|
ஒழுக்கத்தைக் கொண்டிருத்தலால் என்ற குறிப்புடன் இரட்டுற மொழிந்து கொள்ளவும் நின்றது. |
நெடிது - நீண்டகாலம். "அளந்தறியாப் பல்லூழி"யும் (1904). |
தன்மை - உவமை - உருவகம் - குறிப்பு - தற்குறிப்பேற்றம் முதலிய பல அணிச் சுவைகளும் கொண்டு விளங்கும் பெருஞ்சிறப்புடைய இத்திருப்பாட்டுப் புலவர்க்குப் பெருவிருந்தாகும். |
தகைமையென - வயங்கியதால் - மலர்ந்துளதால் - என்பவும் பாடங்கள். |
7 |
1906.வேலையழற் கதிர்படிந்த வியன்கங்குல் வெண்மதியஞ் |
சோலைதொறு நுழைந்துபுறப் படும்பொழுது துதைந்தமலர்ப் |
பாலணைந்து மதுத்தோய்ந்து தாதளைந்து பயின்றந்தி |
மாலையெழுஞ் செவ்வொளிய மதியம்போல் வதியுமால். |
8 |
(இ-ள்.) வேலை ..... கங்குல் - ஞாயிறு கடலினுள் படிந்தபின் உளதாகும் பின் இரவில் விளங்கும் வெள்ளிய மதியம்; சோலை .... பொழுது - சோலைகள் தோறும் நுழைந்து நுழைந்து வெளிப்பட்டுத் தோன்றும்பொழுது; துதைந்த .... பயின்று - நெருங்கிய மலர்களின் பக்கத்தில் அடைந்து அவற்றின் தேனிலே தோய்ந்தும் மகரந்தங்களை அளாவியும் இவ்வாறு நெடுநேரம் பயின்றதனால்; அந்தி ..... வதியும் - அந்திமாலைப்போதில் எழுகின்ற செவ்வொளியினையுடைய மதியினைப்போல் (இந்நகரத்தில்) நிலைபெற்று விளங்கும். |
(வி-ரை.) கங்குல் வெண்மதியம் - அந்திமாலை எழும் - செம்மதியம்போல் வதியும் - என்று கூட்டியுரைக்க. மதி, அந்திமாலையில் உதிக்கும்போது செவ்வொளி சாட்டும்; பின்னர் வெண்மதியாய் விளங்கும். இந்நகரத்தில் அவ்வாறன்றி இரவிலும் செவ்வொளியுடன் விளங்கும் என்றபடி; அதன் காரணம், சோலை தொறும் நுழைந்து மலர்த்தேன் றோய்தலும் மகரந்தம் அளாவுதலுமாம் என்பது. |
வெண்மதியம் செவ்வொளிய மதியம்போல் வதியும் - வெண்மதி நுழைந்து - அணைந்து - தோய்ந்து - அளைந்து - பயின்று செம்மதியம்போல வதியும் என்றலால் இது தொழில்பற்றி வரும் அதிசய அணி. வினையெச்சங்கள் காரணப் பொருளில் வந்தன. |
சோலைதொறும் நுழைந்து - அந்நகரினைச் சூழ்ந்த சோலைகள் பலவும் வானுற நீண்டு வளர்ந்து ஆகாய வெளியை மறைப்பனவாக உள்ள நிலை காட்டப்பட்டது. அழற்கதிரின் வெப்பமாற்றாது பல சோலைதொறும் நுழைந்தது என்று தற்குறிப்பேற்றம்பட உரைத்ததும் காண்க. |
நுழைதல் முதலிய தொழில்களை மதியம் செய்யாவிடினும் செய்ததுபோலவும், அதன்பயனாகத் தன்மையும் கோலமும் மாறியதுபோலவும் கூறுதல் அணியாம். |
அழற்கதிர் - ஞாயிறு. அழல் - வெப்பம். கதிர் - ஒளி. அதனையுடைய ஞாயிற்றுக் காயிற்று. அழற்கதிர் வேலைபடிந்த - என்று கூட்டுக. |
வியன் கங்குல் - வியன் - பெரிய; முற்றிய. அந்தி மாலை - கதிர்படிவதற்கு முன் உள்ள நேரம். வியன் கங்குல் - பின்னுள்ள நேரம். (வியன் - வியப்புமாம்.) |
நுழைதல் - புறப்படுதல் - அணைதல் - நோய்தல் - அளைதல் - பயிலுதல் என்ற இச்செயல்கள் நில அண்டமும் மதி யண்டமும் என்ற இவற்றின் சுழல்கையினால் ஆவனவேனும் இவை மதியின் செயல்களாகத் தோற்றப்படுதலின் மதியின் மேலேற்றிக் கூறினார். கதிர்படிதலும் அவ்வாறு மலர்ப்பால் அணைதலும் மதுத் தோய்த்தலும் தாது அளைதலும் என்ற இவை அவ்வவற்றின் வழியாக மதியின் கதிர்கள் பலநிறக் கண்ணாடி மூலம் காண்பது காட்சிப்படும்போது உள்ள தோற்றம் |