பக்கம் எண் :

6திருஞானசம்பந்தநாயனார் புராணம்

     பூத பரம்பரை பொலிய - உயிர்கள் வழிவழி மேம்பாடடைய. பூதம் - உயிர்கள். பிறவியினுள் தோற்றுவிக்கப்படும் - சிருட்டியினுட்படும் - உயிர்கள். பூ - பகுதி. தோன்றுதல் என்பது பொருள். பொலிதலாவது கன்மத்துக்கீடாகப் பற்பல பிறவிகளிலும் வரும் உயிர்கள் சிருட்டியின் கருத்தாகிய திருஅருளினை அவ்வவற்றின் பக்குவத்துக்கேற்பப் பெறுதற்குத் தகுதிபெற மேலோங்குதல். இது வேதநெறியாகச் சைவத் துறையில் பெறப்படும் என்பது முன் உரைக்கப்பட்டது. அவ்வாறு பொலிவடைந்தேறும் படிமுறையினைப் "புறச்சமய நெறி நின்றும் அகச் சமயம் புக்கும், புகன்மிருதி வழியுழன்றும் புகலுமாச் சிரம, வறத் துறைகளவை யடைந்து மருந்தவங்கள் புரிந்து, மருங்கலைகள் பலதெரிந்து மாரணங்கள் படிததுஞ், சிறப்புடைய புராணங்க ளுணர்ந்தும் வேதச் சிரப்பொருளை மிகத் தெளிந்துஞ் சென்றாற் சைவத், திறத்தடைவ ரிதிற்சரியை கிரியா யோகஞ் செலுத்தியபின் ஞானத்தாற் சிவனடியைச் சேர்வர்" (சித்தி. 8 - 11) என்று அருணந்திசிவாசாரியார் அருளியது காண்க. "ஆதிநூ லநாதிய மலன்றருநூ லிரண்டு மாரணநூல் பொதுசைவ மருஞ்சிறப்பு நூலாம், நீதியினா லுலகர்க்குஞ் சத்திநிபாதர்க்கு நிகத்த்தியது நீண்மறையி னொழிபொருள்வே தாந்தத், தீதில்பொருள் கொண்டுரைக்கும் நூல்சைவம்; பிற நூல், திகழ்பூர்வஞ்; சிவாகமங்கள் சித்தாந்தமாகும்" (மேறபடி - 8 - 15) என்று அவ்வாசாரியர் ஞான நூல்களை அளவுபடுத்திக் காட்டியதும் காண்க.
     இந்நுட்பங்களை உணராதார் தமமைச் சித்தாந்த சைவர் என்றும் சொல்லிக் கொண்டு சைவத்தின ழுமையாய் நிறைந்த உண்மைகளுள் ஒன்றொன்றோனும் சிற்சிலவேனும் இலைமறை காய்போற்கொண்டு மின்மினி விளக்கங்காட்டும் புறச்சமய நூல்களையும் வேத சிவாகமங்களோடொப்ப எண்ணியும், அப் புறச்சமயக் குருமாரை நமது பதிவாழ்விற் பெருமக்களோடொப்ப வாய்கூசாது கூறியும், "குருடுங் குருடுங் குருட்டாட்ட மாடிக், குருடுங் குருடுங் குழிவீழு மாறே" (திருமந்) என்றபடி தாமும் கேடுற்றுப் பிறரையும் கேடுறுத்துகின்றனர். அந்தோ பாவம்! பாவம்! "மூவரென் றேயெம் பிரானொடு மெண்ணிவிண் ணாண்டுமண் மேற், றேவரென்றேயிறு மாந்தென்ன பாவந் திரிதவரே" (திருவாசகம்). "சிவனோடொக் குந்தெய்வந் தேடினு மில்லை; யவனையொப் பாரிங் கியாவருமில்லை" (திருமந்). "விரிவிலா வறிவி னார்கள் வேறொரு சமயஞ் செய்தே, யெரி
     லினாற் சொன்னா ரேனு மெம்பிராற் கேற்றதாகும்" (தேவா); "யாதொரு தெய்வங் கொண்டீ ரத்தெய்வ மாகி யாங்கே மாதொரு பாகனார்தாம் வருவர்மற்றத்தெய் வங்கள், வேதனைப் படுமி றக்கும் பிறக்குமேல் வினையுஞ் செய்யு, மாதலா லிவையி லாதா னறிந்தருள் செய்வ னன்றே" (தத்தி - 2, 25) "செய்வானுஞ் செய்வினையு மதன்பயனுஞ் சேர்ப்பானும், மெய்வகையா னான்காகும் விதித்த பொரு ளெனக்கொண்டே, யிவ்வியல்பு சைவநெறி யல்லவற்றுக் கில்லையென, உய்வகையாற் பொருள்சிவனென் றருளாலே யுணர்ந்திருந்தார்" (சாக் - புரா). என்பனவாதி அருட்பெருந் திருவாக்குக்களி னுண்மையினையும் ஓர்கிலார். சமண புத்தம் முதலிய புறச் சமயங்களை நிராகரித்துத் திருநீற்றினை வளர்த்த திருஞான சம்பந்த நாயனார், மாணிக்கவாசக சுவாமிகள், (பரபக்கமெடுத்துக் கூறி நிராகரித்துச் சைவ சித்தாந்தஞ்செய்த) அருணந்திசிவம் முதலிய பரம ஆசாரியர்களுக்கெல்லாம் இழுக்குப்படப் பேசி ஒழுகிவரும் இவர்கள் கன்மபலன் இருந்தவாறு தான் என்னே? கற்புடைநாயகி தனது நாயகனோடொப்பப் பிறனொருவனை எண்ணுவது கற்புக் கிழுக்காவதாம். அதுபோல எல்லாவுயிர்களுக்கும் உயிாக்குயிராயிருந்து அருளும் பரமபதியாகிய சிவனையும், அவனை ஐயந்திரிபற உய்வகை மண்ணுளோருக் குதவிக் காட்டிய ஒப்புயர்வற்ற எந்தம் பரமாசாரியர்க