வாழ்வது
- வாழ்வதாகிய என்றலுமாம். என்னும் - என்ற பெயரால்
அறியப்படுகின்ற. வளநகரதனில் - போற்றும் பொற்பால் - சூழ்ந்து - நீங்கா
அந்நிலை - அரனார் - வாழ்வது (ஆகிய) - கோயில் - மல்கும் என்று
கூட்டி முடித்துக் கொள்க.
தன்னின்
மல்கும் - அன்புமிக்க - என்பனவும் பாடங்கள். 5
556.
|
பொருட்டிரு
மறைக டந்த புனிதரை யினிதக் கோயின்
மருட்டுறை மாற்று மாற்றால் வழிபடுந் தொழில ராகி
யிருட்கடு வொடுங்கு கண்டத் திறையவர்க் குரிமை
பூண்டார்க் கருட்பெருந் தொண்டு செய்வா ரவரெறி
பத்த ராவார். 6 |
(இ-ள்.)
வெளிப்படை. பொருளைத்தரும் வேதங்களையும் கடந்து நின்ற
புனிதராகிய சிவபெருமானை இனிதாக அத்திருக்கோயிலிலே, மருளாகிய
பிறவிப் பகையை மாற்றும் நெறியால் வழிபடுவாராகி, இருள் போன்ற
விடமானது ஒடுங்கி நிற்கும் கண்டத்தினையுடை சிவபெருமானுக்கு
உரிமையாகிய அடிமை பூண்ட அன்பர்களுக்கு அவனது அருள்வழியே
நிற்கும் பெரிய தொண்டு செய்வாரொருவர் உளர்; அவர் எறிபத்தர்
என்று
சொல்லப் பெறுவார்.
(வி-ரை.)
பொருள் திரு மறை பொருள் - உண்மைப் பொருளைத்
தருகின்ற. அப்பொருளைத் தருதலால் வீடுபேற்றினுக்குக் காரணமாகிய மறை
திருமறை எனப்பட்டது. இங்குப் பொருளென்றது
அறம் பொருளின்பம்
வீடென்னும் உறுதிப்பொருள். "வேதத்தில் ஒதத் தகுமற மெல்லாமுள"...
வேதத்தை யோதியே வீடுபெற் றார்களே" என்பது திருமந்திரம். நாதமாகிய
பிரணவத்தினின்றும் உதிப்பன வேதம். இறைவன் நாதமுடிவில் -
நாதாந்தத்தில் - விளங்குபவன். வேதஞானம் அபரஞானமாகிய - கலைஞானம்
எனப்படும். இறைவன் அபரஞானத்தால் உணரப்படான். உணர்வரிய
மெய்ஞ்ஞானமாகிய பரஞானத்தாலே அறியப்படுபவன். ஆதலின் மறைகடந்த
என்றார்.
மறைகள்
தந்த என்று பிரித்து இறைவர் உலகுய்ய மறையளித்தலைக்
கருத்தாகவும் உரைக்க வைத்த அழகு காண்க. பொருள் - திரு
- என்ற
அடைமொழிகள் இதன் சிறப்புக் குறித்தன. தாம் மறைகளைத் தந்தார்;
ஆயின் அவற்றைக் கடந்தவர் என்க.
மருட்டுறை
மாற்றும் ஆற்றல் - மருள் - பொருளல்லவற்றைப்
பொருள் என்றுணர்வது. இது மாணாப் பிறப்புக்குக் காரணமாம் என்ப.
"மருள் - விபரீத உணர்வு. இது சகலாவத்தையில் ஆணவமலத்தால்
நிகழ்வது. துறை - அவ்விபரீத உணர்வின்
வகையாகிய தமம், மோகம்
முதலியன. மாற்றும் ஆறு - மல காரியங்களை
நீக்குவதாகிய சிவாகம சீலம்.
சிவாகம சீலமுடையார்க்கே மலநீக்க முளதாம்" - ஸ்ரீமத். முத்துக்குமாரத்
தம்பிரான் சுவாமிகள் உரைக் குறிப்பு.
வழிபடும்
தொழிலர் - இறைவனது வழிபாடே பிறவிமாற்றும்
தன்மையுடையது என்க. மருட்டுறை என்பது மருளின் வழியதாக ஆகின்ற
பிறப்பு என்ற பொருள் தந்து நின்றது. அருட்டுறையாகிய பொருட்டுறை
வழிப்படாதவர் மருட்டுறையே சேர்வர் என்க. அதனைமாற்றிப் புனிதராக்குதல்
புனிதராகிய இறைவர் செயும் செயலே என்பார் மாற்றும்
என்றும், புனிதரை
- என்றும் குறித்தார். ஆற்றால் - வழியினாலே.
அவைகள் ஆகமங்களில்
விதித்தனவும் ஆன்றோராசாரத்தாற் பெற்றனவுமாம்.
வழி
படும் தொழிலர் - அவ்வழியிலே தாம் படுகின்ற செயலினைச்
செய்வார்.
தொழிலர் -
ஆகி - உரிமை பூண்டார்க்குத் தொண்டு செய்வார் -
அவர் எறிபத்தர் ஆவார் எனக்கூட்டி முடிக்க.
இருள்
கடு ஒடுங்கு கண்டத்து இறையவர் - திருநீலகண்ட
முடைமையால் தாமே முதல்வர் எனக்காட்டி நிற்பவர். இருண்ட விடத்தினைத்
தடுக்கவல்ல
|