|
கூறினார்; இதனால் ஏனைய எல்லாமடக்கிக் கொள்ளப்படும். வேதியர் வேத வேள்விச் செயல் பற்றி முன் 1904 - 1905 - 1907 பாட்டுக்களிற் கூறினாரதலின் அதற்கேற்ப அவர் மகளிரும் தத்தம் கணவருடன் கலந்து வேள்விக்காவன முறை புரிகின்றனர் என்று கூறியபடி. மனைவேள்விகள் கணவன் மனைவி இருவரும் கூடிச் செய்யற்பாலது என்பது விதி. |
சுதை ஒழுக்கம் - வெண் சுண்ணக்கோலம் (மாக்கோலம் என்பது இந்நாள் வழக்கு) ஒழுக்கி யிடுதற்பாலது. |
கனை வானம் - கனைத்தல் - சத்தித்தல்; வானம், ஒலி என்ற ஒரே குணமுடையது. |
முகிற் கூந்தல் - உருப் பற்றி வந்த உவமம். "மஞ்சு தழைத்தென வளர்ந்த மலர்க் கூந்தல்" (894) என்ற விடத்திற் போலப் பயனுவமமுமாம். |
வட மீன் - அருந்ததி; கற்புக்கிலக்கியமாகக் கூறப்படும் வான மீன். கதிர் செய்தல் - ஒளியால் விளங்குதல். இப்பாட்டால் அந்நகர் மாடங்களின், சிறப்பும் இல்வாழ்க்கை நலமுடைய மறையோர் மகளிர் சிறப்பும் கூறப்பட்டன. முன் பாட்டுக்களிற் புறநகர்ச் சிறப்புக் கூறிவந்த ஆசிரியர், உண்ணகரச் சிறப்புப் பற்றிக் கூறப்புகுகின்றனர். |
10 |
1909.வேள்விபுரி சடங்கதனை விளையாட்டுப் பண்ணைதொறும் |
பூழியுற வகுத்தமைத்துப் பொன்புனைகிண் கிணியொலிப்ப |
ஆழிமணிச் சிறுதேரூர்ந் தவ்விரதப் பொடியாடும் |
வாழிவளர் மறைச்சிறார் நெருங்கியுள மணிமறுரு. |
11 |
(இ-ள்.) வேள்வி புரி சடங்கதனை - வேள்விகளிற் செய்யும் சடங்குகளை; விளையாட்டு.....அமைத்து - தாம் விளையாடும் இடங்களிலெல்லாம் மண்ணின் புழுதிபொருந்தும்படி வகுத்து அமையச் செய்து; பொன் புனை...ஊர்ந்து - பொன்னாலியன்ற கிண்கிணிகள் சத்திக்கும்படிச் சக்கரம் பூட்டிய அழகிய சிறு தேர்களை ஊர்ந்து; அவ்விரதப் பொடி ஆடும் - அந்தத் தேரூர்தலினால் கிளம்பிய மண் துகள் படிய விளையாடுகின்ற; வாழி வளர்.....மறுகு - வாழும்படி வளர்கின்ற மறைச் சிறுவர் நெருங்கியிருக்கப் பெற்றுள்ளன அழகிய தெருக்கள். |
(வி-ரை.) வேதியர்களையும் அவரது மகளிர்களையும் முன்னர் வேள்வி பற்றிச் சிறப்பித்துக் கூறிய ஆசிரியர், அதனையே தொடர்ந்து அவர்தஞ் சிறார்களது சிறப்பினையும் அத்தன்மை பற்றியே கூறுகின்றார். பெற்றோரது வாழ்க்கையின் இயல்பினைக் கண்டு அதனையே பின் பற்றுவது அவ்வச்சிறாரினியல்பாகும் என்ற உண்மையும் காண்க. |
வேள்வி புரி சடங்கு அதனை - வேள்விக்கண் புரியும் என ஏழனுருபு விரிக்க. புரி சடங்கு - பெரியோர்கள் புரியும். சடங்கு - சடங்குகள். பால்பகா அஃறிணை. அது - பகுதிப்பொருள் விகுதி, |
விளையாட்டுப் பண்ணை - விளையாடும் இடம்; ஆடிடம்; பண்ணை - இடம் என்ற பொருளில் வந்தது என்பர். பண்ணை - கூட்டம் என்று கொண்டு விளையாடும் கூட்டந்தோறும் என்றலுமாம். |
பூழியுற வகுத்து அமைத்து - பூழி - புழுதி - மண்; யாகசாலை, வேதிகை முதலியவற்றை ஆடிடத்தில் மண்ணால் வகுத்தலும் அமைத்தலும் செய்து, வகுத்தல் - இடம் அளவு படுத்தல். அமைத்தல் - அதனுள் வேதிகை முதலியவற்றைக் கூறிட்டு நிறுவுதல். சிறு தேர் ஊர்ந்து - இதனால் அவ்வாறு ஆடும் சிறாரின் பருவங் கூறப்பட்டது. 3-வது மாதம் முதல் ஒற்றைப்பட 21-வது மாதம் முடியப் பத்துப் |