பக்கம் எண் :


708 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 

அவரே மருட்டுறை மாற்றும் வழிதர வல்லவர் என்பது குறிப்பு.
"இருட்கடுவுண்டவ ரருளும்" - திருநா - புரா - 185. அருட்பெருந்
தொண்டு
- தற்போதத்தாற் செய்வதன்று - தற்போதமிறந்த நிலையிலே சிவனருள் பதிய அதன் வசப்பட்டுச் செய்யப்படுவது.

     வழிபடுந் தொழிலர் - என்றதனால் அரன் பணியும், பூண்டார்க்கு
அருட்பெருந் தொண்டு என்றதனால் அடியார் பணியும் கூறப்பட்டன.
அடியார் பணி பலவாதலின் இவர் செய்த அடியார் பணியின் வகை வரும்
பாட்டில் விரிக்கப்பட்டது. இவர் அரன் பணியினும் அடியார்க்குற்றிடத்துதவும்
பணியினையே சிறப்பாகக் கொண்டு அதனால் இச்சரிதம் நிகழ்ந்ததாதலின்
அதனை இச்சரிதத் தொடக்கத்துக் (551) கூறினார்.

     அடியார் தொண்டு அரன்பாலன்பு பற்றிய தொடர்பால் நிகழ்வதாதலின்
இங்கு இரண்டினையும் சேர்த்துக் கூறியதோடு அரன்பாலன்பே மூலமாம்
என்பதனை இச்சரித இறுதிப் பாட்டில் "சடையவர் பொற்றாளில் ஆனாதகாத
லன்பர் எறிபத்தர்," (607) என முடித்துக் காட்டியதும் காண்க.

     உரிமை பூண்ட என்பது பாடமாயின் இப்பாட்டால் அவர் செய்த
அடியார் பணியினையும் வகுத்துக் கூறியதாகக் கொள்க.

     செய்வார் அவர் ஆவார் - செய்வாராகிய அவரே உளராயினவர்;
அடியார் பணி செய்யா ஏனையோர் உளராகார் என்ற குறிப்புமாம்.

     இறைவருக்குரிமை - என்பதும் பாடம். 6

557.
மழைவள ருலகி லெங்கு மன்னிய சைவ மோங்க
வழலவிர் சடையா னன்பர்க் கடாதன வடுத்த போது
முழையரி யென்னத் தோன்றி முரண்கெட வெறிந்து
                                  தீர்க்கும்
பழமறை பரசுந் தூய பரசுமுன் னெடுக்கப் பெற்றார்.     7

     (இ-ள்.) வெளிப்படை. நிலைபெற்ற சைவம் மழையினால் வளருந்
தன்மையுடைய உலகத்தில் எங்கும் ஓங்கும்படியாக, அழல்போன்ற நிறத்துடன்
அவிர்ந்த சடையினை யுடையானது அன்பர்களுக்கு அடுக்கத்தகாத இடர்கள்
வந்த காலத்தில், குகையினின்றுங் கிளம்பிப் பாயும் சிங்கம்போல,
விரைவிற்றோன்றி அந்த முரண்பட்ட வலிமை கெடும்படி எறிந்து தீர்க்கும்
படைக்கலமாகிய, பழமறைகளாற் போற்றப்பட்டதாகிய பரசாயுதத்தை
எப்போதும் ஏந்துகின்றவர் (அவர்).

     (வி-ரை.) மழைவளர் உலகு - உலகம் மழையின் றுணையானே
வளர்ந்து வழங்குவதாம். "வானின் றுலகம் வழங்கி வருதலால்"என்பது
திருக்குறள்.

     உலகில் எங்கும் மன்னிய சைவம் - மன்னிய சைவம் எங்கு
மோங்க என்க. சைவம் சிவத்துடன் சம்பந்தமாவது. உலகத்தென்றும்
சிவசம்பந்தமே நிறைவது - சிவ நிறைவுட்பட்டது உலகம். "ஆண்டுலகே
பழனைத்தினையும் வைத்தார் தாமே யங்கங்கே சிவமாகி நின்றார் தாமே"
(திருப்பழனம் - 9) என்ற திருத்தாண்டகமுங் காண்க. மன்னுதல் - இடையூறு
வந்த காலத்தும் அழிவின்றி நிலைபெறுதல். ஓங்க - எங்கும் மேம்பட்டு நிற்க.
நிலைபெற்ற நிறைவாகிய அது பொதுவகையாலன்றிச் சிறப்பாக விளக்கம்
பெற. சைவம் எங்கும் மன்னியதாயினும் இடையூற்றின் மிகுதிப்பாட்டாற்
சிலவிடத்து ஓங்காது குன்றி நிற்கும். கூன்பாண்டியர் காலத்தே சமணம்மிக்குச்
சைவ விளக்கம் குன்றியது போலக் காண்க. அவ்வாறு குன்றாது ஓங்க
இந்நாயனார் இடையூற்றினை எறிந்து தீர்க்கப் பரசு எடுத்தனர் என்பது.
மன்னிய - செய்யிய என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சமாகக் கொண்டு,
உலகில் எங்கும் மழை மன்னும்பொருட்டுச் சைவம் ஓங்க என்றுரைத்தலுமாம்.
சைவம் ஓங்குதலால் மழைமன்னுதல் "வீழ்க தண்புனல்" என்ற
திருப்பாசுரத்தாற் காண்க. மரசினால் அடாதன நீங்கின; அவை நீங்கச் சைவம்
ஒங்கிற்று; அது ஒங்க மழை மன்னிற்று; அது மன்ன உலகம் வளரும் - எனக்
கொண்டுரைக்க. இச்சரிதத்தே யானையால் நேர்ந்த சிவாபசாரம் இந்நாயனாரது