|
(இ-ள்.) அப்பதியின்........முதல்வர் - அத்தலத்தில் அந்தணர்களுடைய குடியில் வந்த முதன்மை பெற்றவர்; ஆசில் மறை.......வழி வந்தார் - குற்ற நீக்கும் வேதங்களிற் கூறியபடி ஒழுகிய சீலத்தையுடைய கவுணியர் கோத்திரம் விளங்கும்படி செப்பும் சூத்திரத்தின் (உட்பிரிவு) வழியிலே வந்தவர்; சிவபாத விருதயர்.....இயல்பினார் - சிவபாதவிருதயர் என்று இந்த உலகம் வாழும் பொருட்டுத் தவஞ்செய்யும் இயல்பை யுடையவர்; உளரானார் - உள்ளவரானார். |
(வி-ரை.) இதுவரை நாயனாரது நாடு நகர முதலிய சிறப்புக்களைக் கூறி வந்த ஆசிரியர், இனி, வரன்முறையே அவர் அவதரித்த மரபு முதலியனவும், அவரைப் பெற்றோர தியல்பும், அவர் அவதரிக்க நேர்ந்த வரலாறும் கூறத் தொடங்குகின்றார். |
இப்பாட்டினால், அந்தணர் என்று குடிமரபும், கவுணியர் கோத்திரம் என்று அதனுட்பிரிவாகிய கோத்திரமும் (குலமும்), செப்பு நெறி வழி என்று அதனுட் பிரிவுகளாகிய சூத்திரம் பிரவரம் முதலியனவும், சிவபாதவிருதயர் என்று தந்தையார் பெயரும், தவஞ்செய் இயல்பினார் என்று அவரது தன்மையும், உளரானார் என்று அவரது பேற்றின் பயனும் கூறியவாறு கண்டுகொள்க. |
அந்தணர் குடி - கவுணியர் கோத்திரம் - செப்பு நெறி வழி - குடியும் கோத்திரமும் நெறி வழியும் என்றிவை வேண்டத்தக்கன என்பது மனித வாழ்க்கையின் நல் அமைப்புக்களுள் ஒன்று. இதனை ஆசிரியர் பலவிடத்தும் பலவாற்றாலும் காட்டிச் செல்கின்றார். "தருமுறைக் கோத்திரத்தின் றங்குலஞ் செப்பி" எனப் (திருஞான - புரா - 1235) பின்னர்க் கூறுதலும், "குலம் - குடி" (1280) என்றதும், பிறவும் காண்க. |
முதல்வர் - முதன்மை பெற்ற சிற்பபுடையவர். கைப்படுதல் - கைக்கொண்டொழுகுதல். ஆசில்மறைச் சீலம் - என்க. ஆசு இல் - குற்றங்களை யில்லையாகச் செய்யும். மறைச் சீலம் - மறைகளின் விதித்த ஒழுக்கம். இவை தருமம் சத்தியம் முதலாயின பொது ஒழுக்கங்களாம்; வேள்வி சிவபூசை முதலியனவே சிறப்பொழுக்கங்களாம். |
கவுணியர் கோத்திரம் - இப்போது கௌண்டின்ய கோத்திரம் என வழக்கிலுள்ளது. செப்புநெறி வழி - அக்கோத்திரத்திற் குரித்தாய் எடுத்துச் சொல்லப் பட்ட சூத்திரம் - பிரவரம் முதலாயின உள் நெறிகள். |
சிவபாதவிருதயர் - ஆளுடைய பிள்ளையாரின் தந்தையாரது பெயர். சிவன்றிருவடிகளை எப்போதும் கொண்ட மனத்தையுடையவர் என்பது பொருள். காரண இடுகுறியாக இவருக்கு அது பொருந்துவதாம் என்பதனை, "அரவணிந்த சடைமுடியா ரடியலா லறியாது, பரவுதிரு நீற்றன்பு பாலிக்குந் தன்மையர்" (1915) என்று ஆசிரியர் அறிவித்துள்ளார். இவரது அத்தன்மை மேதினி மேற்சமணர் முதலியவர்களது பொய் மிகுத்துப் பூதிசாதன விளக்கம் போற்றல் பெறா வேண்டுமென்று வரங்கிடந்தமையாலும், சிவவேள்வி செய்தற்குப் பிள்ளையாரிடம் பொருள் வேண்டியமையாலும், பலகாலம் பிரிந்திருந்த பின்பு கவலைகொண்டு பிள்ளையாரைக் காணும் விருப்பினுடன் மதுரைக்குச் சென்று சேர்ந்தபோதும் உடனே அவருடைய திருமடத்திற் செல்லாது, திருவாலவாயமர்ந்த நாதனார் திருக்கோயிலுக்குச் சென்று வணங்கிய பின்னரே திருமடத்தை விசாரித்துச் சேர்ந்தமையாலும், பிறவாற்றாலும் நன்கு விளங்கும். |
இப்புவிவாழத் தவம்செய் இயல்பினார் - தந்நலங் கருதித் தாம் வாழ எண்ணாது, உலகம் வாழும் பொருட்டுத் தவம் செய்வது என்பதனைச் செயற்கைப் பழக்கத்தாலன்றித் தம்மியல்பாக உடையவர். "தாமென்று மனந்தளராத் தகுதியரா யுலகத் |