பக்கம் எண் :

770திருஞானசம்பந்தநாயனார் புராணம்

நினைத்தல்; அம் - தொழிற்பெயர் விகுதி; - (3) கடுத்து - கோபித்து; முப்புரந் துகளாகவே சரந்தொடுத்ததுவு ம் என்க; உடுத்ததுவும் முதலியவைஅகத்தியான்பள்ளியான் செய்கை என்க. செய்கை அவாய் நிலையான் வந்தது; மேல்வரும் மூன்று பாட்டுக்களிலும் 8-வது பாட்டிலும் இவ்வாறே கொள்க; - (4) அகத்தியர் இறைவரது திருமணக்கோலங் காண இங்கு வழிபட அவர்க்கு அருளிய சரித வரலாறு குறிக்க. இமவான்மகள் ஒரு பாகம் ஏய்ந்ததுவும் அகத்தியான்பள்ளி யிறைவரது செயல்; 6-வது பாட்டிலும் இவ்வாறே கண்டுகொள்க; - (5) கூர்த்தது - கூர்மை உடையது; - (6) புரிந்ததுவும் - நினைந்ததுவும்; - (7) நீதி - நூல் விதி; - (8) செறுத்தல் - அழித்தல்; இப்பாட்டில் இறைவர்செய்த வீரங்கள்பற்றிப் போற்றப்பட்டது; - (9) சிரம் - நகுதலை; - (10) செத்துவராடையினார் - சிவந்த துவர் தோய்த்த உடையுடையார்; புத்தர்; - (11) ஆலும் - அசையும்; நல்ல - சார்ந்தாரைக் காத்து நன்மை செய்யும்; நல்ல சூலப்படையான் என்க.
     தலவிசேடம் :- அகத்தியான்பள்ளி - காவிரித் தென்கரை 126வது - பதி - இறைவரது மணவாளக்கோலங் காணும்பொருட்டு அகத்தியர் தங்கித் தவஞ்செய்த பதியாதலின் இப்பெயர் பெற்றது. பதிகம் 4, 6 பாட்டுக்களில் இக்குறிப்புக் காண்க; அகத்தியர் பூசித்த தலம்; அவரது திருவுருவம் கோயிலில் அமைத்து வழிபடப் பெறுகின்றது; சுவாமி - அகத்தீசுவரர்; அம்மை - பாகம்பிரியா நாயகி; தீர்த்தம் - அக்கினிதீர்த்தம்; பதிகம் 1.
     இது திருமறைக்காட்டினின்றும் தெற்கே கோடிக்கரை வழியில் 2 நாழிகையளவில் உள்ளது; அகத்தியான்பள்ளி நிலயத்தினின்றும் மேற்கே மணல் வழியில் அரை நாழிகையளவில் உள்ளது.
     திருக்கோடிக்குழகர் - இப்பதிகம் கிடைத்திலது! புராணத்தினுள் பதிகம் அருளியதுபற்றிக் கூறப்படவுமில்லை; 2520 பார்க்க.
 
2521.கண்ணார்ந்த திருநுதலார் மகிழ்ந்தகடிக் குளமிறைஞ்சி,
எண்ணார்ந்த திருவிடும்பா வனமேத்தி யெழுந்தருளி,
மண்ணார்ந்த பதிபிறவு மகிழ்தருமன் பால்வணங்கிப்
பண்ணார்ந்த தமிழ்பாடிப் பரவியே செல்கின்றார்,
623
2522.திருவுசாத் தானத்துத் தேவர்பிரான் கழல்பணிந்து
மருவியசெந் தமிழ்ப்பதிக மால்போற்றும் படிபாடி
யிருவினையும் பற்றறுப்பா ரெண்ணிறந்த தொண்டருடன்
பெருகுவிருப் பினராகிப் பிறபதியும் பணிந்தணைவார்,
624
2523.கருங்கழிவே லைப்பாலைக் கழிநெய்தல் கடந்தருளித்
திருந்தியசீர்ப் புனனாட்டுத் தென்மேல்பாற் றிசைநோக்கி
மருங்குமிடை தடஞ்சாலி மாடுசெறி குலைத்தெங்கு
நெருங்கிவளர் கமுகுடுத்த நிறைமருதவழிச்சென்றார்.
625
     2521. (இ-ள்.) கண்ணார்ந்த...இறைஞ்சி - கண்பொருந்திய திருநுதலையுடைய இறைவர் மகிழ்ந்து வீற்றிருக்கும் திருக்கடிக்குளம் என்னும் பதியினை வணங்கி; எண்ணார்ந்த...எழுந்தருளி - மக்களது எண்ணம் நிறைந்த திருஇடும்பாவனம் என்னும் பதியினையும் ஏத்திச் சென்றருளி; மண்ஆர்ந்த......வணங்கி - இம்மண் உலகத்