பக்கம் எண் :


சண்டேசுரநாயனார்புராணம்1563

 
1225.
"ஆய சிறப்பி னாற்பெற்ற வன்றே மன்று ணடம்புரியு
நாய னார்க்கு வளர்மதியு நதியு நகுவெண்  
                                டலைத்தொடையு
மேய வேணித் திருமுடிமேல் விரும்பி யாடி
                                யருளுதற்குத் தூய
திருமஞ் சனமைந்து மளிக்கு முரிமைச் சுரபிகடாம்;       20
   
1226.
"சீல முடைய கோக்குலங்கள் சிறக்குந் தகைமைத்
                                     தேவருடன்
கால முழுது முலகனைத்துங் காக்கு முதற்கா ரணராகு
நீல கண்டர் செய்யசடை நிருத்தர் சாத்து நீறுதரு
மூல மவதா ரஞ் செய்யு மூர்த்த மென்றால் முடிவென்னோ?;21
   
1227.
"உள்ளுந் தகைமை யினிப்பிறவே றுளவே! யுழைமான்                                         மறிக்கன்று
துள்ளுங் கரத்தா ரணிபணியின் சுடர்சூழ் மணிகள் சுரநதிநீர்
தெள்ளுஞ் சடையார் தேவர்கடம் பிராட்டி யுடனே
                                     சேரமிசைக்
கொள்ளுஞ் சினமால் விடைத்தேவர் குலமன் றோவிச்
                                     சுரபிகுலம்?" 22
   
1228.





என்றின் னனவேபலவுநினைந், "திதத்தின் வழியே
                                    மேய்த்திந்தக்

கன்று பயிலா னிரைகாக்கு மிதன்மே லில்லை கட;னிதுவே
மன்று ளாடுஞ் சேவடிகள் வழுத்து நெறியா வது"மென்று
நின்ற வாயன் றனைநோக்கி "நிரைமேய்ப் பொழிக நீ"
                                     யென்பார்,   23
   
1229.
"யானே யினியிந் நிரைமேய்ப்ப" னென்றா ; ரஞ்சி
                           யிடைமகனுந் தானே
ரிறைஞ்சி விட்டகன்றான்; றாமு மறையோ ரிசைவினா
லானே நெருங்கும் பேராய மளிப்பா ராகிப், பைங்கூழ்க்கு
வானே யென்னநிரை காக்க வந்தார தெய்வமறைச்சிறுவர்.  24

     1221. (இ-ள்.) வெளிப்படை. "அருட்கூத்தையே இயற்றும்
திருவடியினையுடையவர் நம்மை உடைய தலைவராவர்" என்னும் உண்மை
எண்ணுந்தோறும் உடனே தோன்றும் உணர்வினுள் ஒழியாமல் ஊறுவதாகிய
அன்பின் வழியே கடமையாக இயல்பாய் முயற்சி செய்யும்படி வருகின்ற
காதலானது மேன்மேல் எழுகின்ற கருத்தின் உறுதி பிறழாமல் நேர்நிற்கும்
செம்மலார் இவ்வாறு விளங்குகின்ற நாட்களில் ஆங்கு ஒரு நாளில், 16

     1222. (இ-ள்.) வெளிப்படை. வேதமோதும் மாணவர் கூட்டத்தினுடன்
போகின்றவர், ஊரவருடைய ஆனிரையினுடன் போயினபோது, அவற்றுள்
ஈன்றணியதொரு பசுத் தன்னை மேய்ப்பவன்மேல் கொம்பினால்
முட்டச்செல்ல, ஒரு சிறிதும் கூசாமல் எடுத்த கோலினால் அவன் அதனைப்

புடைக்க, அதுகண்டு, மேற்சென்று, மிகும் அன்பினாலே சினந்து, அவன்
செயலைவிளக்கி, உண்மையினை உணர்ந்தாராய், 17

     1223. (இ-ள்.) வெளிப்படை. பரந்த கலைகளும், ஆகம நூல்களின்
பரந்த தொகுதியும், உண்மைப் பகுதியினாற் பெருமை பொருந்திய அரிய
வேதங்களும், ஆகிய இவைகளின் மூலமாக, விளங்கும் உலகத்தில் எல்லாந்
தெளிந்துணுர்ந்து பொருணிலை தெளிய உணர்ந்த உள்ளத்தினால்,
பசுக்களின் பெருமையினை உள்ள படியே அறிந்தாராகி, விசாரசருமனார்,
ஆயனுக்கு ருள்புரிவாராய், 18

     1224. (இ-ள்.) வெளிப்படை. "(உயிர்கள் தங்கும்) எல்லா
யோனிகளுக்கும் மேலாகிய பெருமைத்தன்மையுடையன; பொங்குகின்ற
தூயதீர்த்தங்கள் எல்லாம் என்றும் பொருந்தப்பெற்றன; பெருமையுடைய
தேவர்களும் முனிவர் கூட்டங்களும்