பக்கம் எண் :

திருத்தொண்டர் புராணமும் - உரையும்773

     நெருங்கிவளர் கமுகு - கமுகுகள் அடர்த்தியாய்ப் பயிரிடப்படும் தன்மை குறிக்க நெருங்கிவளர் என்றார்.
     உடுத்த நிறைமருதம் - நெல் - தென்னை - கமுகு இவற்றைச் சுற்றிலும் கொண்டிருத்தல், இவற்றை அந்த மருதநிலம் ஆடையாக உடுத்ததுபோலத் தோற்றமளிக்கும் என்பது. மருதம் - வயல்களையுடைய நாடும், நாட்டைச் சார்ந்த பகுதிகளும்; சோழ நாட்டின் கடல்சார்ந்த பகுதியாகிய நெய்தலை முன்சொன்னார்; அடுத்துக் காடுசார்ந்த முல்லை சாரும் பகுதியை மேல் (2526) கூறுதல் காண்க; இவ்வாறு பிள்ளையார் திருவாலவாய்க்குச் சென்றருளும் புராண வரலாற்றின் வழியே நாட்டின் இயல்புகளையும், வளங்களையும் உடன்கூறிக் காட்டிச்செல்லும் ஆசிரியரது கவிநலம் காண்க; நிறை - வழிச்செலவிற்கும் மக்களின் நலங்கட்கும் உரிய வசதிகள் நிறைந்த; இதனை வரும் பாட்டில் விரிக்கின்றார்.
625
திருக்கடிஇருளம்
திருச்சிற்றம்பலம் பண் - நட்டராகம் - 2-ம் திருமுறை
பொடிகொள் மேனிவெண் ணூலினர் தோலினர் புலியுரி யதளாடை
கொடிகொ ளேற்றினர் மணிகிணி னெனவரு குரைகழல் சிலம்பார்க்கக்
கடிகொள் பூம்பொழில் சூழ்தரு கடிக்குளத் துறையுங்கற் பகத்தைத்தம்
முடிகள் சாய்த்தடி வீழ்தரு மடியரை முன்வினை மூடாவே.
(1)
தனம லிபுகழ் தயங்குபூந் தராயவர் மன்னனற் சம்பந்தன்
மனம லிபுகழ் வண்டமிழ் மாலைகண் மாலதாய் மகிழ்வோடுங்
கனம லிகட லோதம்வந் துலவிய கடிக்குளத் தாமர்வானை
யினம லிந்திசை பாடவல் லார்கள்போ யிறைவனோ டுறைவாரே.
(11)
திருச்சிற்றம்பலம்
     பதிகக் குறிப்பு :- கடித்தளத்துறையும் கற்பகத்தை வணங்குவோரை வினை மூடா; அவனை ஏத்துவார் குணமுடையவர்.
     பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) பொடி - திருநீறு; கிணின் - ஒலிக் குறிப்பு; கற்பகம் - இப்பதியின் சுவாமி பெயர்; பாட்டுத்தோறும் வைத்துப் போற்றப்பட்டது காண்க; இத்தலம் இவ்விறைவர் பெயராலே வழங்கப்படுவது தலவிசேடம் பார்க்க முன்வினை - பழவினை; - (2) விண்களார் - தேவர்; மண்களார் - நிலவுலகத்தவர்; ஆர்தர - நிறைய; பொருந்த; - (3) நற்கரி - பின் இறைவரது சார்பு பெறுதலால் நல் என்றார்; - (4) தொத்து - கொத்து; பார் இடத்தவர் - நிலஉலகோர்; சீர்கொள் செல்வங்கள் ஏத்த சிறப்புப்பொருந்திய இறைமைக் குணங்களைத் துதிக்க; இறைமைக் குணங்கள் - ஐசுவரியங்கள்; சர்வைசுவர்யசம்பன்ன; சம்பு என்பது சுருதி; - (5) மதியொடு - தழனாகம் - சூடிய முடியினன் என்க; அலர்ந்தன மலர் - பலகொண்டு - அலர்ந்தனவாகிய பலவகை மலர்களையும் கொண்டு; கரும்பு கார்மலி கொடிமிடை - கரும்புகள் நிழல்செய்யும் நிறைந்த கொடிகள்போல நெருங்கிய; கரும்பும் கெடிகளும் மிடை என்றுரைத்தலுமாம்; விதி - நல்விதி; - (6) சடைக்கு - சடையின்கண்; சடையில் - இலங்கிய என்க; - (7) கோலத்த கொடிகுலவு - என்க. கோலத்த - கோலத்தையுடைய; கோலம் - பலநிறம் - அளவு - சித்திரம் முதலிய அழகியல்கள்; மாடங்களின் குழாமும் பல பொய்கைகளும் நிறைந்த கடிக்குளம் என்றும், புள்ளினம் அன்னங்கள் பூவை