|
என்றபடி ஆசானும் மாணவரும்
ஒரு சேரக் காண நிற்பவர்களாதலின்
இருவரது மனநிலைகளும் ஒரு பாட்டில் ஒரு சேரக் கூறிய இயைபு காண்க.
அலகில்
கலையின் பொருட்கு எல்லை ஆடும் கழலே என -
இது எல்லாக் கலைகளாலும் முடிவாகக் கொண்ட துணிபு. எவ்வகைக்
கலையும் ஓரோர் பொருளை நிச்சயிப்பன; ஆதலின் எல்லாக் கலைகளாலும்
நிச்சயிக்கப்படும் எல்லாப்பொருள்களும் முடிந்த இடம் திருவடி என்க.
முடிந்த இடமாவது அவை யாவும் போய்ச் சேர்ந்து அதற்குமேல்
இன்னதென்றறிய முடியாது ஓய்ந்து நிற்கும் இடம் என்பதாம். "உலகுய்ய
நடமாடு, மெல்லையினைத் தலைப்பட்டார் யாவர்களுங் கண்டிலரால்" (1075)
என்றது காண்க. "பாதாள மேழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர், போதார்
புனைமுடியு மெல்லாப் பொருண் முடிபே" (திருவெம்பாவை - 10) என்ற
திருவாசகங்களும் இக்கருத்துப் பற்றியன. கற்றதனாலாய பயன் நற்றாள்
தொழுதல் என்பது திருக்குறட் கருத்துமாம்.
எனச்
சிந்தையினில் - தெளிந்தார் - என்று கூட்டுக. கொண்ட
செலவு மிகுந்த சிந்தை - முன்னரே உட்கொண்ட
உணர்ச்சி போந்திருந்த
சிந்தை. செலவு - செல்லுதல். செலவு
மிகுதலாவது "அறிவின், எல்லா
மியைந்த" (1219) என்ற கருத்து; அதாவது உறைப்பு முற்றியிருத்தல்.
தெளிந்தார்
- ஐயமின்றித் துணிந்தார். "உள்ளத்தின் ஒருமை
நினைவால்" (1242), "கருத்தின் றிடநேர் நிற்கும்" (1221), "ஒன்று முள்ளத்
துண்மையினால்" (1252), "மண்டு காத லருச்சனையில் வைத்தார்
மற்றொன் றறிந்திலரால்" (1254) எனப் பின்வருவன காண்க.
சிறிய
பெருந்தகையார் - முரண்தொடை. சிறுமை
பருவத்தாலும்
உருவத்தாலும், பெருந்தகைமை - உள்ளத்தின்
உயர்வாலும் ஆகும்.
"அச்சிறியபெருந்தகையார்" (திருஞான - புரா - 73) என்று இவ்வாறே
ஆளுடைய பிள்ளையாரைக் கூறுதலும் காண்க. 15
1221.
|
"நடமே
புரியுஞ் சேவடியார் நம்மை யுடையா" ரெனுமெய்ம்மை
யுடனே தோன்று முணர்வின்க ணொழியா தூறும் வழியன்பின்
கடனே யியல்பாய் முயற்றிவருங் காதன் மேன்மே
லெழுங்கருத்தின்
றிடநேர் நிற்குஞ் செம்மலார் திகழுநாளி லாங்கொருநாள், 16
|
| |
|
1222.
|
ஓது
கிடையி னுடன்போவா, ரூரா னிரையி னுடன்புக்க போது,
மற்றங்கொருபுனிற்றா போற்று மவன்மேன் மருப்போச்ச,
யாதுமொன்றுங் கூசாதே யெடுத்த கோல்கொண்டவன்புடைப்ப,
மீது சென்று மிகும்பரிவால் வெகுண்டு, விலக்கி,
மெய்யுணர்ந்து, 17 |
| |
|
1223.
|
பாவுங்
கலைக ளாகமநூற் பரப்பின் றொகுதிப் பான்மையினான்
மேவும் பெருமை யருமறைகண் மூலமாக விளங்குலகில்
யாவுந் தெளிந்த பொருணிலையே யெய்த வுணர்ந்த வுள்ளத்தா
லாவின் பெருமை யுள்ளபடி யறிந்தா ராயற் கருள்செய்வார். 18
|
| |
|
1224.
|
"தங்கு
மகில யோனிகட்கு மேலாம் பெருமைத் தகைமையன;
பொங்கு புனித தீர்த்தங்க ளெல்லா மென்றும் பொருந்துவன;
துங்க வமரர் திருமுனிவர் கணங்கள் சூழ்ந்து பிரியாத
அங்க மனைத்துந் தாமுடைய வல்ல வோநல் லானினங்கள்?;19 |
|