|
மையால் தீமை எவையும் பிள்ளையாரைச் சாரா; அமணர் அழிவாக்கப்படுவர் என்ற உறுதிகொண்டாராதலின் உடன்பட்டனர் என்பது குறிக்கத் திருந்து என்றார்; அரசுகள் பாண்டிநாட்டின் தீமை போக்குதலை விருப்பாதவரல்லர்; சமணரை அஞ்சினாருமல்லர்; திருவருளில் துணிபு இல்லாதவருமல்லர்; ஆனால் பிள்ளையார்பாற் கொண்ட தந்தையன்பே முன்னர் இசையாது தடுத்தமைக்குக் காரணம்; மன்னவன் முன்னர் அமணர் அநேகராய்ப் பிள்ளையாரைச் சூழ்ந்து கதறிப் பதறியபோது அது கண்ட மங்கையர்க்கரசியார் தாய் தலையன்பினாலே அச்சங்கொண்டமையும், "பாலனீங்கிவ னென்றுநீ பரிவெய்திடேல்...ஈனர்கட்கு எளியேனலேன் றிரு வாலவாயர னிற்கவே" என்று பிள்ளையார் அவரைத் தேற்றியமையும் இங்குக் கருதற்பாலன. இவைபற்றி முன் அரசுகள் புராணத்திலுரைத்தவையும் பார்க்க. |
தாமும் அவர்முன்னே எழுந்தருள அமைந்தபோது - இதுவரை தொடர்ந்து யாத்திரை செய்து போந்த நியமத்தின்படி முன்செல்ல அமைந்தனர். "முன்னணைந்த" (2475) என்றவிடத்தும், முன்னரும் (2426 - 2437), உரைத்தவை பார்க்க. |
புரமெரித்தார் திருமகனார் - பால்கொடுத்த தன்மையாற் பிள்ளையார் ஈண்டும், பிறாண்டும் மகனார் என்றுபசரிக்கப்பெற்றனர்; 1966-ம் முன் உரைத்தவையும் பார்க்க. |
"அப்பர்...இருப்பீர்" என்று...இறைஞ்சித் தவிர்ப்ப - இவ்வாறு அரசுகள் தம்முடன் அணைதலைப் பிள்ளையார் தடுத்தமைபற்றி முன் 1554ல் உரைத்தவை பார்க்க. (III- பக்கம் 481); கரகமலங் குவித்திறைஞ்சி - "தந்தைசொன் மிக்க மந்திரமில்லை" என்றிருப்பவும் தந்தையன்புபூண்ட அரசுகளின் செயலைத் தவிர்த்து மொழிதலின் இறைஞ்சிக் கூறினார்; தமது கூற்றுத் திருவருட்கூற்றா யிருப்பதனை அறிந்தாரேனும் நல் ஒழுக்க நிலை பெறும் மரபுகாட்டினார் என்க. |
தொழுது அரிதாங் கருத்தின் நேர்ந்தார் - தொழுது - எதிர்தொழுது; விடைபெறுந் தன்மையிற் றொழுது என்றலுமாம்; "விடைகொடுத்து" என மேல் இக்கருத்துப்படக் கூறுதல் காண்க; அரிதாங் கருத்து - பிள்ளையாரது பிரிவாற்றுதல் அருமையாகிய திருவுள்ளம்; அரிதாங்கருத்து - வேதம் வளர்க்கவும் சைவம் விளக்குதற்கும் பிள்ளையார் அவதரித்த உள்ளுறை என்றலுமாம். நேர்தல் - முன்னர்ப் பிள்ளையார் செல்வதற்குடன்பாடு செய்தருளினர். இங்குத் தாம் அவரைப் பிரிந்திருப்பதற்கும் அவர் தனி செல்வதற்கும் இசைந்தருளினர். |
கருத்து நேர்ந்தார் - என்பதும் பாடம். |
617 |
வேறு |
2516.வேதம்வளர்க் கவுஞ்சைவம் விளக்கு தற்கும் |
வேதவனத் தருமணியை மீண்டும் புக்குப் |
பாதமுறப் பணிந்தெழுந்து பாடிப் போற்றிப் |
பரசியருள் பெற்றுவிடை கொண்டு போந்து |
மாதவத்து வாகீசர் மறாத வண்ணம் |
வணங்கியருள் செய்துவிடை கொடுத்து மன்னுங் |
காதலினா லருமையுறக் கலந்து நீங்கிக் |
கதிர்ச்சிவிகை மருங்கணைந்தார் காழி நாடர். |
618 |