
961, 962ல் கூறப்பட்டன. தோன்றல் - தலைவர்.
நாயனார் என்ற
சொற்பொருளை நினைவூட்டுவார் நம் தோன்றலார்
என்றார். ஆயர்தலைவர்
என்றலுமாம். 937, 943 பார்க்க. மணியதாம் - அழகிய உதடு. தனித்
துளையில் - வைத்தூத என்ற இதனால் ஊதுதுளையின் றொழில் கூறினார்.
தாவிப்
பிடிப்பன - என்பதும் பாடம். 23
949.
(வி-ரை.) முத்திரையே.......சோதித்து
- முத்திரை -
வளைவாய்க்கடுத்த எட்டாவது துளை. முறைத்தானம்
- அனைத்தும் என்க.
முறைத்தானங்களாவன முத்திரை நீக்கிச் சுரங்கள்
பிறக்கும் ஏனை ஏழு
துளைகள்.
வைத்ததுளை
- ஏற்ற கருவியும் துளைகளும் இசை நூலிலக்கணப்படி
அமைதலைத் தெரிந்து இட்ட துளைகள். 938ல் விரித்தபடி அமைத்த
துளைகள் என்க.
ஆராய்ச்சியாகிய
வக்கானை என்க. வக்கரனை வழிபோக்கி-
சோதனைசெய்ய விரல்களை முறையே செலுத்தி. வக்கரனை
- எல்லா
இராகங்களும் குழலின் ஆறு துவாரங்களாலேயே உண்டாகும்படி விரல்களை
முறையே செலுத்திச் சமஞ்செய்து சோதித்தல். இசைநூல் மரபுப்பெயர்.
வழிபோக்குதல் - சுரங்களின் வரிசைபெற
விரல்களை முறையே மெலிந்தும்
சமஞ்செய்தும் வலிந்தும் பொத்துதல். இதனைப் "பற்றுவன விடுப்பனவாம்
விரனிரையில்" (951) என்பது காண்க.
ஒத்தநிலை
- அவைகள் ஒத்து நிகழும் நிலைமை. இசை மாறுபடாமல்
ஒத்திருத்தல்.
ஒன்று
முதல் படிமுறை - சட்சம் முதல் நிடாதம் வரை உள்ள
ஏழுசுரங்களின் படிமுறையாகிய வரிசை. முத்திரைக்கடுத்த துளை சட்சம்;
அதற்கடுத்தது இடபம்; அதற்கடுத்தது காந்தாரம்; அதற்கடுத்தது மத்திமம்;
அதற்கடுத்தது பஞ்சமம்; அதற்கடுத்தது தைவதைம்; அதற்கடுத்தது நிடாதம்
என்னும் படிமுறை கொள்ளப்படும். இசைகள் பிறக்குமிடத்துத் தாரத்தில்
உழையும், உழையிற்
|