| 
28. திருஞானசம்பந்த நாயனார் புராணம்  | 
| தொகை | 
| "வம்பறா வரிவண்டு மணநாற மலரும் | 
|      மதுமலர்நற் கொன்றையா னடியலாற் பேணா | 
|  வெம்பிரான் சம்பந்த னடியார்க்கு மடியேன்......" | 
- திருத்தொண்டத்தொகை (5)  | 
| வகை | 
| வைய மகிழயாம் வாழ வமணர் வலிதொலைய | 
| ஐயன் பிரம புரத்தரற் கம்மென் குதலைச்செவ்வாய் | 
| பைய மிழற்றும் பருவத்துப் பாடப் பருப்பதத்தின் | 
| தைய லருள்பெற் றனனென்பர் ஞானசம் பந்தனையே. | 
(33)  | 
 | பந்தார் விரலியர் வேள்செங்கட் சோழன் முருகனல்ல | 
| சந்தா ரகலத்து நீலநக் கன்பெயர் தான்மொழிந்து | 
| கொந்தார் சடையர் பதிகத்தி லிட்டடி யேன்கொடுத்த | 
| வந்தாதி கொண்ட பிரானருட் காழியற் கொற்றவனே. | 
(34)  | 
 - திருத்தொண்டர் திருவந்தாதி  | 
| விரி | 
| 1899.வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்கப் | 
| பூதபரம் பரைபொலியப் புனிதவாய் மலர்ந்தழுத | 
| சீதவள வயற்புகலித் திருஞான சம்பந்தர் | 
| பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம். | 
1  | 
     இரண்டாம் காண்டம்:- இப்புராணத்தின் பெரும்புரிவுக ளிரண்டனுள் இரண்டாம் பிரிவு.  | 
     சருக்கம்:- இனி நிறுத்தமுறையானே, ஆறாவதாகத் திருத்தொண்டத் தொகையினுள் "வம்பறா வரிவண்டு" என்று தொடங்கும் திருப்பாட்டிற் றுதிக்கப்பட்ட ஆறு அடியார்களது சரிதம் கூறும் பகுதி. அவர்களாவார் : திருஞான சம்பந்த நாயனார், ஏயர்கோன் கலிக்காம நாயனார், திருமூல நாயனார், தண்டியடிகணாயனார், மூர்க்க நாயனார், சோமாசிமாற நாயனார் என்ற அறுவர்.  | 
     புராணம்:- அச்சருக்கத்தினுள் முதலாவது திருஞானசம்பந்த நாயனாரது சரித வரலாறும் பண்புங் கூறும் பகுதி. இவ்வாற்றான் முதலாவது திருஞான சம்பந்த நாயனார் சரிதங் கூறத் தொடங்குகின்றார்.  | 
     தொகை:-வம்பினிடத்து மாறாதிருக்கும் வரிகளையுடைய வண்டு களுடன் மணம் வீச மலர்த்தும் தேன் பொருந்திய மலராலாகிய நல்ல கொன்றை மாலையை.  |