பக்கம் எண் :

4திருஞானசம்பந்தநாயனார் புராணம்

என்ற இரண்டினுள் அடங்கிப் பிறவி நீங்கும் முத்தி சாதனமாகிய ஒன்றினைக் குறிக்கும் என்று "பிறவியெனும் பொல்லாப் பெருங்கடலைத் நீந்தத், துறவியெனுந் தோற்றோணி கண்டீர்.......ஞானத் தமிழ்" (ஆ. பிள். மும். கோ. 11) என்று பிறிதோரிடத்தில் இவ்வாசிரியர் அருளினர். குதலை.......பருவம் - மூன்றாண்டு வயது. யாம் வாழ - "எங்களை வாழ முன்னா ளேடுவை கையினி லிட்டார்" (புரா.) பருப்பதத்தின் தையல் அருள்பெற்றனன் - ஞானத்திருமுலைப்பால் தரப் பெற்றனர். ஞானசம்பந்தனை அருள்பெற்றனன் என்பர் என்று கூட்டுக. அமணர் தொலைய என்னாது வலி தொலைய என்றது சைவச் சிறப்பு. தன் அளவுள் நில்லாது மீறிக்கேடு செய்வதைத் தடுப்பதே சைவத்தின நோக்கமென்க.
     விரலியர் - வேள் - (சிறந்த ஆண்மகன்; இங்குக் குலச்சிறையாரைக் குறித்தது) - செங்கட்சோழன் - முருகன் - நீலநக்கன் (இவர்களின்) பெயர் மொழிந்து - அந்தாதி கொண்ட பிரான் என்று முடிக்க. பந்தார் விரலியர் - மங்கையர்க்கரசியம்மையார். "பந்தார் விரன்மடவாள் பாகமா" (பிள். தேவா. நணா.) "பந்தணைவிரலாள் பங்க" (திருவா.) "பந்தணை விரலாள் பாண்டிமா தேவி" (பிள். புற நீர்மை. ஆலவாய்.) இவர் பெயரும் குலச்சிறையார் பெயரும் மொழிந்தமை " மங்கையர்க்கரசி" என்ற(புறநீர்மை) திருப்பதிகத்தினுட் காண்க. செங்கட் சோழன் - கோச்செங்கட் சோழர். "செம்பியன் கோச்செங்க ணான்செய் கோயிலே" (வைகன் மாடக் கோயில் : 5) முதலியவற்றுள் அவர் பெயர் மொழியப்பெற்றன. திருப்புகலூர் வர்த்தமானீச்சரம் (பியந்தைக் காந்தாரம்), திருச்சாத்தமங்கை (பஞ்சரம்) இத்திருப்பதிகங்களுள் முறையே முருகநாயனார், திருநீலநக்கர் இவர்களின் பெயர்கள் மொழியப்பட்டன. இனி வேள் என்றதனைச் செங்கட்சோழனுக்கு அடையாக்கின் அரசர் - வேள் - ஆண்மைமிக்க அரசர் தலைமகன் என்று பொருள் கொள்க. அடையாக்காதவழி, நின்றசீர்நெடுமாறனார், சிறுத்தொண்டர், கண்ணப்பர் இவர்களையும் கொள்ளலாம் என்பாருமுண்டு. பெயர் மொழிந்து - சடையர் பதிகத்தில் இட்டு - சடையர்மீது பாடிய பதிகத்தில் வைத்துச் சிறப்பித்து. அந்தாதி - ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி. (11-ம் திருமுறை.) எனவே இத்திருத்தொணடர் திருவந்தாதி பின்னர் இயற்றப்பட்டதென்பது போதரும். கொத்தார் சடை - மணநிறைந்த சடை. "மணங்கமழ் சடை" (பிள். தேவா. சிறுகுடி); "வெறிகமழ் சடை" (மேற்படி ஆமாத்தூர்).
     பெயரும் அருட்குருவாம் பெருமையும் தொகைநூல் பேசிற்று. ஊரும், பெயரும், அம்மை திருமுலைப்பாலுண்டு அதனால் ஞானம் பெற்றமையும், அமணர்வலி தொலைத்தமையும், அதனால் உலகை வாழ்வித்தமையும், மங்கையர்க்கரசியம்மையார் - முருக நாயனார் - திருநீலநக்க நாயனார் முதலியோர் தொடர்பு பற்றிய சரிதக் குறிப்புக்களையும் வகைநூல் வரலாற்று முறையில் வகுத்துக்காட்டிற்று. இவை விரித்த படியை விரிநூலாகிய மாபுராணத்துள், "ஆளுடைய பிள்ளையார் புராணத்துள்ளும், பிறாண்டும் கண்டுகொள்க. முன்குறித்த ஏனை நாயன்மார் தொடர்புபற்றிய வரலாறுகள் பிள்ளையார் புராணத்துள் ஏற்றப்பெற்று சுருக்கியும், அவ்வவர் புராணத்துள் விரித்தும் கூறுவதும் காண்க. அமணர் வலிதொலைய என்றதனாற் பெறப்படும் பரசமய நீக்கம் நாயனாரது அவதார உள்ளுறையாதலின் அதனை முதற்பாட்டில் வைத்தார்; அச் செயலுக்குத் துணையாய் நின்ற அம்மையாரை அடுத்த பாட்டில் வைத்தோதினார்.
34
     விரி :- 1899. (இ-ள்.) வேத......ஓங்க - வேதத்தின் நெறிகள் தழைத்து ஓங்கவும்; மிகு......விளங்க - அவற்றுள்ளே மிக்க சைவத் துறைகள் விளங்கவும்; பூத......பொலிய - பூதங்களின் தொடர் வழிவழி பொலிவுறவும்; புனித.......அழுத - தூய திருவாய் மலர்ந்து அழுதவராகிய; சீத.......திருஞானசம்பந்தர் - குளிர்ந்த வள