முலைப்பால்
- பரம்
அபரம் என்ற இரண்டு ஞானங்கள்
திருமுலைகளாக உபசரித்துக் கூறப்படுவது மரபு. இதுபற்றியே
"உவமையிலாக் கலைஞானம் உணர்வரிய மெய்ஞ்ஞானந், தவமுதல்வர்
சம்பந்தர் தாமுணர்ந்தா ரந்நிலையில்" என்று அத் திருமுலைப்
பாலுண்டருளியதன் விளைவைப் புராணத்தினுள் கூறியதும் காண்க. 257-ல்
உரைத்தவையும் பார்க்க.
நண்பருமாம்
பெருமை - முன் சொல்லிய தகுதி ஒழுகும்
பெருமையோடு என உம்மை இறந்தது தழுவிய எச்சவும்மை.
"சண்பைநாதற்குத்
தோழன்" என்றது வகை நூல். இப் பெருமை
ஆளுடைய பிள்ளையாரையும், ஆளுடைய அரசுகளையும் அவர்களுடன்
போந்த எண்ணிறந்த திருத்தொண்டர்களையும் பல காலம் தமது
திருமனையில் வைத்து உபசரித்தமையும் பிறவுமாக அவ்வப் புராணங்களுள்
விரிக்கப்படுவது. இது பற்றி 1029-ல் உரைக்கப்பட்டவை பார்க்க. 11
1028.
|
அன்ன வடிவு
மேனமுமா யறிவா ரிருவ ரறியாமே
மன்னும் புகலூ ருறைவாரை வர்த்த மான வீச்சுரத்து
நன்னர் மகிழ்ச்சி மனங்கொள்ள நாளும் பூசை வழுவாமே
பன்னும் பெருமை யஞ்செழுத்தும் பயின்றே பணிந்து பரவினார்.12
|
(இ-ள்.)
வெளிப்படை. அன்னவடிவமும், பன்றிவடிவமும் எடுத்து
அறியப்புக்க பிரமவிட்டுணுக்களாகிய தேவர்கள் இருவராலும் அறியப்படாது
நிலைபெற்ற திருப்புகலூரில் எழுந்தருளிய சிவபெருமானாரை வர்த்தமான
வீச்சரம் என்ற திருக்கோயிலில் நல்ல மகிழ்ச்சியை மனங்கொள்ள
ஒவ்வொருநாளும் பூசையினைச் செய்தலில் தவிராமல், சொல்லத்தக்க
பெருமையினையுடைய திருவைந்தெழுத்தினையும் பயின்றே பணிந்து,
வழிபட்டு வந்தார்.
(வி-ரை.)
அறிவார் இருவர் அறியாமே - அறிவார் -
தேவர்கள்
என்று கொண்டு, அறிவிற் சிறந்த புலவர் என்ற பெயர்பெற்ற தேவராயினும்
அவர்களும் அறியமாட்டாது என்றுரைத்தலுமாம். அறிவாராயினும் இறைஞ்சிக்
காணும்வகை யறியாது அன்னமும் ஏனமுமாகித் தாமே தற்போதத்தாற்
காணப்புக்க படியால் அறியாராயினர் என்பது குறிப்பு. அறிவார்
-
அறியாமே - முரண் தொடை. இலிங்க புராணத் திருக்குறுந்தொகைக்
கருத்துப் பார்க்க.
அறியாமே
மன்னும் புகலூர் உறைவார் - அறியத்தக்காராயினும்
அவர்கள் அறியவொண்ணாமை புகலூரில் உறைவார் என்ற சுவையும்
காண்க. அறிவார் அறியாராயினும் முருகனார் அறிந்து புகலூர்ப்பெருமானை
வர்த்தமான வீச்சுரத்தில் பரவினார் என்ற குறிப்பும் காண்க புகலடைந்து
புகலூரில் காணாது இகலினாற் றேடினார் என்றது
தொனிக்கவும் நிற்பது
காணத்தக்கது.
அறிவானிருவர்
என்பது பாடமாயின் அறியும் பொருட்டு என்க.
வர்த்தமான
ஈச்சுரம் - முருகனார் ஆன்மார்த்தமாய்க்கொண்டு
பூசித்த இடம். இது திருப்புகலூர் ஆலயத்தினுள் இறைவர் கோயிலினை
அடுத்து வடகீழ்ப்பக்கம் உள்ள தனிக்கோயில். இதில் முருகனாரது
திருவுருவம் திருப்பூங்கூடையுடன் திருமாலைப்பணி செய்யும்
திருக்கோலத்துடன் சந்நிதானத்தில் எழுந்தருளச் செய்துள்ளது. நன்னர்
மகிழ்ச்சி மனம் கொள்ள - நன்மகிழ்ச்சி தம்மனத்தைப்பற்றிக் கொள்ள.
சிவன்றிருப்பணியின் வைத்த ஆர்வத்தால் உளதாகிய மகிழ்ச்சியாதலின்
நன்னர் மகிழ்ச்சி என்றார். ஏனையவாற்றால் உளவாகும் மகிழ்வெல்லாம்
எல்லையற்ற நன்மை செய்யமாட்டா என்பது.
|