பக்கம் எண் :


1234 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 

பிரகாசமாய் நிற்றலான்" (சிவஞானபோதம் - 12 - சூத். 3 அதி) என்ற
ஏதுவை விளக்குவாராகி, "அம்முதல்வன் யாங்கணும் வியாபகமாய் நிற்பினும்
இவ்விரண்டுடிடத்து (பத்தரது வேடமும் சிவாலயமும்) மாத்திரையே
தயிரின்நெய் போல விளங்கி நிலைபெற்று, அல்லுழியெல்லாம் பாலினெய்
போல வெளிப்படாது நிற்றலான்" என்று எமது மாதவச் சிவஞான சுவாமிகள்
சிற்றுரையினுள் உரைத்தது கொண்டு இஃது அமைவுபடுத்திக்கொள்ளத்தக்கது.

     அன்பின் விளைந்த இசையாதல் பற்றியே, இறைவரும், இது
கேட்டவுடன் வெளிப்பட்டுவந்தனர் என மேல்வரும் பாட்டிற் கூறுதலும்
கருதுக.

     திருச்செவி - என்பது அரன்றன் கரசரணாதி சாங்கமெல்லாம்
அருளே என்ப; ஆதலின் ‘சிவனடிசென்னி வைப்பாம்' என்பது போல
உபசாரம். இறைவனுக்கு அருளே திருமேனியாம். அத்திருமேனியில் கண்
செவி முதலாகிய அவயவப் பகுப்பெல்லாம் அருளே. இக்கருத்துப்பற்றியே
"இத்தன்மை நிகழுநாளிவர் திருத்தொண் டிருங்கையிலை, யத்தர்திரு
வடியிணைக்கீழ்ச் சென்றணைய வவருடைய, மெய்த்தன்மை யன்புநுகர்ந்
தருளுதற்கு விடையவர்தாஞ், சித்தநிகழ் வயிரவராய்த் திருமலைநின்
றணைகின்றார்" (25) என்று சிறுத்தொண்டநாயனார் புராணத்துட் கூறுதலுங்
காண்க. 37

963.



ஆனாயர் குழலோசை கேட்டருளி யருட்கருணை
தானாய திருவுள்ள முடையதவ வல்லியுடன் கானாதி
காரணராங் கண்ணுதலார் விடையுகைத்து
வானாறு வந்தணைந்தார் மதிநாறுஞ் சடைதாழ.



38

    (இ-ள்.) வெளிப்படை. ஆனாயரது குழலிசை ஓசையினைக் கேட்டருளி,
அருட்கருணையேயாகும் திருவுள்ளத்தினையுடைய தவவல்லியாகிய
உமையம்மை யாருடனே கூட இசைக்கெல்லாம் முதற்காரணராகின்ற
கண்ணுதலையுடைய சிவபெருமான், விடையின்மேல் எழுந்தருளிப்,
பிறைமுளைத்தற்கிடமாகிய டை தாழுமாறு வானவீதி வழியே வந்து
அணைந்தனர்.

     (வி-ரை.) அருட்கருணை...தவவல்லி - உமையம்மையார். சிவமும்
சத்தியும் தீயும் சூடும் போலக் குண குணியாய்ப் பொருந்திய ஒரே பொருள்
என்பதும், அருளே சத்தியாம் என்பதும் உண்மைநூற் றுணிபு; ஆதலின்
வல்லியுடன் என்றும், கருணைதான் ஆய என்றும் கூறினார். தானே
ஆகிய என்க. பிரிநிலை யேகாரம் தொக்கது. "அருளுண்டாம் ஈசற் கதுசத்தி"
என்பது சிவஞானபோதம்.

     அருட்கருணை - சிவனது திருவருட் பெருமையைத் தமிழ்மொழி
வழக்குப் பற்றி விளக்குவார் அருள் என்றும், வடமொழி வழக்குப்பற்றி
விளக்குவார் கருணை என்றும் கூறினார். "ஒரு பொருட் பன்மொழி
சிறப்பினின் வழா" என்ற விதிப்படி மிக்க பேரருள் குறித்த தென்றலுமாம்.
"அருள்வித் திட்டுக் கருணைநீர் பாய்ச்சி" (குமரகுருபரா) என்றதும் காண்க.
கருணை பாசநீக்கமும், அருள் சிவப்பேறும் தருவன என்று இங்கு
விசேடவுரை காண்பாருமுண்டு.

     தானாய திருவுள்ளம் - முற்றும் அருளேயாகிய திருவுள்ளம்.
அத்திருவுள்ளத்தில் நிகழ்வன அருளேயன்றிப் பிறிதில்லை என்பது.
"உருவருள்" (1, 47) என்ற சிவஞானசித்தியார்த் திருவாக்கும், "அருளே
யன்றி மற்றுப் புகன்றவையும் அருளொழியப் புகலொணாதே" (18) என்ற
சிவப்பிரகாசமும் இங்கு நினைவு கூர்க. தவவல்லி - தவமாவது சிவபூசை
என்பதனை உயிர்கள் அறிந்து சிவபூசை செய்து உய்யும் பொருட்டுத்
தவஞ்செய்து காட்டினர் என்றது குறிப்பு. வல்லி - கொடிபோல்வார்.
மெய்பற்றி வந்த உவமஆகுபெயர். கொடி கொம்பினைப்பற்றி நிற்பதுபோலச்
சிவத்தைப்பற்றி நிற்பது அவரது அருளாகிய சத்தி என்க. இங்கு
ஆனாயருக்கு அருள்செய்து தம் அருகு இருக்கும் நிலையைத்தர
வருகின்றாராதலின்