|
சூழ்ந்து இருக்கை கொண்டு
பிரியாத அங்கங்களையும் உடையன
ஆனினங்கள் அல்லவோ?; 19
1225. (இ-ள்.)
வெளிப்படை. "ஆய சிறப்பினாலே ஈன்ற அன்றைக்கே, திருவம்பலத்தில்
நடம்புரிகின்ற நாயனாருக்கு, வளர்பிறையும், கங்கையும்,
வெள்ளிய நகுதலை மாலையும் பொருந்திய சடையுடைய திருமுடியின்
மேல், அவர் விரும்பி ஆடியருளுதற்குத் தூய திருமஞ்சனமாகிய
ஆனைந்தினையும் அந்த உரிமையுடைய பசுக்கள் கொடுப்பனவாகும்; 20
1226. (இ-ள்.)
வெளிப்படை. ‘சிறப்பாந் தன்மையுடைய தேவரோடு
கால முழுதும் எல்லா உலகங்களையும் காக்கின்ற முதற் காரணராகும்
திருநீலகண்டராகிய சிவந்த சடையினையுடைய திருக்கூத்துடைய பெருமான்
சாத்தும் திருநீற்றைத் தருகின்ற கோமயம் எனப்படும் மூலத்தினைத் தருகின்ற
மூர்த்தங்கள் சீலமுடைய இந்தப் பசுக்களேயாகும் என்றால் முடிவு வேறு
என்ன உள்ளது? 21
1227. (இ-ள்.)
வெளிப்படை. "நினைக்கத்தக்க தன்மை இனிப் பிற
வேறும் உளவாமோ? உழைமான் மறிக்கன்று துள்ளியாடுதற் கிடமாகிய
திருக்கரத்தினை யுடையவரும், அணியும் பாம்புகளின் ஒளிசூழ் மணிகளைக்
கங்கை நீரானது தெள்ளுகின்ற சடையுடையவரும் ஆகிய சிவபெருமான்
தேவர்கள்தம் பெரு மாட்டியுடனே சேரமிசைக் கொள்ளும்படியான சினமால்
விடைத் தேவரின் குலமல்லவா இந்தப் பசுக்குலம்?", 22
1228. (இ-ள்.)
வெளிப்படை. என்று இவ்வகையாகிய பல
எண்ணங்களையும் எண்ணிக், "கன்றுகளுடன் கூடிய ஆனிரைகளை
இன்பந்தரும் வழியே மேய்த்துக் காக்கின்ற இதனின் மேல் செய்யத்தக்க
கடமை வேறில்லை; இதுவே அம்பலக் கூத்தரது திருவடிகளைப் போற்றும்
நெறியுமாம்" என்று கொண்டு, எதிர் நின்ற ஆயனை நோக்கி, "நீ இந்
நிரைமேய்க்கும் தொழிலை ஒழிக" என்று சொல்லி, 23
1229. (இ-ள்.)
வெளிப்படை. "இனி இந்நிரையினை யானே
மேய்ப்பேன்" என்றார்; இடைமகனும் பயந்து அவர் முன் வணங்கி,
மேய்த்தற் றொழிலை விட்டு நீங்கினான்; தாமும் மறையோர் இசைவு பெற்று
ஆக்களே நெருங்கும் பேராயத்தினைக் காப்பாராகிப், பசிய பயிர்களுக்கு
மழையே போலப், பசுக்கூட்டங்களைக் காக்கத் தெய்வ மறைச்சிறுவர்
முற்பட்டுவந்தனர். 24 இந்த ஒன்பது பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு
கொண்டன.
1221. (வி-ரை.)
நடமே - ஆனந்தக் கூத்தினையே. நடமே
புரியும் சேவடி - தூக்கிய திருவடி; இடது திருவடி. முத்தி கொடுப்பது
அத்திருவடியே யாதலின் அதனை உடையார் நம்மை உடையார் என்றார்.
மெய்ம்மை
- உண்மை உணர்த்தும் நூல்களாகிய வேதசிவாகமங்களின்
துணிபு.
நம்மை
உடையார் - உடையவர் - (பதி), அவரது உடைமைப்
பொருள்கள் (உயிர்கள் - பசுக்கள்), அவை உடையானை அடைந்து இன்புற
வொட்டாது அவற்றைக் கட்டிய பாசம், அப்பாகத்தின் வலிபோக்கி
இன்பமளிக்க அவர் செய்யும் அருள், என்ற இவ்வளவும் இதனாற்
பெறப்படுமென்க.
உடனே
தோன்றும் உணர்வின் கண் - மேற்கூறிய
மெய்ப்பொருணிச்சயமாகிய துணிபுகள் எல்லாம் ஒருங்கே, நடமேபுரியும்
சேவடியார் என்று உணர்ந்த அப்பொழுதே, ஒருங்கே,
உணர்விற்றோன்றுவனவாகும் என்பது.
உணர்வின் ஒழியாது ஊறும் வழி அன்பு - அன்பு இடையறாது
ஊற்றெடுத்து வழிவழி வருதற்குக் காரணம் உணர்வில் மேல்கூறிய துணிபுகள்
எல்லாம்
|