|
இன்னும், முன் தொடர்ச்சியினால்
தீமைநெறியே உறும் மனங் கொண்ட
விதியுடையோர் திருமஞ்சனத்துக்கு அமைத்த பாலினையும் அது
மக்கட்குதவாமல் வீணே கழிகின்றது என்று வாதாடிக் கழிந்து
நிரயத்துக்காளாகுவர். இவ்வாறுளாரையும் காண்பது இந்நாட் கொடுமைகளுள்
ஒன்று. காதற்ற வூசியைப் பட்டினாற் பொதிந்து பெட்டியில் வைத்திருக்கக்
கண்டபோது, பிறரெல்லாம் காதறுந்த ஊசியேயாயினும், வேறு
எப்பொருளேயாயினும், இவ்வாறு காப்பாற்றப்படுதல் வேண்டும்என்ற
குறிப்புணர்வாராக, எமதுபெருமகனாராகிய பட்டினத்தடிகள் "காதற்ற வூசியும்
வாராது கூடக் கடை வழிக்கே" என்ற உண்மையினை அதனுட் கண்டு
ஒன்பது கோடி பொருளையும் ஒரே நொடியில் துறந்து தவராச சிங்கமாயினர்
என்ற வரலாறும் இங்கு நினைவுகூர்தற்பாலது.
சிவனார்
மெய்ம்மைப் பூசனையை என்க. மெய்ம்மையாவது
எவ்வாற்றானும் பொக்கம் ஒன்றுமில்லா திருத்தல். "நெக்கு நெக்கு
நினைப்பவர்" என்பது முதலிய திருவாக்குக்கள் இங்குக் கருதற்பாலன.
சிவனையே குறிக்கோளாகக் கொண்டு குறிவைத்த பூசை. "குறித்த பூசை"
(1241),"ஒன்றுமுள்ளத் துண்மையினால்" (1252) என்பன காண்க.
சிவனார்
- சிவபெருமானே முழுமுதற் கடவுளாவார் என்பது குறிப்பு.
பூசனை - திருமஞ்சனமாட்டுதல் முதலிய பூசையின்
எல்லா உறுப்புக்களின்
தொகுதி குறித்தது.
விரும்பும்
வேட்கை விளைந்து எழலும் - மனத்தின்கண்
பூசனையையே விரும்புகின்ற ஆசை. முன்னைப் பிறவியின் விளைத்த
வாசனையாகிய விதையினின்று முளைத்தெழுந்து மேன்மேல் வளர்ந்து
எழுந்ததனால் விளைந்து எழ என்றார். "முகைத்த
மலரின் வாசம்போல்"
(1218), "பண்டைப் பரிவால்" (1241) முதலியவையும், "விளைத்த அன்பு"
(772) என்றதும் பார்க்க.
விரும்பும்
வேட்கை - விருப்பமானது முற்றிய நிலையில் வேட்கை
எனப்படும்.
விரைந்தெழலும்
- என்பதும் பாடம். 31
1237. (வி-ரை.)
அர்ச்சனையின் முன்னைத் தொடர்ச்சி யளவில் அங்கண் விளையாட்டா
என்க.
விளையாட்டாப்
பொங்கும் அன்பால் - முன்னைப் பிறவி வாசனையாகிய அர்ச்சனையின் தொடர்ச்சி
இப்பிறப்பில் சிறுவர்மணற்கூட்டி விளையாடும் விளையாட்டு என்ற உருவத்தில் வந்தது என்பதும்,
அவ்வாறு வரினும் அது உள்ளே நிறைந்து பொங்கும் அன்பினால் ஆகியது என்பதும் ஆம்.
மணற்
புளினக்குறை - மணற்றிடர் - திட்டை - திடல்.
செங்கண்
விடையார் திருமேனி மணலால் ஆக்கி - "தாபர சங்க
மங்களென்றிரண் டுருவி னின்று, மாபரன் பூசை கொண்டு மன்னுயிர்க்
கருளை வைப்பன்" (சித்தியார் - 228) என்ற இடத்து "சதாசிவ தத்துவத்தின்
வைகும் இறைவன், புறத்தே திருக்கோயிலுள்ளிருக்கும் திருமேனியும்
திருவேடமும் ஆதாரமாகக் கொண்டு நின்றுதும், அகத்தே உயிரிடமாகக்
கொண்டு நின்றும் ஈண்டுள்ளார் செய்யும் பூசை கொண்டருளுவானாகலான்,
அஃதறிந்தவ்விடங்களின் வழிபடுக" என விதிக்கப்படுதலின் அவ்விரண்டனுள்
இங்கு விசாரசருமனார் திருக்கோயிலுள்ளிருக்குந் திருமேனியாகிய இலிங்கத்
திருமேனி கண்டு வழிபடலாயினர் என்றும் அவ்வாறு சிவலிங்கத் திருமேனி
காண்பதில் மண் - உருத்திராக்கமணி - சந்தனம் - முதலிய பலவற்றானும்
சிவலிங்கம் ஆக்கிக்கொண்டு பூசிக்கலாமென்று விதியிருப்பதனால் அவற்றுள்
மணலாலாக்கிக் கண்டனர் என்றும் கொள்க.
திருமேனியாக்கிச்
சிவாலயமும் - கோபுரமும் - சுற்றாலயமும்
வகுத்தமைப்பார் - சிவலிங்கத்தை முன்னர்
அமைத்து வைத்துக்கொண்டு,
பின் அதற்கு ஏற்றவாறு
|