செல்வங்களும் உழவினால்
விளைவன என்பது துணிபு. "சுழன்றுமேர்ப்
பின்னதுலகம்" - (குறள்) திருவின - திருவையுடையன. திரு - வினவு -
ஆம் - என்று
பிரித்து உழவர்களின் ஊக்கத்தைக்கண்டு அவர்கள்பால்
அடைதல் வேண்டி வழி வினவிச் சென்று, திரு, அடையும் என்றும் உரைக்க
நிற்பதும் காண்க. "ஆக்க மதர்வினாய்ச் செல்லு மசைவிலா, வூக்க முடையா
னுழை" என்பது குறள்.
புயலடையும்
மாடங்கள் - மாடங்கள் மேகமண்டலம் அளவும்
உயர்ந்தன என்பதாம். தங்குதற்குவந்து மேகங்கள் அடைகின்ற மாடங்கள்
என்றலுமாம். 834-ல் உரைத்தவை பார்க்க.
அயல்
இடை வேறு அடிநெருங்கக் குடி நெருங்குதல் - என்றது
அயலில் அடியிடம் நெருங்கும்படி மற்றும் குடியிருப்பு இடங்கள் வகுத்து
ஊரினை அகலப்படுத்திச் செல்லுமாறு அவ்வூரினுள் குடி
நெருக்கமுடையதாதல். இவ்வாறு அகலப்படுத்திக் குடிபுகும் இடங்கள் புதூர்
என்ற பெயரால் அங்கங்கும் உள்ளன காண்க.
(Extensions என்பர் நவீனர்).
அடி என்பது உடம்பினை அடி நிழல் பிரியாது தொடர்தல் போல நெருங்கிய
தொடர்புடைமை என்ற பொருள் குறித்தது. இதற்கு, இவ்வாறன்றிப்
பக்கங்களில் ஓரடி இடைவிட்டு என்றும், அருகிடங்களில் தனித்தனி
இடையில் ஓரடி நெருங்கியிருக்கும்படி என்றும், பக்கங்களில், தனித்தனி
அடிக்கொரு குடியாக என்றும், (அம்மாடங்களின்) வேறாக அயலிடங்களில்
அடியளவுக்கும் இடமின்றி என்றும், பற்பலவாறு முன்னுரைகாரர்கள்
உரைத்துப் போந்தனர். 5
1046.
|
மற்றவ்வூர்ப்
புறம்பணையின் வயன்மருங்கு பெருங்குலையிற்
சுற்றம்விரும் பியகிழமைத் தொழிலுழவர் கிளைதுவன்றிப்,
பற்றியபைங் கொடிச்சுரைமேற் படர்ந்தபழங் கூரையுடைப்
புற்குரம்பைச் சிற்றில்பல நிலைத்துளதோர் புலைப்பாடி. 4
|
(இ-ள்.)
வெளிப்படை. அந்தவூரின் மற்று வெளிப்புறத்தில் மருத
நிலத்தினைச் சார்ந்த வயல்களின் பக்கத்து உள்ள வரம்புகளின் ஓரத்திலே,
சுற்றந் தழுவுதலை விரும்பிய உரிமைத் தொழிலாளராகிய உழவின் மக்களின்
கிளைகள் நெருங்கிப், பற்றிய பசிய சுரைக்கொடி மேலே படர்ந்த பழைய
கூரையினையுடைய புல்லால் வேயப்பட்ட சிற்றில்கள் பல நிலையாக
நெருங்கியுள்ளது ஒரு புலைப்பாடி.
(வி-ரை.)
அவ்வூர் மற்றுப் புறம்பணை என்க. மற்று -
முன்சொன்ன குடியிருப்பு இடங்களில் வேறாக என்ற பொருளில் வந்தது.
புறம்பணை - ஊர்ப்புறத்துள்ள மருதநிலப் பகுதி.
வயன்மருங்கு
பெருங்குலையில் - வயலை அடுத்த கரைப்பக்கம்.
குலை - கரைகளை அடுத்த வெளிநிலம். பெருவரப்பு.
பெருங்குலையிற்
சுற்றம் எனக்கூட்டிக், குலைகளிற் காய்கள்
நெருங்குவது போலப் பெருங்கூட்டமாய் நெருங்கிய சுற்றம் என்றலுமாம்.
கிழமைத்தொழில்
உழவர் - (நிலக்கிழவர்க்கு) வேளாளர்க்கு
உரிமையால் உழவுத் தொழில் முயற்சி செய்யும் சாதியார். சுற்றம்
-
சுற்றத்தார் - சுற்றம் விரும்பிய - சுற்றந்தழுவுதலை
விரும்பிய.
பற்றிய....சிற்றில்
பல - இது புலைப்பாடியிற் கூட்டமாய் நிறைந்த
புலையர்கள் வாழும் சிறு குடிசைகளை, உள்ளவாறே காட்டுவதோர் அரிய
சித்திரமாகும். பற்றிய - சுரை - பற்றிய
- என்பது சுரைக்கொடிகளில்
இலைகளினடியிற் றண்டினின்றும் கைபோலநீண்டு வளர்ந்த பகுதியினாற்
கூரை, வேலி முதலியவற்றைப் பற்றிக் கொண்டு கொடி மேலே படர்வதற்கு
ஏதுவாகும் தன்மை குறித்தது.
|