உற்றிடத்து
- முன்சென்று - அடாதனவாகிய இடையூறுகள் உற்ற
அவ்விடத்தே ஒருவரும் வேண்டாது, தாமே முற்படச் சென்று "அன்பர்க்
கொல்லைவந் துற்ற செய்கை யுற்றிடத் துதவு நீரார்" (551) என்று தொடங்கிய
ஆசிரியர் அதனையே அனுவதித்து முடித்துக் காட்டினர்.
நாளும்
நாளும் - பல நாளும், நாளுநாளும் உதவியே என்றும், நாளு
நாளுந் தாங்கி என்றும் முன்னும் பின்னும் இயைக்க. இடைநிலைத் தீபகம்.
நல்
- தவம் - கொள்கை - தாங்கி -
சிவனடி மறவாச் சிந்தையும்
அதனால் அவனடியார்க்குப் பணி செய்யும் ஆர்வமும் தவக் கொள்கை
எனப்பட்டன. அடாதன செய்தாரைத் தண்டித்து எறிகின்ற வகையாலே இங்கு
யானையும் பாகரும் பட்டமைப் போலப் பலரும் படவரினும், அவை
திருத்தொண்டினை நிகழச் செய்யும் நன்மை பயத்தலால் நற்கொள்கை
எனப்பட்டன. தாங்கி அடியார்க்கு
வரும் இடையூறுகளைக் களைவது
ஆண்டானாகிய அரன் பொறுப்பு. "இன்றோரிடையூ றெனக்குண்டோ"
என்பது திருவாசகம். ஆயின் இங்கு அவரது பிரதிநிதியாக, அவர்
உள்ளிருந்து ஊக்கி அறிவித்து இயக்கிய வழியே, எறிபத்தர் தமது
கடமையாக மேற்கொண்டு செய்தனர். இது பெரும் பாரமான கடமையாதலின்
தாங்கி என்றார். அதனாற் கயிலையிலே இவர் கொற்றவர்
கணத்தின்
முன்னாம் கோழதற்றலைமை பெற்றனர் என்க.
நலமிகு
கயிலை வெற்பு - நன்மைக்கே யிடமாகியது கயிலை
என்பது. கணத்தின் முன்னாங் கோ - கணங்களின்
முதல்வர்.
முதற்றலைமை - அவர்க்குள்ளும் முதல்வராகும்.
தலைமை.
கொற்றவக்கணம்
- என்பதும் பாடம். 55
606.
|
ஆளுடைத்
தொண்டர் செய்த வாண்மையுந் தம்மைக் கொல்ல
வாளினைக் கொடுத்து நின்ற வளவனார் பெருமை தானும்
நாளுமற் றவர்க்கு நல்கு நம்பர்தா மளக்கி லன்றி
நீளுமித் தொண்டி னீர்மை நினைக்கிலா ரளக்க வல்லார்? 56
|
(இ-ள்.) வெளிப்படை. ஆளுடைய தொண்டராகிய எறிபத்த நாயனார்
செய்த வீரச் செயலினையும், தம்மையுங் கொல்லும்படி தமது உடைவாளையுங்
கொடுத்து நின்ற சோழனாரது பெருமையினையும், நாளுநாளும் அவர்க்கு
அருள்கள் நல்கும் நம்பராகிய இறைவர் தாமே அறந்தாலன்றி, நீளச்
செல்கின்ற இந்தத் திருத்தொண்டின் தன்மைகளை நினைக்குமிடத்து யாவர்
அளக்கும் வன்மையுடையா ராவர்? (ஒருவருமிலர்.)
(வி-ரை.)
ஆளுடைத் தொண்டர் - தாம் அடியார்க்கு ஆளாகவும்
தம்மை அவர்களது உடைமைப் பொருளாகவும் கொண்ட தொண்டர்.
அடியவர்க்காளாகத் தொண்டு செய்தலே தமது செயல் என்பதாம்.
மேற்பாட்டில் உரைத்தவை காண்க. ஆளுடைய அரசு என்பதுபோல்
இறைவனால் ஆளாகக் கொள்ளப்பட்ட என்றுரைப்பாரு முண்டு.
ஆள்
- ஆண்மை என்பாருமுண்டு. மேலும் ஆண்மையும்
என்றமையால் அஃதுரையன் றென்க.
ஆண்மை
- வீரச் செயல். இச்சரிதத்தின் நிகழ்ச்சிகள் காண்க.
யானையின் பலமும், அதுவும் மதங் கொண்டதும், பாகரும் பலராய்ப் பெரிய
அரசரின் வலிய சார்பு கொண்டதும், தமதுதனிமையும் முதலிய ஒன்றும்
எண்ணாது திருத்தொண்டினுக்குச் செய்த அபசாரம் ஒன்றினையே கருதிச்
செய்த தீரச் செயலை இங்கு உன்னுக.
வளவனார்
பெருமை என்ற விடத்தும் அரசர்பால் நிகழ்ந்த
முன்னிகழ்ச்சிகளை எண்ணுக. பெருமை - செம்பியன்
பெருமை (604)
என்றதின் கீழ் உரைத்தவை காண்க. மேற்பாட்டில் எறிபத்த நாயனார்
அப்பெருமைகளைச் சிந்தித்தவாறு கூறினார். இங்கு ஆசிரியர் தாம்
சிந்தித்துக் கண்டவாறு உலகுக்குக் காட்டுகின்றார்.
|