|
அர்ச்சித்திடப்
புகலும் - சடைமுடியாரும் - வெளிப்படலும்
- உலகப் பற்றறுத்த போதே இறைவன் வெளிப்படுவன் என்பதுண்மை.
"யானெனதென் றற்ற விடமே திருவடியா" (கந்தர் கலிவெண்பா) என்றது
காண்க.
முடியாரும்
- உம்மை சிறப்பும்மை. முன் உள்ளே நிறைந்து
பூசைகொண்ட அவரும் என இறந்தது தழுவிய எச்சவும்மை என்றலுமாம்.
வெளிப்படலும்
- முன்னர்க் "கோளமதனில் உள் நிறைந்து
பூசைகொ"ண்ட அவர், இப்போது காதல்கூர வெளிப்பட்டனர் என்க.
"மறைய நின்றுளன்...முறுக வாங்கிக் கடைய முன்னிற்குமே" (அப்பர் -
திருக்குறுந்தொகை - பொது.) என்றபடி அன்பு முறுகி விளைந்த இடத்தே
தான் இறைவரது வெளிப்பாடு நிகழுமென்க. நாயன்மார் சரிதங்கள்
பலவுங்காண்க.
தேவியோடும்
விடையேறி - அடியார்க் கருள்தந்து தம்முலகம்தர
வரும்போதெல்லாம் இவ்வாறு வருவர் சிவபெருமான். 52
1258. (வி-ரை.)
புராண முனிவர் - பழைய முனிவரர். புத்தேளிர்
- தேவர்கள்.
விமலமூர்த்தி
- சிவபெருமான். விமலமூர்த்தி என்னும்
அன்மொழித்
தொகைத் தொடர்மொழி மலங்கட்குப் பகையான திருமேனியையுடையவர்
எனப் பொருள்தரும். "மூலமாகிய மும்மல மறுக்குந், தூயமேனி"
(திருவாசகம்) என்பது காண்க.
காதல்கூர
- தம்மை அவர்க்குத் தாதை எனக் கொள்கின்றாராதலின்
காதல் என்ற சொல்லாற் கூறினார்.
பத்தி
முதிர்ந்த- முறுகி வளர்ந்த அன்பினையுடைய.
"முறுக
வாங்கிக்கடைய" என்ற கருத்துமிது. (கடைதல் - தியானித்தல்; "தியான
நிர்மதனாத்" என்பது சுருதி.)
பாலகனார்
- விமலனார் தம்மைத் தாதை எனக்கொள்வார் காதல்
கூர வெளிப்பட்டபடியால் அதற்கேற்ப நாயனாரையும் பாலகனார்
என்ற
சொல்லாற் கூறினார்.
பாதமலர்கள்மேல் விழுதல் - பாதத்தின்கீழ் மரம்போல வீழ்ந்து
அவசமாய்க் கிடத்தல். இக் கருத்துப்பற்றியே மேல்வரும் பாட்டில். "கீழ்
விழுந்தவரை எடுத்து" என்றது காண்க. மேல் -
ஏழனுருபு. வரும் பாட்டில்
கீழ் என்பதுமது. 53
1259.
|
தொடுத்த
விதழி சூழ்சடையார் துணைத்தா ணிழற்கீழ்
விழுந்தவரை
எடுத்து நோக்கி "நமபொருட்டா லீன்ற தாதை விழவெறிந்தாய்,
அடுத்த தாதை யினியுனக்கு நா" மென் றருள்செய்
தணைத்தருளி
மடுத்த கருணை யாற்றடவி யுச்சி மோந்து மகிழ்ந்தருள, 54 |
| |
|
1260.
|
செங்கண்
விடையார் திருமலர்க்கை தீண்டப் பெற்ற சிறுவனா
ரங்கண் மாயை யாக்கையின்மே லளவின் றுயர்ந்த சிவமயமாய்ப்
பொங்கி யெழுந்த திருவருளின் மூழ்கிப் பூமே லயன்முதலாந்
துங்க வமரர் துதிசெய்யச் சூழ்ந்த வொளியிற் றோன்றினார். 55 |
1259. (இ-ள்.) வெளிப்படை. தொடையாகிய
கொன்றை மாலை சூழ்ந்த
சடையினையுடைய சிவபெருமானார் தமது துணைத்தாள்களினீ ழலின் கீழே
விழுந்தவரை எடுத்து நோக்கி, "நம்பொருட்டாக உன்னைப்பெற்ற தந்தை
வீழும் படி நீ எறிந்தாய்; இனி, உனக்கு நாமே அடுத்த தந்தையாயினோம்"
என்று அருளிச்செய்து, அவரை அணைத்தருளி, நிறைந்தகருணையினால்
தடவி; உச்சிமோந்து மகிழ்ந்தருள, 54
1260. (இ-ள்.)
வெளிப்படை. செங்கண் விடையினையுடைய
சிவபெருமானது மலர்போன்ற திருக்கையினாலே தீண்டப்பெற்ற
விசாரசருமராகிய சிறுவனார், அவ்விடத்தே தமது மாயை உடம்பின்
மேல் அளவில்லாமல் உயர்ந்த சிவமயமாய்ப்
|