தீர்த்தங்கள் உண்டு.
அதன் மேல் சந்திர சூரியர் தத்தம் நெறியிற் செல்லாது
பக்கம் சுற்றிப் போதலினால் உளதாகிய திசைமயக்கம்
உலகெலாங்காண
இன்றும் அங்குள்ளது. காஞ்சி நதிக்கரையில் தன்னிழற் பிரியாத
காஞ்சித்தானம் உண்டு. முனிவர் வானவர் முதலினோர் பலரும் தாபித்து
அருச்சித்து இட்டசித்திகளை அடைந்த தளிகள் எண்ணிறந்தன
அத்திருநகரின் எல்லையில் உள்ளன. யானையை முயல் தன்னி்டத்தினின்று
துரத்தும் தானமும், இறந்தோர் உடல் மீள உயிர் பெற்றெழும் இடமும்,
இறவாத்தானமும் உள்ளன. இட்டசித்தித் தீர்த்தம், சாருவதீர்த்தம்
முதலியனவாய்த் தேவர்களும் வந்து படியும் பல புண்ணிய தீர்த்தங்களும்
அங்கு உண்டு. ஒரு தாளில் மூன்று பூ மலரும் பொற்றாமரைத் தடமும்,
மேற்கில் ஓடி நீர் சுரக்கும் நதியும், பகலில் அலரும் குவளையும், இரவில்
மலரும் தாமரையும், நண்பகலில் பூக்கும் பாடலமும், கண்படாத காயாப்
புளியும் திருக்காமக்கோட்டத்தின் எல்லையினுள் உளவாகும். சிறிது
உண்டாலும் நஞ்சாகும் நீருடையதொரு தடமும், தன்னுட் குடைந்தவர்கள்
வானரவுருவம் பெறும் ஒரு பிலமும், அவ்வுரு நீங்கக் குளிக்கும் ஒரு
பொய்கையும், தேவர்களோடு இன்பம் துய்க்கும் ஒரு பிலமும் முதலாகிய
அதிசயங்கள் பல உண்டு.
யானைமுகமுடைய
விநாயகக்கடவுளும், வைரவக் கடவுளும்,
அறுமுகக்கடவுளும் காவல் புரியப்பெற்றது அத்திருநகரம், சத்திதற்பர
யோகிகளும் அழியா உடற்சித்தி பெற்ற சித்தர்களும் வாழ்கின்ற பாடிகளும்
அனேகம் உண்டு. சித்தர் இயக்கர்கள் கந்தருவர் என்ற தேவசாதியார்களும்
விளங்கி, கையிற்செண்டு ஏந்தி யானைமீது வீற்றிருக்கும் ஐயனார்
கோட்டத்தையுடைய செண்டனை வெளியும் அங்குள்ளதாம்.
யோகபீடமும்
போகபீடமும் ஒருங்கே இருக்கப்பெற்றது இத்திருநகரம். இன்னும்
இவ்வாறுள்ள விம்மிதங்கள் பல. அவை இந்தப் பொய்யாகிய கலியுகத்தில்
நல்லோர் சிலர்க்கன்றிப் பலர்க்கும் விளங்கித் தோன்றாது மறைந்து நிற்கும்.
பழமன்னர்
சரிதம் - நகர்வளம்
எக்காலத்தும்
அழியாதிருக்கும் இத்திருநகரத்தின் வளமையைக்
கலியுகத்தில் ஒரு வேடன் கண்டு அறிந்துவந்து சொல்லக், கரிகாற்
பெருவளத்தோனாகிய சோழர் வடநாட்டை வென்று அடிப்படுத்தி
இமயத்தில் புலிக்கொடிபொறிக்கப் போகுங் காலையில் கேட்டு, இங்குவந்து,
காடெறிந்து, நான்கு காதம் எல்லை வகுத்துக், குன்றுபோல மதிலும்
கடல்போல அகழியும் போக்கிக், குடியேற்றி நகரங்கண்டனர். மதில்
வாயில்கள் அங்கு வாழும் பெரியோர்களது உள்ளம் போல ஓங்கி நிலைத்து
நல்லொழுக்கமல்லாமல் தீங்கு நெறியடையாத தடைகளாய் விளங்குவன.
மண்ணிலும் விண்ணிலும் உள்ள எல்லா வளங்களும் அங்கு நிறைவன.
ஆவணவீதி முதலிய பல மறுகுகளும் சிறப்பன. அறங்களெல்லாம் பெருக
அம்மையார் காவல்புரியும் தன்மையாற் செல்வமும் இன்பமும் சிறந்து
விளங்குவது இத்திருநகரமாம். மறையவரது இருக்கைகளும், அரசர்
மாளிகைகள் நிறைந்த தெருக்களும், வணிகர் வீதிகளும், வேளாளர்
முன்றில்களும் சிறக்க விளங்குவன. நாற்குலத்தோரும், உயர்ந்தனவு
மிழிந்தனவுமான சாதிகளில் தம்மில் ஒவ்வாப் புணர்ப்பில்வந்த சாதி
பேதத்தினரும் தத்தம் தகைமைக்கேற்ற தனியிடங்களிற் பெருந்திவாழ்ந்து,
தத்தமக்கேற்ற தொழில்செய்து, மனையறம் புரிந்து, வாழும் தன்மை நீடிய
இருக்கைகளும் உரிமைப்பான்மையால் அங்கு உள்ளனவாகும்.
இத்திருநகர
வீதிகளில் திருவிழாச் சிறப்புக்கள் எந்நாளும் ஒழியாது
பயில்வன. தொண்டர்களும் வானவர்களும் சூழ்ந்திருப்பர். தீமை, பிணி,
கவலை, புறஞ்சூழ்தல், அசைவு, திகைப்பு, பயம், ஆர்ப்பு, துகள், தாழ்ச்சி,
இழுக்கு என்னும்
|