கொள்க. புடைபெயர்ந்து
ஒன்றை யொன்று பரம்பரையிற் றொடர்ந்து சென்று
மறைவது ஒலியலைகளின் இயல்பு. நீரினுட் போகட்டதொரு கல்லினால்
முதலில் அதனைச்சுற்றி மூண்ட அலைகள் உளவாம். பின் அவற்றைத்
தொடர்ந்து தளர்ந்த அலைகள் உளவாம். பின்னர் அவ்வாறு மெலிந்து
கொண்டே சென்று இறுதியில் ஒன்று மசையாமைபோல அவை மிக மெலிந்து
காணப்படும். அது போலவே ஒலியலைகளும் உண்டாகும் இடத்தினின்றும்
மேன்மேற் கிளம்பிச் சென்று சென்று இறுதியில் அதி சூக்குமமாகிய
காரணத்தில் ஒடுங்கும். இங்கு ஆனாயர் குழலிசை ஓசை முதலிற் றூலமாகிய
ஒலியலைகளாக எம்மருங்கும் பரவி வையத்தை நிறைத்து, அதன்பின் சூக்கும
ஒலியலைகளாகமேற்பரவி வானத்தைத் தன் வயமாக்கி, அதன்மேல்
அதிசூக்குமமாகிய காரண ஒலியுருவில் ஐயர் திருச்செவியின் அருகு
அணையும்படி பெருகியது. அலைகள் முதலில் நாற்புறமும் சுருங்கக் கிளம்பிப்
பின்னர் மேன் மேல் விரிவாகப் பெருகுமியல்பு பற்றிப் பெருகியதால் என்ற
குறிப்பும் காண்க. முன்னர் "எம்மருங்கும் பரப்பினார்" (963) என்றதும்
நினைவு கூர்க.
இஃது
எல்லாக் குழலோசைகட்கும் எல்லா ஓசை ஒலிகட்கும்
இயல்பாமே? எனின், அற்றன்று; பூதசம்பந்தமாய் வையந்தன்னை நிறைத்த
மட்டில் நின்று ஒழியும் ஏனைத் தொனியான்மக ஓசைகள் போலல்லாமல்
இஃது அஞ்செழுத்தை உள்ளுறையாகக் கொண்டொழுகிய வர்ணான்மக
ஓசையானதால் ஐயன் றிருச் செவியி னருகணையப் பெருகியதென்க.
ஆனாயரது குழலிசை இம்மை, மறுமை, வீடு என்னு மூன்றினையும்
தரவல்லதாயிறறென்பதாம். வைய நிறைத்ததனால் இம்மையும், வானம்
தன்வயமாக்கியமையால் மறுமையும், ஐயன்றிருச் செவியினருகணைதலால்
வீடும் அளிக்கவல்லதாயினமை கூறப்பட்டது. இறைவனைப் பாடுதல்
இம்மூன்று பயன்களையும் அளிக்கவல்லதென்பது "எந்தை புகலூர் பாடுமின்
புலவீர்காள், இம்மையேதருஞ் சோறுங் கூறையும்; ஏத்த லாமிடர் கெடலுமாம்,
அம்மை யேசிவ லோக மாள்வதற் கியாதுமையுற வில்லையே" (பண் -
கொல்லி - திருப்புகலூர் 1) என்ற ஆளுடைய நம்பிகள் திருவாக்கா னறிக.
பொய்யன்புக்
கெட்டாத - ஐயன் - எனக் கூட்டுக. "பொக்க
மிக்கவர் பூவு நீருங் கண்டு, நக்கு நிற்ப னவர்தமை நாணியே" என்பது
தமிழ்மறை. ஐயனது பொற்பொது என்றது மெய்ஞ்ஞானமேயான அம்பலத்தை.
எட்டாத பொற்பொது என்று கூட்டி உரைத்தலுமாம்.
பொற்பொது -
பொன்னம்பலம்.
மெய் அன்பு - மன மொழி மெய்என்ற மூன்றானும்
சிவபெருமானையல்லாது வெறொன்றினையும் பற்றாத அன்பு. அங்ஙன
மல்லாது தம்மையும் உலகையுமே பற்றுக்கோடாகக் கொண்டு செலுத்தும்
அன்பு பொய்யன்பாம்.
ஐயன்றிருச்
செவியி னருகணையப் பெருகுதலாவது கீழுள்ள
தத்துவங்களை யெல்லாம் கடந்து சுத்த தத்துவத்தில் விளங்கும்
இறைவனிடமும் செல்லும்படி வியாபித்தல்.
ஆயின்,
"சகஸ்ர சீரிஷாத் புருஷ சகஸ்ராட்ச சகஸ்ரபாத்" எனவும்,
ஆயிர ஞாயிறு போலு மாயிர நீண்முடி யானும்" (அப்பர் சுவாமிகள் -
காந்தாரம் - திருவாரூர் - 8) எனவும், ஆயிரங் கமல ஞாயி றாயிரமுக்
கண்முக கரசர ணத்தோன்" (திருவிசைப்பா - சேந்தனார் - வீழி - 8)
எனவும், "எங்கும் திருமேனி" (திருமூலர்) எனவும், "எங்கணும்
பணிவதனங்கள்" (கந்தபுரா) எனவும், "எங்குஞ் செவியுடையாய்" (திருவிளை -
புரா -) எனவும் வரும் திருவாக்குக்களா லறியப் படுகின்றபடி எங்கும்
நிறைந்து எல்லாம்கேட்பது இறைவனது தன்மையாதலின், இங்கு "ஐயன்
றிருச்செவியி னருகணையப் பெருகியது" என்ற தென்னையோ? எனின்,
"அவன் மற்றிவ்விடங்களிற் பிரகாசமாய் நின்றே அல்லாதவிடத்து அப்.
|