|
சடை முடியினை யுடைய சிவபெருமானது திருவடிகளையேயன்றி வேறொன்றையும் பொருள் என்று அறியாமல்; பரவு.....தன்மையராய் - பரவும் திருநீற்றின் அன்பினையே பாதுகாக்கும் தன்மையுடையவராகி; விரவு.....மேவு நாள் - வேத விதியின் வரும் மனைவாழ்க்கைத் திறத்தில் யாவரும் வியப்பெய்தும்படி மேவு நாளிலே; |
17 |
1916. (இ-ள்.) மேதினி........மிகுத்தே - உலகில் சமண்கையர்கள் சாக்கியர்கள் என்றிவர்களுடைய பொய்கள் மிகுதியாக்கப்பட்டே (அதனால்); ஆதி அருமறை வழக்கம் அருகி - ஆதியின் அரிய மறை வழக்கங்கள் சுருங்கி; அடியார்.....கண்டு - அடியார்களிடத்துத் திருநீற்றுச் சாதனத்தின் விளக்கமானது போற்றுதல் பெறாமல் மறையக்கண்டு; ஏதமில்.....இடருழந்தார் - குற்றமில் சிறப்பினையுடைய சிவபாதவிருதயர் தாம் மிகவும்ட துன்பத்தில் அழுந்தினர். |
18 |
இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன. |
1915. (வி-ரை.) பிள்ளையாரது திருத்தந்தையாருடைய சிறப்பைத் (1913) தனி ஒரு பாட்டினாலும், திருத்தாயரின் சிறப்பைத் (1914) தனி மற்றொரு பாட்டினாலும் முன் உரைத்த ஆசிரியர், அவ்விருவரும் கூடிய இகபர சாதனமான இல்வாழ்க்கைத் திறத்தை இவ்வொரு பாட்டிற் சேரக்கூறிய நயம் கண்டுகொள்க. |
மரபு இரண்டும்.......கேண்மை - மரபு இரண்டு - தனித்தனி சிவபாத விருதயர் பகவதியம்மையார் என்ற இருவரின் மரபுகள். இரண்டாவன தந்தை தாய் என்ற இருவழி. "இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி" (திருமுருகு) என்று இவ்வந்தணர் மரபுச் சிறப்பைக் கூறுதல் காண்க. சைவ நெறி - சிவனையே முதல்வராகக் கொண்டு செல்லும் நெறி. வழி வந்த கேண்மை - இடையீடின்றி வழி வழி (பரம்பரை) யாகத் தொடர்ந்து வந்த சுற்றத் தொடர்பு. கேண்மை - சுற்றம் என்ற பொருளில் வந்தது. இடையில் வைணவர் முதலிய ஏனை மறையோரது தொடர்பின்றி வந்தவழி என்பது; அவ்வாறு வேற்றுநெறிக் கலப்பு, இந்நாளிற் போலவே, முன்னாளிலும் காணப்பட்டமை திருவிளையாடற் புராணம் (விருத்த குமார பாலரான படலம்), கந்த புராணம் (ததீசிப் படலமும் பிறவும்) முதலியவற்றாற் கருதப்படும். |
அரவணிந்த........தன்மையராய் - முந்தை மரபின் வழிச்சிறப்பு மட்டில் அமைந்து படாது, தாமும் அந்நெறி ஒழுகிய - தன்மை. முந்தையோரது பெருமை மட்டிலும் கொண்டு, தாம் அவ்வொழுக்கம் சிறிதும் பேணாமல் குலப்பெருமை கொண்டாடும் இந்நாள் மாக்கள் இதனைச் சிந்திப்பாராக. |
அடியலா லறியாது - எதிர்மறை முகத்தாற் கூறினார். ஏனையெதனையும் அறியாத உறுதிப்பொருள்தருதற்கு. "ஒடுங்கின சங்காரத்தினல்லது உற்பத்தியில்லை" என்னுஞ் சிவஞானபோதத்துக்கு "எதிர்மறை முகத்தாற் கூறியது ஏனைக்கடவுளரின் உளதாகாமை யாப்புறுத்தற் பொருட்டு" என்றுரைத்ததனை நினைவுகூர்க. இதனால் பிரமன் - மால் - அக்கினி - வாயு முதலிய உபசாரக் கடவுளரை உண்மைப் பரமென்று வழிபட்டுழலும் ஏனை வைதிக ஒழுக்கங்கள் ஒதுக்கப்பட்டமை காண்க. |
பரவு திருநீற்று அன்பு பாலிக்கும் தன்மை - பரவு - வேதத்தாற் பரவப்பட்ட; யாவரும் பரவவுள்ள என்றலுமாம். "பரவய திருநீற் றன்பு பாதுகாத் துய்ப்பீர்" (488) என்ற விடத்துரைத்தவை பார்க்க. பாலித்தல் - சோர்வு வாராமற் காத்தல். |
மறை மனை வாழ்க்கை - மறைகளில் விதித்தபடி செலுத்தப்படும் இல்லறநிலை. வியப்பெய்த - உலகம் வியக்க. |
மேவும் நாள் - சிவபாதவிருதயர் - இடருழந்தார் என வரும்பாட்டுடன் முடிக்க. |
கேண்மையீனார் - என்பதும் பாடம். |
17 |