பக்கம் எண் :

22திருஞானசம்பந்தநாயனார் புராணம்

      (2) வேணுபுரம் - சூரபதுமனுக் கஞ்சி இந்திரன் பூசித்தபோது இறைவர் வேணு (மூங்கில்) வாய் முளைத்தருளினர் என்றும், ஆசாரியனைப் பிழைத்த பழியும் விருத்திராசுரனைக் கொன்ற பழியும் போக்கும்படி இந்திரன் வேணு வழியாய் அடைந்தனன் என்றும் வரும் காரணத்தாற் போந்த பெயர்.
      (3) புகலி - சூரபதுமனால் வந்த துன்பம் பொறுக்க லாற்றாது முருகப் பெருமானைத் தந்தருளும்படி தவங்கிடந்த தேவர்கள் புகலடைந்ததனாற் போந்த பெயர். "பகைகளையும் வகையிலறு முகவிறையை மிகவருள நிகரிலிமையோர் புக......புகலி" (மேற்படி 3).
      (4) பெரு வெங்குரு - பிரமனால் இகழப்பட்ட அசுர குருவாகிய சுக்கிரன் நாரதருடைய உபதேசத்தின்படி வந்து பூசித்துத் தேவ குருவுக்கு இணையாகப் பெற்றனை; நரகர் தன்னைக் கொடியன் என்று இகழும் பழி நீங்க இயமன் பூசித்து முன்னுணர்ச்சி பெற்று மௌன நிலை பெற்றனன்; இவற்றால் இப்பெயர் போந்தது. "எதிர் பொங்கெரி புலன்கள் களைவோர், வெங்குரு விளங்கியுமை பங்கர் சரணங்கள் பணிவெங்குரு" (மேற்படி 4); "செங்கோ னடாவிப் பல்லுயிர்க் குஞ் செய்வினை மெய்தெரிய, வெங்கோத் தருமன் மேவி யாண்ட வெங்குரு" (தக்கேசி - மேற்படி 4).
      (5) நீர்ப் பொருவில் திருத்தோணிபுரம் - ஊழி நீர்ப் பெருக்குக்களில் உலக மெல்லாம் அமிழ்ந்தபோது பிரணவமாகிய தோணியாக மிதந்து தன்னகத்துச் சிவபெருமான் அம்மையாருடன் எழுந்தருளப் பெறுவதால் இப்பெயர் பெற்றது. நீர் - பெருநீரினுள்; பொருவில் - ஏனை உலகமெல்லாம் அழியவும் தான் அழியாது மிதத்தலின் ஒப்பற்றது. "அணிநீ ருலகமாகி யெங்கு மாழ்கட லாலழுங்கத், துணிநீர் பணியத் தான்மி தந்த தோணிபுரம்" - (தக்கேசி மேற்படி 5); பாணியமர் பூணவருள் மாணுபிர மாணியிட மேணி முறையிற், பாணியுல காளமிக வாணின்மலி தோணிநிகர் தோணிபுரம்" (மேற்படி 5).
      (6) பூந்தராய் - சங்கநிதி பதுமநிதி என்னும் இரண்டு நிதிகளின் தெய்வங்களும் பூசித்து மாறாது கொடுக்கும் வரம் பெறுவதற்காகப் பூந்தராய் இருந்து பூசித்தமையாலும், இரணியாக்கனைக் கொல்லத் திருமால் வெள்ளைப் பன்றியாகிச் சென்று கொன்று, பூமியைக் கொம்பிலேற்று வருந்திய பழிபோகப் பூசித்தமையாலும், இப்பெயர் போந்ததென்பர். (1) பூந்தார் - பூமாலை; (2) பூ - பூமி = தாராய் - (கொம்பில் தரித்தவன், "அவர்பூ ணரையர்க் காதி யாய வடன்மன்னளுள் மண்மேற், றவர்பூம் பதிகளெங்கு மெங்குந் தங்கு தராயவனே" (தக். மேற்படி 6); "அராமிசை யிராதெழி றராயர பராயண வராக வுருவா, தராயனை விராயெரி பராய்மிகு தராய்மொழி விராய பதியே" (மேற்படி - 6).
      (7) சிரபுரம் - தேவருடன் அமுதுண்ண வேற்றுருவுடன் அமர்ந்திருந்த சயிங்கேயன் (சிலம்பன்?) என்னும் அசுரனைச் சூரியன் காட்டத் திருமால் சட்டுவத்தால் வெட்ட அவனது தலை (சிரம்) இராகுவாக நின்று பூசித்த காரணத்தாற் போந்த பெயர். "தலையாய்க் கிடந்திவ் வையமெல்லாந் தன்னதோ ராணை நடாய்ச், சிலையால் மலிந்த சீர்ச் சிலம்பன் சிரபுரம்" (தக். மேற்படி 7); "பரவமுது விரவ வுடல் புரளமுறு மரவையரி சிரமரியவச், சிரமரன சரணமவை பரவவிரு கிரகமமர் சிரபுரமதே" (மேற்படி 7).
      (8) புறவம் - இந்திரன் பருந்தாகவும் தீக்கடவுள் புறாவாகவும் யாகத்தில் பரிசோதிக்கவரச், சிபிச்சக்கரவர்த்தி புறாவின் எடைக்குத் தன் தசையறிந்திடவும் போதாமை கண்டு துலையேறித் தன் புகழ் நிறுத்திட, அப்பாவம் போகப்