|
துக், காமென்று சரண்புகுந்தார் தமைக்காக்குங் கருணையினான்" (பிள் - பிரமபுரம் - சீகா.) என்று இத்தன்மையையும் அதற்குச் சிவன் அருள செய்வதனையும் பிள்ளையார் கூறியருளுகின்றார். |
உளரானார் -உலகத்துக்காகத் தவஞ்செய்தலின் உள்ளவராயினார்.1281 பார்க்க. |
15 |
தாயார் |
1914.மற்றவர்தந் திருமனையார் வாய்ந்தமறை மரபின்வரு |
பெற்றியினா; ரெவ்வுலகும் பெறற்கரிய பெருமையினார்; |
பொற்புடைய பகவதியா ரெனப்போற்றும் பெயருடையார்; |
கற்புமேம் படுசிறப்பிற் கணவனார் கருத்தமைந்தார். |
16 |
(இ-ள்.) மற்று அவர் தம் திருமனையார் - அவருடைய திருமனைவியார்; வாய்ந்த......பெற்றியினார் - வாய்ப்புடைய வேதியரது மரபில் வரும் தன்மையுடையவர்; எவ்வுலகும்.......பெருமையினார் - எவ்வுலகமும் பெறுதற்கரிய பெருமையினையுடையவர்; பொற்புடைய...... பெயராற் - அழகுடைய பகவதியார் என்று போற்றப்படுகின்ற பெயரினையுடையவர்; கற்பு........கருத்து அமைந்தார் - கற்பினாலே மேம்பாடு பெறும் சிறப்புப்பற்றிக் கணவனாரது கருத்துக் கிசையத் தாம் அமைந்து ஒழுகி வருவாரானார். |
(வி-ரை.) இதனால் பிள்ளையாரது திருத்தாயாரின் மரபுநலனும் குணநலனும் கற்புநலனும் கூறப்பட்டன. |
வாய்ந்த மறை மரபு - சிவபாத விருதயரது மரபு - குடி - கோத்திரம் முதலியவற்றுடன் அணைவதற் குரிமைவாய்ந்த மரபு. இது உடல் பற்றிய தன்மை. மேல் "மரபிண்டுஞ் சைவநெறி வழிவந்த கேண்மை" (1915) என்று இதனைத் தொடர்ந்து உயிரின் தன்மைபற்றிக் கூறுவதும் காண்க. |
எவ்வுலகும் பெறற்கு அரிய பெருமை - இது 1940ல் விளக்கப்பட்டபடி உமையம்மையாரின் திருமுலை ஞானப்பால் உண்ண உள்ள பிள்ளையாருக்குத் தமது முலைப்பால் ஊட்டிய பெருமை. |
பகவதியார் - உமையம்மையாரது பெயர். பகவன் என்ற சிவபெருமானது பெயரின் பெண்பாற் பெயர். கடவுளரின் பெயரை மக்கள் இட்டு வழங்கும்முறை. |
போற்றும் பெயர் - யாவரும் போற்றும் பெயர் என்றது உமையம்மை பெயருக்கும், பிள்ளையாரது திருத்தாயாராதலின் இவ்வம்மையார் பெயருக்கும் பொருந்தும். |
கற்பு.......கருத்தமைத்தார் - கற்பின் தன்மை விளக்கப்பட்டது. |
சிறப்பாற் - என்பதும் பாடம். |
16 |
மனை வாழ்க்கை நலம் |
1915.மரபிரண்டுஞ் சைவநெறி வழிவந்த கேண்மையராய் |
அரவணிந்த சடைமுடியா ரடியலா லறியாது |
பரவுதிரு நீற்றன்பு பாலிக்குந் தன்மையராய் |
விரவுமறை மனைவாழ்க்கை வியப்பெய்த மேவுநாள், |
17 |
சமண் பரவக் கண்டுஇடருழத்தல் |
1916.மேதினிமேற் சமண்கையர் சாக்கியர்தம் பொய்ம்மிகுத்தே |
ஆதியரு மறைவழக்க மருகியர னடியார்பாற், |
பூதிசா தனவிளக்கம் போற்றல்பெறா தொழியக்கண் |
டேதமில்சீர்ச் சிவபாத விருதயர்தா மிடருழந்தர் . |
18 |
1915. (இ-ள்.) மரபு........கேண்மையராய் - இருமரபுகளும் சைவநெறியில் வழி வழி வந்த கேண்மை பொருந்தியவர்களாய்; அரவு........அறியாது - பாம்பை அணிந்த |