பக்கம் எண் :

திருத்தொண்டர் புராணமும் - உரையும்1

திருச்சிற்றம்பலம்
பெரியபுராணம்
என்னும்
திருத்தொண்டர் புராணம்
இரண்டாங் காண்டம்
ஆறாவது
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
திருச்சிற்றம்பலம்
வம்பறா வரிவண்டு மணநாற மலரு
     மதுமலர்நற் கொன்றையா னடியலாற் பேணா
எம்பிரான் சம்பந்த னடியார்க்கு மடியே;
     னேயர்கோன் கலிக்காம னடியார்க்கு மடியேன்;
நம்பிரான் றிருமூலனடியார்க்கு மடியேன்;
     னாட்டமிகு தண்டிக்கு மூர்க்கர்க்கு மடியேன்;
அம்பரான் சோமாசி மாறனுக்கு மடியே;
     னாரூரி னாருரிலம்மானுக்காளே.
திருச்சிற்றம்பலம்
- திருத்தொண்டத் தொகை (5)