நகரம்
இப்பெருந்
திருநாட்டின் தலைநகரமாய் உலகெலாம் வியப்ப
என்றுமுள்ளதாகிய நகரம்
காஞ்சிபுரமாகும்.
அது உமையம்மையார்
தன்னிடத்தே எழுந்தருளித் தவஞ்செய்து ஏகம்பநாதரைத் தழுவப்பெற்ற
சரிதப் பெருமையுடையது.
அம்மையார்
தவமும், பூசையும்
திருக்கைலாயத்தில்
ஆகமங்களையெல்லாம் இறைவர் அருளிச்செய்ய
அம்மையார் கேட்டருளினர். எண்ணில் ஆகமங்களை அருளிய இறைவர்
தாம் விரும்பும் உண்மையாவது பூசனையேயாகும் என்றருளிச் செய்ய,
அவ்வாறே தாம் பூசைசெய்ய அம்மையார் மனங்கொண்டனர். அதற்கேற்ற
இடம் காஞ்சிபுரத்தின் மாவடியேயாகும் என்று
இறைவர்பால் அறிந்த
இறைவியார் அங்குநின்றும் போந்து, மலையரசன் வந்து விடுத்த
பரிசனங்களுடன் சென்று காஞ்சியில் பதும மா நாகம்
வேண்டியபடி அதன்
பிலத்துவாரத்தில் எழுந்தருளியிருந்து, கம்பையாற்றின்
கரையில்
மாவின் மூலத்தில், தவஞ்செய்து, சிவனுரு வெளிப்படக் கண்டு, பூசிக்கத்
தொடங்கி மெய்ப்பூசை யெய்த ஆகம விதியெலாஞ் செய்தருளினர்.
அப்போது இறைவனார் ஒரு திருவிளையாட்டினால் அம்மையாருக்கு அருள்
செய்யத் திருவுள்ளங்கொண்டு கம்பையாற்றிற் பெரு வெள்ளம் வர அருளினர்.
ஆறு பெருக்கெடுத்து மேலெழுந்துவரக் கண்டு தம் திருக்கையாற்றடுத்து
நில்லாமையால் அம்மையார் வெருக்கொண்டு காதலால் முலைக்குவட்டொடு
வளைக்கையால் நெருக்கி இறுகச் சிவபெருமானைத் தழுவிக்கொண்டனர்.
இறைவர் அதனை விரும்பியவராய் யானையை உரித்துப் போர்த்த தமது
திருமேனி குழைந்து காட்டி முலைச்சுவடும் வளைத்தழும்பும்
அணிந்துகொண்டு அத்திருமேனி காட்டி வெளிப்பட்டருளினர் உம்பரே முதல்
யோனிகள் எல்லாம் உயிரும் உடம்பும் உருகி ஒன்றாகி இறைவரருளை
ஏத்தின. கம்பையாறு முன் வெள்ளந் தவிர்ந்து வணங்கிற்று. மணவாள
நற்கோலங் காட்டி நின்ற இறைவனார், அம்மையாரை நோக்கி, "வேண்டும்
வரங்கொள்க" என்றருள, அம்மையார், இறைஞ்சிநின்று, "இற்றை என்பூசை
இன்னும் முடிந்ததில்லையாதலின் அதனைக்குறை நிரம்பிடக் கொண்டருளல்
வேண்டு" மென்று விண்ணப்பிக்க, அதற்கு இறைவனார் நம்பால் நின்பூசனை
என்றும் முடிவதில்லை" என்றருளவே, அம்மையார் இறைவர்பால்
வரங்கேட்கலாயினர். அவையாவன : - "இந்தப் பூசை என்றும் மாறாது
நிலைத்திருக்கும்படி தேவரீர் மகிந்துகொண்டருளுதல்வேண்டும்; இந்தப்
பதியில் எல்லா அறங்களும் யான்செய்யும்படி அருளுதல்வேண்டும்; திருவடிப்
பிழைத்தல் ஒன்றொழிய இங்குள்ளவர் வேறு செய்வினை எதுவேயாயினும்
மாதவப்பயன் கொடுத்தருளப் பெறவும் வேண்டும்" என்ற மூன்றுமேயாம்.
எல்லா வுயிர்களின் பிறப்பையும் ஒழிக்கும் பேரருட் செல்வியாகிய
அம்மையார் கேட்டருள, அவ்வாறே இறைவனார் அந்தப் பூசனையை
விரும்பி வீற்றிருந்தும், இடையறாத அறங்களை யெல்லாம் வளர்க்கும்
வித்தாக இகபரத்து இருநாழி நெல்லை அளித்தும், காஞ்சி வாழ்பவர்
செய்தீவினையும் தடையின்றி மெய்ந்நெறியடையச் செய்யும் தவங்களாகவும்
வரங்களை மகிழ்ந்து தந்தருளினர்.
திருக்காமக் கோட்டம்
விம்மிதங்கள்
அவ்வாறே
அம்மையார் நித்தமாகிய பூசனை செய்து கொண்டு
உயிர்களிடத்து இல்லறம் பெருக்கும் கருணையினால் புண்ணியத் திருக்காமக்
கோட்டத்தில் எழுந்தருளியிருந்து முப்பத்திரண்டறங்களையும்
அளித்தருள்கின்றனர்.
திருக்காமக்
கோட்டத்தில் ஆண்டினுக்கொருமுறை ஒரு தாளில்
முச்சுடர் போல மூன்று பூக்கள் மலரும் அற்புதம் உள்ளது. உலகாணி
முதலிய விம்மித
|