பக்கம் எண் :


சண்டேசுரநாயனார்புராணம்1557

 

     பற்றுவரச் சார்பாயுள்ள என்றது சிவன்பாலன்பு வருதற்குத்
துணையாயுள்ள என்றதாம். தக்கபடி இல்லறம் நடத்தியதனால்
"துணைப்புதல்வற் பெற்று"த் தனது கணவனுக்கு உறுதி பயக்கும்வகை
சார்பாய் நின்றாள்; தனக்கும் அவ்வகைப்பற்று வருதற்குச்சார்பாகிய
ஒழுக்கத்தில் நின்றாள்; இனித், தான்பெற்ற புதல்வர்ப் பேற்றினால் பிற
உயிர்களுக்கும் பற்றை எறியும் பற்றுவரச் சார்பாயினாள் என்ற பல
குறிப்புக்களும் கண்டுகொள்க. உள்ள - சிவனது சாரிபினால் வரும் பயன்
என்றும் நிலைத்துள்ளது. முன்னர்ச் செய்தாள் என்றும், பின்னர்ப் பெறுவாள்
என்றும் இறந்தகால எதிர்காலங்களாற் கூறிய ஆசிரியர் இங்கு உள்ள என்று
முக்காலத்துக்குமுரிய குறிப்புவினைப் பெயரெச்சத்தாற் கூறியதும்
குறிக்கொள்க. இவள் சார்பினால் உயிர்கள் எஞ்ஞான்றும் பற்றை எறியும்
பற்றுவரப் பெறுதல் நிலைத்துள்ளதென்பதாம். சார்பாயுள்ள பவித்திரை
என்ற குறிப்புமது.

     பவித்திரை - தூய்மையுடையவள். பவித்திரம் - தூய்மை.
"பழுதுபுகுந்ததுதீரப் பவித்திரமாஞ் செயல்" (788) என்றது காண்க.
பெயர்ப்பொருள் கூறுபவராகி உயிர்களைத் தூயனவாக்கும் தன்மையுடன்
நிகழ்பவள் என்ற குறிப்புப் படக் கூறுதல் காண்க.

     பவித்திரையாள் - என்பதும் பாடம். 11

1217.
நன்றி புரியு மவர்தம்பா, னன்மை மறையின் றுறைவிளங்க,
என்று மறையோர் குலம்பெருக, வேழு புவனங் களுமுய்ய,
மன்றி னடஞ்செய் பவர்சைவ வாய்மை வளர, மாதவத்தோர்
வென்றி விளங்க, வந்துதயஞ் செய்தார் விசார சருமனார்.
 12

     (இ-ள்.) வெளிப்படை. நன்மை செய்யும் அவர்களிடமாக, நன்மை தரும்
மறைகளின் துறைகள் விளங்கவும், என்றும் மறையோர்களின் குலம்பெருகவும்,
ஏழுலகங்களும் உய்யவும், திருவம்பலத்தில் திருக்கூத்தியற்றும்
பெருமானுடைய சைவ உண்மைத்திறம் வளரவும், மாதவத்தோர்களின் வெற்றி
விளங்கவும், விசாரசருமனார் வந்து திருஅவதாரஞ் செய்தருளினார்.

     (வி-ரை.) நன்றி - இங்கே நன்மையாவது இல்லற நல்லொழுக்கம்.

     நன்மை மறை - இந்நன்மையாவது வேதங்களிற்கூறப்பட்ட விதி
விலக்குக்களால் உலகம் நன்னெறியில் நிறுத்தப்படுதல்.

     மறையின் துறை விளங்க என்றது விசாரசருமனாரின் சரிதத்தால்
வேத நீதிகள் விளக்கமுறுதல். அவையாவன - பிரமசரிய நிலை, உபநயனம்,
வேதம்பயிலுதல், சமிதையும் எரியும்கொண்டு சாமங் கணித்தல், பசுக்காத்தல்
முதலியவையாம்.

     என்றும் மறையோர் குலம்பெருக என்றது மறையோர் குலத்திலே
விசாரசருமனார் திருவவதாரம் செய்து பசுக்காத்துச் சிவபூசை செய்து சிவன்
மகனாராகப் பெற்ற சரித நிகழ்ச்சியினை அறிந்து, அதனைப் பின்பற்றிச்,
சிவனை வழிபட்டு, அந்தக் குலத்தாராகிய மறையோர் வளர்ந்து வருதல்
குறித்தது. "கானவர் குலம் விளங்க" (662) என்று கண்ணப்ப நாயனார்
திருவவதாரத்திலும், "அந்தண ராகுதி பெருக" (திருஞான - புரா - 23)
என்று ஆளுடைய பிள்ளையார் திருவவதாரத்திலும் கூறியனவும், இவ்வாறு
வருவன பிறவும் காண்க.

     ஏழுபுவனங்களும் உய்ய - சிவபூசைசெய்து அதன் பயனாலன்றி
உயிர்களுக்கு உய்தி கிடையாது என்பது ஞானநூன் முடிபு. "சைவத்
திறத்தடைவ ரிதிற் சரியை கிரியா யோகஞ் செலுத்தியபின் ஞானத்தாற்
சிவனடியைச் சேர்வர்" என்பது (8.11) சிவஞானசித்தியார். இந்நாயனாரது
திருவவதாரத்தாற் புவனம்