பக்கம் எண் :

திருத்தொண்டர் புராணமும் - உரையும்13

நிரந்தரநீ ளிலைக்கடையா லொழுகுதலா னெடிதவ்வூர்
மரங்களுமா குதிவேட்குந் தகையவென மணந்துளதால்.
7
     (இ-ள்.) பரந்த..........எரியில் - இடமகன்ற விளைவோடு கூடிய வயலில்எழுந்த சிவந்த தாமரை மலராகிய பொங்கும் தீயினில்; வரம்பில்......நெய்-அவ்வயல் வரம்பிலே வளர்கின்ற தேமாமரத்தின் பழம் பிளந்ததனால் வரும் சாறாகிய நறு நெய்யானது; நிரந்தரம்......ஒழுகுதலால் - நீண்ட இலை நுனியின் மூலம் இடைவிடாது ஒழுகுவதனால்; மரங்களும்.....தகையவென - உரிய மக்களேயன்றி மரங்களும் ஆகுதிவேட்கும் தன்மையுடையன என்னும்படி; அவ்வூர் மணந்துளதால் - அவ்வூர் பொருந்தியுள்ளது. ஆல் - அசை.
     (வி-ரை.) இத்திருப்பாட்டுத் தொழில்பற்றிப் போந்த நுட்ப வணியினையும் தற்குறிப்பேற்ற வணியினையும் உள்ளுறுத்த ஏகதேசவுருவகம்.
     விளை வயல் - ஆகுதி வேள்விக்களமாகவும், பங்கயம் - எரியாகவும்; மாங்கனிச்சாறு - எரியிற் பெய்யும் ஓம நெய்யாகவும்; மாவிலை - அந்நெய்யினை எடுத்துப் பெய்யும் ஓமத்துடுப்பாகவும்; மா முதலிய மரங்கள் ஆகுதி செய்யும் தலைவர்களாகவும் உருவகிக்கப்பட்டன. இலைக்கடையால் - என்றதனால் மரங்களின் கிளைகள் வேள்வியில் நெல் சொரியும் கைகளாகக் கொள்ள நின்றன. பங்கயம் - மலருக்கு ஆகுபெயர்.
     மரங்களும்....தகைய - வேதியர்களது ஓமதூமம் இடைவிடாது நிற்றல் முன்பாட்டிற் கூறினார்; அதனைத் தொடர்ந்து அவ்வேதியர்களே யன்றி மரங்களும் ஆகுதி வேட்கும் தன்மை தோன்ற நின்றன என்றார். மரங்களும் - உம்மை இறந்தது தழுவிய எச்சவும்மை. வேட்கும் - வேள்வி செய்யும். விரும்பும் என்ற தற்குறிப்பேற்றமும் காண்க. தகைய - தகைமை - தன்மையை - யுடையன; அவ்வூர் மணந்துளது - என்று கூட்டி முடித்துக் கொள்க. இவ்வாறே நாடு - நகரம் - ஆறு- மரம் - முதலியவற்றின் இயற்கைவளங்களை அவ்வந் நாயன்மார்களது சரிதக்கண் கொண்டு அத்தன்மையே பெறக்காணும் ஆசிரியரது தெய்வக் கவிநலம்பற்றி முன் 1018 - 1019 - 1020 - 2042 பாட்டுக்களையும் ஆண்டுரைத்தவற்றையும் பார்க்க; இதுபோன்று மேல்வரும் 1907-ம் பிறவும் காண்க.
     வயற் செய்ய பங்கயம் - இது நீர்ச் சிறப்பினால் இன்றும் பல இடங்களிற் காணவுள்ளது.
     பங்கயமாம் பொங்கு எரியில் - ஆம் - ஆக்கச் சொல் உருவகம் குறித்தது. இதனை மது முதலிய ஏனையிடங்களிலும் கொள்க. "செழுநீர்க் கமலங்கள் மேலா லெரிகாட்டும்" (பிள். தேவா. வீழி).
     வரம்பில் வளர் தேமா - வயலின் பயிர்களுக்கு நிழல் தாக்காதபடி மா முதலிவற்றை வயல் ஓரங்களில் வளர்க்கும் முறையை அறிவிக்க வரம்பில் வளர் என்றார். தேமர் - மாவின் சிறந்த ஒருவகை.
     மது நறு நெய் - மது - என்பது சுவையினையும், நறு - மணத்தையும்
உணர்த்தின. இவை மாங்கனியின் சாற்றுக்கும் ஓம நெய்யினுக்கும் ஒப்ப உரிய பண்புகள்.
     நிரந்தரம் நீள் இலக்கடையால் ஒழுகுதலால் - நிரந்தரம் ஒழுகுதல் - வேள்வியில் நெய் சொரியும் பண்பு. மிகுதியாய்ச் சொரிதலும், இடையறுதலும் இன்றி ஒரு தன்மைத்தாய் மெல்லியதாய் ஒழுகவிடுதல் முறை. தைல தாரை என்பர். நீள் இலைச் சடையால் - நீள் இலை - மாவிலை. தன்மைநவிற்சி. "நெட்டிலை யிருப்பை" என்ற புறப்பாட்டின் சுவையினும் மேம்பட்ட சுவை இம்மாவின் நீளிலையிற் கண்டு கொள்க. மாவிலை கொண்டு ஆகுதி நெய் சொரியும் வழக்கும் காண்க. நீளிலை - நெய் பெய்யும் துடுப்பாக (சிருக்கு) உருவகம். இவ்வாறு காணும்