பக்கம் எண் :


ஆனாயநாயனார்புராணம்1235

 

கருணை வல்லியுடன் விடையுகைத்து வருகின்றார். முன் உரைத்தவை
பார்க்க.

     கான ஆதிகாரணர் என்பது கானாதி என வந்தது தீர்க்க
சந்தியென்ப. கானம் நாதத்தைப்பற்றிப் பிறக்கின்றது. சூக்குமமாகிய
நாதத்தைத் தமக்குத் திருமேனியாக உடையவராதலிற் சிவபெருமான்
கானத்துக்கு ஆதிகாரணராவர் என்பது கருத்து. எவ்வகைக்கீதத்துக்கும்
வேதத்துக்கும் பிரணவம் காரணம். சிவபெருமான் பிரணவ சொரூபன்;
ஆதலானும் ஆதிகாரணர் என்றார். "ஈசான : சர்வ வித்யானாம்" என்ற
பதிவாக்கியத்தா லறியப்படுகின்றபடி கானம் முதலிய எல்லா வித்தைகளுக்கும்
சிவனே இருப்பிடமும் பிறப்பிடமுமாயுள்ளவன் என்பதும் கருதுக. "நாததநு
மநிசம் சங்கரம் நமாமி" எனவும், "சத்தியோஜாதாதி டஞ்ச வக்த்ரஜ
ச ரி ம த நி ச
சப்தஜ்வர வித்யாலோலம்" எனவும் வழங்கும் தியாகராச
ஐயர் கீர்த்தனமும் காண்க.

     மதிநாறும் சடைதாழ - நாறுதல் - முளைத்தல். ஒரு
கலையினோடடைந்த பிறைச் சந்திரன் பின்னர் வளரத் தொடங்கியதனால்
நாறும் என்றார். நாறும் - இளமையாகிய என்றுரைப்பாரும் உண்டு.
கொன்றையினைச் சடையார்போல் நேர்நோக்கி நின்றுருகி இசைபெருக்கி
னாராதலின், "ஆரொருவ ருள்குவா ருள்ளத் துள்ளே யவ்வுருவாய் நிற்கின்ற
வருளுந் தோன்றும்" (திருத்தாண்டகம் - திருப்பூவணம் - 11), "யாதானு
மெனநினைந்தார்க் கெளிதே யாகி" (நின்ற திருத்தாண்டகம் - 7), என்றபடி
சடைதாழ்ந்த திருமேனியுடன் தோன்றி யருளினார் என்பது. 38

964.



திசைமுழுதுங் கணநாதர் தேவர்கட்கு முன்னெருங்கி
மிசைமிடைந்து வரும்பொழுது வேற்றொலிகள் விரவாமே
யசையவெழுங் குழனாதத் தஞ்செழுத்தாற் றமைப்பரவும்
இசைவிரும்புங் கூத்தனா ரெழுந்தருளி யெதிர்நின்றார்.



39

     (இ-ள்.) வெளிப்படை. எல்லாத் திசைகளினின்றும் தேவர்களுக்கு
முன்னே மேல் நெருங்கிச் சிவகணநாதர்கள் வரும்பொழுது, குழலிசைக்கு
மாறாகிய வேற்றொலிகள் இடைப்புகுந்து கலக்காமல். அசைய எழுகின்ற
குழல்நாத இசையினில் அமைத்த திருவைந்தெழுத்தினாலே தம்மைப்
பரவுகின்ற இசையினை விரும்புகின்ற அருட்கூத்தனாராகிய சிவபெருமான்
(மேற்சொல்லியவாறு) எழுந்தருளி வந்து எதிரில் நின்றார்.

     (வி-ரை.) கணநாதர்முன்......நெருங்கி - இறைவனது திருமுன்பு,
கணநாதர்கள் தேவர்களுக்கு முன்னேநிற்கும் உரிமையுடையவர்கள். இதற்கு
முன் தேவர்கள் வந்து கூடி இசையின் மயங்கி யணைந்ததனை 957 - 958
பாட்டுக்களிற் கூறினார். அவர்களுக்கு முன் இடம் பெற்று இருக்க
வேண்டியவரும் சிவபெருமானுடன் வருவோரும் ஆதலின் சிவகணங்கள்
நெருங்கித் தேவர்களை ஒதுக்கி முற்பட்டு வந்தனர் என்க. "தேவர்
கணங்களெல்லாம் நம்மிற்பின் பல்ல தெடுக்க வொட்டோம்"
(திருப்பொற் - 5) என்ற திருவாசகமும் காண்க. இவ்வாறு இசையரங்கு
முதலியவற்றில் தகுதியில்லாதார் முன்வந்து கூடிக்கொள்ளுதலும் தக்கவர்
பின் வந்து அவர்களை ஒதுக்கி யொதுக்கி முன்னிருத்தலும் இயல்பாக
இந்நாளிலும் காணும் காட்சியாம்.

     வேற்றொலிகள் விரவாமே இரை விரும்பும் - என்று கூட்டுக.
இறைவர் தம்முடன் வரும் பூதகணங்கள் முதலாயினார் முழக்கும் முழவு
சங்கம் முதலிய பல வகை இயக்கங்களின் ஓசை விரலின், குழலின் ஓசை
கெடுமாதலின் அவை விரவாமே (வேறொரு ஒலியும் உட்கலக்காமல்)
தனிக்குழலிசையைக் கேட்க விரும்பினார் என்பதாம். பூதகணங்கள்
சத்தமின்றிப்புடைசூழ என்றபடியாம். "தொண்டரை யாளும் தொழில் கண்டே,
வீதியி லாடிப் பாடி மகிழ்ந்தே மிடைகின்றார்,